Saturday, April 15, 2006

தப்பித்துவிடு தமிழே!




தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு

ஒளவை, அகத்தியன்
புராணங்களுக்கிடையே
பிறந்து வந்தவளே!

இன்றைய
ஒளவைகளோ உன்னை
தமிழகம்விட்டு துரத்துவதற்கு
தீப்பந்தம் எடுக்கிறார்கள!

அகத்தியர்கள்
கைகளிலோ
ஆங்கில அகராதி!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு !


"கல்தோன்றா மண்தோன்றா "
காலத்து
முன்தோன்றிய மூத்தகுடியே!
இஙகே உனது
இளையகுடிகள்
"கல்தோண்டி மன்தோண்டி" உன்னை
புதைக்க வருகிறார்கள்

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

"நெற்றிக்கண்ணைத்
திறப்பினும்
குற்றம் குற்றமே "
எனச் சொன்ன
நக்கீரர்கள் எல்லாம்
ஆங்கிலப்பத்திரிக்கையின்
ஆசிரியர்களாகிவிட்டார்கள்!


பாண்டியமன்னர்களோ
ஆல்பம் கேட்டு
ஆடிககொண்டிருக்கிறார்கள்!

கண்ணகி வடிவத்திலாவது உன்னை
காணலாமென்றால்
அதையும் தகர்த்துவிட்டார்கள்!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!


மோனை என்றொரு
பானையை வைத்து...
எதுகையை உடைத்து
விறகாக்கி...
தமிழே உன்னை
தூக்கிபபோட்டார்கள் தமிழர்கள்!

இதோ
தயாராகிறது
ஆங்கிலப்பிரியாணி!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

வள்ளுவனோ
கடல்மீது நிற்கின்றான்
வள்ளுவத்தமிழோ
கடலுக்கடியில்!

தப்பித்துவிடு தமிழே
தயவுசெய்து தப்பித்துவிடு!

காதலிகளுக்கு முன்னால் நீ
பேசப்பட்டால்...
காதலி கோபப்படுகிறாளாம் !

ஆம்! தமிழே நீ
மாணவர்களுக்கெல்லாம் ஓர்
மானப்பிரச்சனையாகிவிட்டாய்!

தலைவன் தலைவியோடு
ஓடிப்போனதைப்போல நீயும்
ஓடிப்போய்விடு தமிழே !


என்னவோ உன்னை
ஞாபகத்தில் வைத்திருப்பது
தமிழாசிரியர்கள் மட்டும்தான்!
சீக்கிரம் போ!

அவர்களும்
ஷேகஸ்பியரோடு
சிநேகம் வைப்பதற்குள்
சீக்கிரம் போய் தஞ்சமடைந்துவிடு தமிழே!

-ரசிகவ் ஞானியார்

16 comments:

Anonymous said...

அருமை ! நல்ல கவிதை நண்பரே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
அருமை ! நல்ல கவிதை நண்பரே. //



நன்றி நண்பா

Anonymous said...

ellathilum kalapadam iruku. athu namma thaai mozhiyaiyum vittuvaikavillai. evvalavu vethainaikuriyathu. neengal ithai nanraaga kavithaiyil vadithuviteergal. nallairukku. kavithaikku nantri.ippadiyavathu thamizh vaazhatum.
(thamizh uruvil eppadi ezhuthuvathena enaku theriayhu aagave mannigavum)

enRenRum-anbudan.BALA said...

நிலவு நண்பரே,
கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் !

Geetha Sambasivam said...

நிஜமாவே தமிழ் தப்பிச்சுடுச்சுனு நினைக்கிறேன். கவிதை நல்லா இருக்கு.நான் சொல்ற தப்பிச்சுடுச்சு அர்த்தம் புரியுதா? உங்களைப் போன்றவர்களின் முயற்சியால் தமிழ் தப்பி விட்டது அழிவிலிருந்து.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// enRenRum-anbudan.BALA said...
நிலவு நண்பரே,
கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள் ! //

நன்றி பாலா


//Geetha Sambasivam said...
நிஜமாவே தமிழ் தப்பிச்சுடுச்சுனு நினைக்கிறேன். கவிதை நல்லா இருக்கு.நான் சொல்ற தப்பிச்சுடுச்சு அர்த்தம் புரியுதா? உங்களைப் போன்றவர்களின் முயற்சியால் தமிழ் தப்பி விட்டது அழிவிலிருந்து. //


என்னைப் போன்றவர்களின் முயற்சியினால் என்பதை திருத்திக்கொள்ளுங்கள் கீதா
நம்மைப் போன்றவர்களின் முயற்சியினால் என்று

நன்றி

சிங். செயகுமார். said...

