Thursday, April 20, 2006

விஷப் பார்வை



பக்கத்து வீட்டுக்காரன்
பசிக்கு உதவியிருக்கலாம்!

வயதானவரின் கைபிடித்து
வீதி கடக்க வைத்திருக்கலாம்!

குருட்டுப் பிச்சைக்காரனின் தட்டில்
காசு போட்டுவிட்டு
கடந்து சென்றிருக்கலாம்!

பேருந்தில் இருக்கையை
கர்பிணிப்பெண்ணிற்காக ..
காலி செய்து கொடுத்திருக்கலாம்!

எவருக்கேனும்
இரத்தம் கொடுத்து
உயிர்காக்க..
உதவியிருக்கலாம்!

எவரும் மிதித்துவிடக்கூடாதென
பாதையின் முட்களை..
பக்குவமாய் ஒதுக்கியிருக்கலாம்!

பனியில் நடுங்கும்
பூனையைக் கண்டு
பச்சாதாபப்பட்டிருக்கலாம்!

காகத்தின் பசிக்காக
சோற்றுப்பருக்கைகளை
வீட்டு மாடியில்..
வீசியிருக்கலாம்!

பூகம்பம் - சுனாமி - புயல் - வெள்ளம்
நிவாரண நிதி கூட
நீ அனுப்பியிருக்கலாம்!


இப்படி
எத்தனையோ இருக்கலாம்
இருக்கலாம்தான்...

இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!


- ரசிகவ் ஞானியார்

6 comments:

பொன்ஸ்~~Poorna said...

//இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!//

:( :( :(

என்று திருந்தப் போகிறோம் நாம்

பொன்ஸ்~~Poorna said...

//இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!//

:( :( :(

என்று திருந்தப் போகிறோம் நாம்??!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
//இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே!//

:( :( :(

என்று திருந்தப் போகிறோம் நாம் //



வரும் தலைமுறையினர்களாவது மதவெறியில்லாமல் வளர வேண்டும்

நம் கைகளில் இருக்கின்றது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//jansi said...
Kavithai arumai...

"Sandai ennamo kavikkum , pachaikkum, vellaikkum ennara pothum sindappadum kuruthiyin niram ellorukkum sigappu thaan "
enbathai eppothu unargiromo appothu mathangal maraindu manitham malarum enru namblam illia??!!!!!!!! //

எல்லோரையும் மனிதமதம் என்ற ஒரே மதமாக்குவோம்..

நன்றி ஜான்ஸி

Anonymous said...

எனக்கு புரியலை

//இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே//

மாற்று மதத்தவன் என்றால் எப்படி
மதக்கலவரமாகும்?
ஐயோ புரியலை ஞானி
:-(

நேசமுடன்..
நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நித்தியா said...
எனக்கு புரியலை

//இருப்பினும்
மதக்கலவரத்தில் நீ
மாற்று மதத்தவன்தானே//

மாற்று மதத்தவன் என்றால் எப்படி
மதக்கலவரமாகும்?
ஐயோ புரியலை ஞானி
:-(

நேசமுடன்..
நித்தியா //



என்னதான் நீ மனிதநேயம் கொண்டவனாக இருந்தாலும் அந்த மனிதநேயத்தை எல்லாம் மதக்கலவரத்தில் யாரும் பார்க்க மாட்டார்கள். நான் ஒரு மதம் நீ வேறு மதம் என்ற பார்வைதான் அவர்களுக்கு இருக்கும். அப்படிப்பட்ட விஷப்பார்வை உடைய உலகமாகத்தான் இன்னைற சூழல் உள்ளது என்பதுதான் விளக்கம்.


நெருங்கிப் பழகிய
நண்பர்கலெல்லாம்,

பொட்டு வைத்ததால்
வெட்டப்பட்டும்...
குல்லா அணிந்ததால்
கொல்லப்பட்டும்...
சிலுவை அணிந்ததால்
கொளுத்தப்பட்டும்...
மதக்கலவரத்தில்
மரித்துப்போனார்கள்!

பொட்டிலும்...
குல்லாவிலும்...
சிலுவையிலும்தான்..
மனிதநேயம் ஊசலாடியும்...
மனிதஉள்ளம் ஊனமாகியும்...



அன்புடன்

ரசிகவ் ஞானியார்

தேன் கூடு