Saturday, April 29, 2006

ஒரு உழைப்பாளி பேசுகிறேன்.




முதலாளிகளெல்லாம்...
மூணாவது காட்சிக்கு!
உழைப்பாளிகளோ...
வீட்டுக் காவலுக்கு!
இன்று
உழைப்பாளர் தினவிடுமுறையாம்!


வருத்தங்களோடு ஒரு
உழைப்பாளி பேசுகின்றேன்!

நீங்கள்
பரிதாபப்பட்டு வீசுகின்ற
பிரியாணியை விட - எங்கள்
வியர்வையில் தோன்றிய
சோத்துக்கஞ்சிக்கு...
சுவை அதிகம்தான்!

ஆகவே
தயவுசெய்து எதையும்
தானமாய் தராதீர்கள்!
தன்மானத்தோடு வாழுகிறோம்!


இன்று எந்த
முதலாளிகளும்
அட்சயப்பாத்திரத்தை..
அனுப்பவேண்டாம்!

எங்கள்
வியர்வைக்கு யாரும்..
விழா எடுக்க வேண்டாம்!

மூட்டை சுமந்து சுமந்து
இந்திய ஜனநாயகத்தைவிட
கூனிப்போய்விட்ட எங்கள்...
முதுகுக்கு யாரும்
முத்தம் கொடுக்க வேண்டாம்!

வெயிலில் கறுத்து
புண்பட்ட தோலுக்கு...
பொன்னாடை வீச வேண்டாம்!

நீங்கள்
உடுத்து கிழித்த வேட்டியை...
போனஸ் எனச்சொல்லி
பிச்சையிடவும் வேண்டாம்!

எதுவுமே வேண்டாம்
ஒரே ஒரு
வேண்டுகோள்!

தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"



-ரசிகவ் ஞானியார்

18 comments:

Prasanna said...

//என் குழந்தை பசி தாங்காது அய்யா//
எவ்வளவு நிதர்சனமான உண்மை இந்த கவிதையில் பதியபட்டிருக்கிறது. இந்த பதிவை உழைப்பாளிகளும் பார்க்கணும், அரசியல்வாதிகளும் படிக்கணும். இன்னும் பாவமா தான் இருக்கு வேலைய விட்டுட்டு கொடி பிடிக்கும் பாமரனை பார்த்தால்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Prasanna said...
//என் குழந்தை பசி தாங்காது அய்யா//
எவ்வளவு நிதர்சனமான உண்மை இந்த கவிதையில் பதியபட்டிருக்கிறது. இந்த பதிவை உழைப்பாளிகளும் பார்க்கணும், அரசியல்வாதிகளும் படிக்கணும். இன்னும் பாவமா தான் இருக்கு வேலைய விட்டுட்டு கொடி பிடிக்கும் பாமரனை பார்த்தால். //


உணர்ந்து எழுதிய விமர்சனத்திற்கு நன்றி பிரசன்னா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Sittukuruvi said...
beautiful //



நன்றி சிட்டுக்குருவி. ..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Neruppu Siva said...
சிந்திக்கவேண்டிய கருத்து+கவிதை...

ஆனால் உங்களை பார்த்தால், ஏஸீ அறைக்குள் அமர்ந்து குசாலாக கிருக்கி தள்ளுவதாக தோன்றுகிறது :))

Just for kidding. Dont take it serious.

இது போன்ற கொடுமைகளை ஒழித்து கட்ட ஏதேனும் ஒரு திட்டம் உள்ளதா? பொதுவாக கவிஞர்கள் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்வதில்லை என்று எண்ணுவதுண்டு //



நன்றி நெருப்பு சிவா..

அதற்காக மூட்டைதூக்கிக்கொண்டுதான் இக்கவிதையை எழுத வேண்டுமா..?

சமுதாயத்தின் மீதான கவலை அனைவருக்கும் கணடிப்பாய் வேண்டும். என்னால் முடிந்தவரை நான் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றேன் பொரளாதார ரீதியாகவும் மற்றும் இந்த இணையத்தின் மூலமாகவும்.


www.vithaigal.blogspot.com
வைரமுத்துவிடம் ஒரு கேள்வி :

கவிதையால் தேசத்தை காப்பாற்ற முடியுமா?

பதில்:

கவிதை என்பது மருந்துச்சீட்டுதான். மருந்துச்சீட்டைப் பார்த்துக்கொண்டிருந்தால் நோய் குணமாகாது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Neruppu Siva said...
நன்றி நண்பரே!

// அதற்காக மூட்டைதூக்கிக்கொண்டுதான் இக்கவிதையை எழுத வேண்டுமா..?
//

தேவை இல்லை. ஆனால் இந்த சாராம்சத்தை ஆக்கபூர்வமான திட்டங்குளடன் இணைத்து, வாசகர்களுக்கு விழிப்புணர்வும் உதவுவதற்கான ஊக்கமும் ஊட்டினால் நன்றாக இருக்கும். என் கருத்து மட்டுமே - அனைத்து கவிஞர்களுக்கும்! உங்கள் ரசிகர்கள் இந்த நெருப்பை ஊத ஒடி வந்து கொண்டிருக்கிறார்கள். ESCAPE

நெருப்பு //

நன்றி நண்பா..