கவிதை நன்று நண்பரே
தமிழர் மேல் இவ்வளவு கோபமா
நிச்சயம் நாம் இருக்கும்வரையில்
தமிழுக்கு தலைவலி வராது!

Sivabalan said...

// தமிழே நீ
மாணவர்களுக்கெல்லாம் ஓர்
மானப்பிரச்சனையாகிவிட்டாய் //

It is true.

கவிதை!!! கவிதை!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சிங். செயகுமார். said...
கவிதை நன்று நண்பரே
தமிழர் மேல் இவ்வளவு கோபமா
நிச்சயம் நாம் இருக்கும்வரையில்
தமிழுக்கு தலைவலி வராது! //

கோபமெல்லாம் இல்லை ஜெயக்குமார்

ஆதங்கம்தான்..

நம்பிக்கையிருக்கிறது
"மெல்ல தமிழ் இனி வாழும்" நம்மைப் போன்ற வலைப்பதிவர்களால்

Anonymous said...

தமில் நாட்டுல டமில் பேசக்கூடாது,


தமில் தப்பிக்கவேண்டும்,


டமில் வேண்டவே வேண்டாம்.

அதனை புதைக்க வேண்டும்

இனி தேவை உண்மையான தமிழ் மட்டுமே.....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இனி தேவை உண்மையான தமிழ் மட்டுமே..... //

கண்டிப்பாக டமில் ஒழிய வேண்டும் தமிழ் வாழவேண்டும்
நன்றி

Karthik Jayanth said...

//இன்றைய
ஒளவைகளோ உன்னை
தமிழகம்விட்டு துரத்துவதற்கு
தீப்பந்தம் எடுக்கிறார்கள

//தமிழே நீ
மாணவர்களுக்கெல்லாம் ஓர்
மானப்பிரச்சனையாகிவிட்டாய்!

எனக்கு என்னமோ இது 2 much ஆக தெரியுது

//கண்ணகி வடிவத்திலாவது உன்னை
காணலாமென்றால்
அதையும் தகர்த்துவிட்டார்கள்!

கண்ணகி என்ன செய்தாங்க தமிழுக்கு.. நிஜமா தெரியாமதான் கேக்குறேன்.

//மோனை என்றொரு
பானையை வைத்து...
எதுகையை உடைத்து
விறகாக்கி...

கவிஞர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று அறிகிறேன்.

//காதலிகளுக்கு முன்னால் நீ
பேசப்பட்டால்...
காதலி கோபப்படுகிறாளாம் !

சொந்த அனுபவமா ?

Floraipuyal said...

செல்லத் தமிழினி சாகாது இனிமேலே
எல்லாம் தமிழென்றே ஆகுமே – நல்லோனே
வெல்லத் தமிழ்பாட வந்தோமே நாமெல்லாம்
மெல்லத் தமிழ்வாழும் மன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எனக்கு என்னமோ இது 2 much ஆக தெரியுது//

அது தங்களைச் சுற்றி நடந்த அனுபவங்களைப் பொறுத்தது நண்பா..

//கண்ணகி என்ன செய்தாங்க தமிழுக்கு.. நிஜமா தெரியாமதான் கேக்குறேன்//

கண்ணகி தமிழுக்காக எதுவும் செய்யவில்லை. தமிழ் கலாச்சாரத்தின் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறாள் அல்லவா

//கவிஞர்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று அறிகிறேன்.//

கண்டிப்பா :)


//சொந்த அனுபவமா ? //

சொந்த அனுபவமெல்லாம் இல்லை கார்த்திக். சுற்றி நடந்த அனுபவம்தான்

நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//FloraiPuyal said...
செல்லத் தமிழினி சாகாது இனிமேலே
எல்லாம் தமிழென்றே ஆகுமே – நல்லோனே
வெல்லத் தமிழ்பாட வந்தோமே நாமெல்லாம்
மெல்லத் தமிழ்வாழும் மன் //

நன்றி..தமிழ் புயல் வீசட்டும் உலகமெங்கும்..

உங்கள் நண்பன்(சரா) said...

நண்பா நல்ல பதிவு தொடரவும், நன்றி

தேன் கூடு