Tuesday, April 25, 2006

தயவுசெய்து அரசியல் பேசாதீர்கள்





இன்று எழுதுவதற்கு எந்த விசயமும் இல்லை. எதைப்பற்றி எழுதலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன். நேற்று படித்த பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி எழுதிய மனித உரிமைகள் என்ற புத்தகத்தில் கைது நடவடிக்கைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று முடிவெடுத்தேன்.

நம்நாட்டில் அதிகாரத்துஷ்பிரயோகம் என்பது காவல்துறையில் அதிகமாக இருக்கின்றது.

தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக குற்றவாளியையும் - பொதுமக்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள். அதனைப்பற்றி ஒரு நீண்ட பதிவே போடலாம்.

நான் அதனைப்பற்றி விவாதிக்கவில்லை. கைது செய்யப்படுதலின் நடைமுறைகள் - விளக்கங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் இல்லை .

அதனால கொஞ்சம் அதனைப்பற்றியும் தெரிந்து கொள்ளுங்களேன். ஏனென்றால் நீங்களும் ஒரு நாள் கைது செய்யப்படலாம். அதற்காக உங்களைக் குற்றவாளியாக்கவில்லைங்க..நம்ம நாட்டுல குற்றவாளிகள் மட்டுமா கைது செய்யப்படுகிறார்கள்..?


கைது..?

காவல்துறை அல்லது அதிகாரம் பெற்ற உரிய அலுவலர் குற்றம்சாட்டப்பட்டவரின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையே கைது ஆகும்


கைது செய்பவரை காவலர்கள் தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்.(கைது செய்யப்படும் இடத்திலிருந்து நீதி மன்றத்திற்கு பயணப்படும் தூரத்தைக் கழித்து ஆஜர் செய்யப்படும்நேரம் கணக்கிடப்படும்)

வாரண்ட் ( பிடி ஆணை )

குற்றம் செய்துள்ளதாக கருதப்படும் நபரைப் பிடித்து ( நீதிமன்றம் முன் ) ஆஜர் செய்ய காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றத்தால் இடப்படும் எழுத்து வடிவிலான ஆணையே வாரண்ட் ( பிடி ஆணை ) எனப்படும்

செல்லுபடியாகும் வாரண்ட்

1. எழுத்து வடிவில் இருக்க வேண்டும்
2. நீதிபதியின் கையெழுத்து இருக்க வேண்டும்
3. நீதிமன்ற முத்திரை இருக்க வேண்டும்
4. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் - முகவரி - குற்றங்களின் விவரங்கள் - தன்மை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

இவைகளில் ஏதேனும் தவறியிருந்தால் அந்த வாரண்ட் செல்லுபடியாகாது. ( Illegal Arrest )

ஆனால் வாரண்ட் இல்லாமலும் கைது செய்யலாம். காவல்துறையின் நேரடி பார்வைக்குட்பட்ட அல்லது அவர்களால் அறியப்படும் குற்றம் செய்பவரை வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம்.

நேரடியாக அறியப்படாத குற்றங்களான ( கொலை - கொள்ளை - கற்பழிப்பு - திருட்டு - நாட்டுக்கெதிரான சதி -) ஆகியவற்றிற்கு வாரண்ட் இல்லாமல் கைது செய்யமுடியாது.

ஜாமீனில் விடத்தக்க வாரண்ட் ( Bailable Warrant )
ஜாமீனில் விடமுடியாத வாரண்ட் ( Non-Bailable Warrant )



ஜாமீனில் விடத்தக்க வாரண்ட்

கைது செய்யப்படுபவர் தக்க பிணையம் ( Sureties) மூலம் நீதிமன்றம் அழைக்கும்போது ஆஜராக உறுதியளித்தால் நீதிமன்றம் அவர்களை வெளியில் இருக்க விட்டுவிடலாம்.

ஜாமீனில் விடமுடியாத வாரண்ட்

குற்றவாளி எனக் கருதப்படும் நபர் பயங்கரமான குற்றங்கள் செய்தவராக இருப்பின் அவரால் சமுதாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என நீதிமன்றம் கருதும்பொழுது அவர்களுக்கு ஜாமீனில் விடமுடியாத வாரண்ட் பிறப்பிக்கின்றது

கைது செய்யப்படும்பொழுது

1. கைது செய்யப்படும் நபருக்கு காரணங்கள் அளிக்கப்பட வேண்டும் ( அடிப்படை உரிமைகள் பிரிவு 20 )
2. வாரண்ட்டை கைது செய்யப்படுபவர் படிப்பதற்றும் பார்ப்பதற்கும் உரிமை உண்டு ( அடிப்படை உரிமைகள் பிரிவு 75 )
3. தான் விரும்பும் வழக்கறிஞரை கைது செய்யப்படுபவர் சந்தித்து கலந்தாலோசிக்க உரிமை உண்டு ( அடிப்படை உரிமை பிரிவு 22 )
4. கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியாக வேண்டும்.