ம் தாங்கள் கூறியதை பரிசீலிப்போம். தாங்களும் கைகார்த்துக் கொள்ளுங்கள்..

Radha N said...

// தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!" //

பெத்தபாசம்ன்னு சொல்றது.... இதுதாங்க!!

இல்லையென்றவனுக்கு இரக்கப்படலாம்
ஆனால் இனாமளிக்கக்கூடாது!
இடமளிக்கலாம்.....வேலைகொடுக்க
மனமிருந்தால்!
தர்மம் என்ற பெயரில் அவன்
தன்மானத்தினை பிடுங்கிக்கொள்ளுதல்....
ஒருவகை திருட்டுதானே!

வேலையை கொடு அவனிடமிருக்கும்
உழைப்பை எடு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...


இல்லையென்றவனுக்கு இரக்கப்படலாம்
ஆனால் இனாமளிக்கக்கூடாது!
இடமளிக்கலாம்.....வேலைகொடுக்க
மனமிருந்தால்!
தர்மம் என்ற பெயரில் அவன்
தன்மானத்தினை பிடுங்கிக்கொள்ளுதல்....
ஒருவகை திருட்டுதானே!

வேலையை கொடு அவனிடமிருக்கும்
உழைப்பை எடு //




நன்றி நாகு..உழைப்பாளிகள் பற்றி

நல்ல சிந்தனை

Unknown said...

வழக்கம் போல, 'நச்' கவிதை.

எப்படியும் 'நமது அமீரக' உழைப்பாளிகளுக்கு விடுமுறை இல்லையே நண்பா!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// துபாய்வாசி said...
வழக்கம் போல, 'நச்' கவிதை.

எப்படியும் 'நமது அமீரக' உழைப்பாளிகளுக்கு விடுமுறை இல்லையே நண்பா! //



ம் நன்றி துபாய்வாசி..

ம் சேக்குகிட்ட பேசியிருக்கிறேன்..எப்படியும் விடுமுறை கிடைச்சுருன்னு நினைக்கிறேன்..

Anonymous said...

superb ..the poem on may day...is seriously gr888..hats off to u ..
monisha

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Anonymous said...
superb ..the poem on may day...is seriously gr888..hats off to u ..
monisha //



நன்றி மோனிஷா..

Sivabalan said...

Excellent கவிதை!!

// தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!" // But these lines really disturb me a lot. This is 100% true for daily wage labors. (That too, the laborers in Building industry)

After I read this கவிதை, I thought I should not read. Because, I feel Heavy.

Very Good கவிதை!!

Prasanna said...

சமீபத்தில் படித்தது:
எழுத்தின் வெற்றி உள்ளடக்கத்தில் இல்லை; உள்ள உந்துதலில் உள்ளது. அப்படி பார்த்தா உள்ள உந்துதல் உங்க கவிதைல நிறைய கிடைக்கும். ரங் தே பசந்தி படம் பார்த்தா மாதிரி :)))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Prasanna said...
சமீபத்தில் படித்தது:
எழுத்தின் வெற்றி உள்ளடக்கத்தில் இல்லை; உள்ள உந்துதலில் உள்ளது. அப்படி பார்த்தா உள்ள உந்துதல் உங்க கவிதைல நிறைய கிடைக்கும். ரங் தே பசந்தி படம் பார்த்தா மாதிரி :))))) //



ம் நன்றி பிரசன்னா.. உங்களது விமர்சனமும் என்னை மேலும் நல்ல கவிதைகள் படைப்பதற்கு உந்தும்..

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல கவிதை.....
அனைவரின் விமர்சனத்திற்கும் பதில் எழுதி உள்ளிர் நல்ல பழக்கம்...
நன்றி....
தொடர்ந்து எழுதவும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Saran.C said...
நல்ல கவிதை.....
அனைவரின் விமர்சனத்திற்கும் பதில் எழுதி உள்ளிர் நல்ல பழக்கம்...
நன்றி....
தொடர்ந்து எழுதவும். //

நன்றி சரண்.. இந்த அவசர உலகத்தில் நீங்கள் எல்லாம் பொறுமையாய் வந்து படித்துவிட்டு ஊக்கம் கொடுப்பதற்காக விமர்சித்துவிட்டும் செல்கின்றீர்கள். ஆகவேதான் அனைவருக்கும் பதில் தருகின்றேன்..நன்றி..

Muthu said...

//தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"//

ம்..உருக்கமான முத்தாய்ப்பு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// முத்து ( தமிழினி) said...
//தயவுசெய்து இன்று...
விடுமுறை விட்டுவிடாதீர்கள்!
"என் குழந்தை
பசி தாங்காதுங்கய்யா..!"//

ம்..உருக்கமான முத்தாய்ப்பு //

நன்றி முத்து
நட்சத்திரமாக கலக்குறீங்க வாழ்த்துக்கள்..

தேன் கூடு