கைது செய்யப்படுபவர் பலாத்காரம் செய்யப்பட்டாலொழிய கை விலங்கிடுவது தவிர்க்கப்படவேண்டும் . தப்பி விடுதல் - பயங்கர குற்றவாளி - நம்பத்தகாதவர் - குற்றவாளி தற்கொலை செய்து விடுவாரோ என்ற பயமிருந்தாலும் கைவிலங்கிடலாம்.

சோதனை

கைது செய்யப்பட்டபிறகே அந்நபரை சோதனை செய்யவேண்டும். கைப்பற்றப்படும் பொருளுக்கு உரிய ரசீது அளித்துப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது போலிஸாரின் கடமை.

( போக்குவரத்து காவலர்கள் சாலையில் பைக்கில் லைசென்ஸ் இருக்கிறதா என சோதனை செய்துவிட்டு இல்லை என்றவுடன் பணத்தை கேட்கிறார்கள்; . அப்படி நம்மிடம் கைப்பற்றியதை அவர்கள் நிரந்தரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ஆனர்ல ரசீதுதான் தரமாட்டேங்கிறாங்கப்பா.. )


பெண்கள் சோதனையிடப்படும்பொழுது அவர்களின் கற்பு - தன்மானம் - கௌரவத்திற்கு கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும். பெண் சோதனையாளர்களுக்கு கண்டிப்பாக பெண்களே சோதனையிடவேண்டும்.

( சமீபத்தில் ஒரு பார்க்கில் ஒரு பெண்ணை இன்னொரு பெண் காவலரே அவளை அவமானப்படுத்தி அடித்து இழுத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறதா..? )

ஆண்களின் மரியாதை மற்றும் கௌரவமும் கண்டிப்பாக காப்பாற்றப்படவேண்டும்
( இந்தப்புகைப்படத்திற்கும் இந்த வரிகளுக்கும் சம்பந்தமில்லை :) )

பிணை (பெயில்)

கைது செய்யப்பட்டவரை விடுவித்து விசாரணை முடியும்வரை வெளியில் இருக்க அனுமதி வழங்குவதே பிணை (பெயில்) எனப்படும்.

பெயில் விண்ணப்பத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். பெயில் மறுக்கப்பட்டால் மறுக்கப்பட்ட காரணத்தை கண்டிப்பாக நீதிமன்றம் வழங்க வேண்டும். அதனை எதிர்த்து மேல் முறையீடும் செய்யலாம்.

கைது நடவடிக்கைகளைப்பற்றி மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வருகின்ற அரசியல் வாதிகளை அணுகலாம்..




- ரசிகவ் ஞானியார்

11 comments:

Prasanna said...

இந்த ஏப்ரல் நீங்க பதிவு செய்ய ஆரம்பித்து 1 வருடம் ஆகுதா??? வாழ்த்துக்கள். கலக்குறீங்க தலைவா!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அட நான் கூட இதுபற்றி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்..

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி நண்பா..

Bharaniru_balraj said...

இந்த பதிவுக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமிருக்கா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Bharaniru_balraj said...
இந்த பதிவுக்கும் போட்டோவுக்கும் சம்பந்தமிருக்கா? //




உங்கள் விமர்சனத்திற்கு இந்தப் பதிவின் தலைப்புதான் பதில்

Anonymous said...

--ஏனென்றால் நீங்களும் ஒரு நாள் கைது செய்யப்படலாம். ---

sanakara chary neeyabahathuku vanthar

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
--ஏனென்றால் நீங்களும் ஒரு நாள் கைது செய்யப்படலாம். ---//

ம் வாழ்த்துக்கள்..உங்களையும் துணைக்கு கூட்டிட்டு போயிருவேன்ல..

ப்ரியன் said...

ரசிகவ் அவசியமான தகவல் தந்தீர் நன்றி

லதா said...

// வாரண்ட் ( பிடி ஆணை ) //

pd - preventive detention தானே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//லதா said...
// வாரண்ட் ( பிடி ஆணை ) //

pd - preventive detention தானே? //



அனுபவசாலிகள் சொன்னா சரியாகத்தான் இருக்கும்

Radha N said...

மன்னித்தல் மனிதப்பண்பு. மறதி மனி தையல்பு.

கருணாநிதியே மறந்தாலும் (மன்னித்தாரா என்பது தெரியாது!) நீங்க, மறக்க விடமா ங்கப் போல?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகு said...
மன்னித்தல் மனிதப்பண்பு. மறதி மனி தையல்பு.

கருணாநிதியே மறந்தாலும் (மன்னித்தாரா என்பது தெரியாது!) நீங்க, மறக்க விடமா ங்கப் போல? //



அதான் முதல்லையே சொல்லிட்டேனே நாகு..

அரசியலுக்கும் இந்தப்பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு..

இது கைது பற்றிய பொது விழிப்புணர்வு ..அவ்வளவுதான்..

தேன் கூடு