நாம் தினமும் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்துகொண்டு லொட்டு லொட்டு என்று தட்டிக்கொண்டும் சும்மாயிருக்கின் மவுஸை பிடித்து விளையாடிக்கொண்டும் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டும் இருக்கின்றோம்.
நம்முடைய விரல்களின் அசைவுகளை கொஞ்சம் கவனியுங்கள். நாள் முழுவதும் ஒரே மாதிரியான அசைவுகள்தான். கைகளை தட்டச்சுப்பலகையின் அருகே வைத்துக்கொண்டு விரல்கள் மட்டும் தேடி தேடி எழுத்துக்களை தட்டச்சு செய்யும். சிலர் கைகள் முழுவதையும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொண்டு சென்று தட்டச்சு செய்வார்கள்.
இந்த தொடர் அசைவுகள் மணிக்கட்டின் தசைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்மானத்தைக் கொடுக்கின்றது.
இந்த அசைவுகள் நமக்கு சாதாரணமாய்த் தெரிந்தாலும் ஆனால் அதன் பிண்ணனியில் உள்ள பயங்கரத்தைக் கவனியுங்களேன்
இந்த அறுவைச்சிகிச்சையினைக் கவனிங்கள்.. இது ஏதோ பெரிய விபத்துக்களின் மூலம் நடந்ததல்ல..தினமும் தொடர்ந்து தட்டச்சு செய்ததனால் வந்த வினை இது.
இந்த அறுவைச்சிகிச்சைகக்கு உங்களுடைய மணிக்கட்டும் மாட்டவேண்டுமா?
இந்த அறிகுறியிலிருந்து விடுபட கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் இந்த கீழ்கண்ட பயிற்சியை தினமும் 10 அல்லது 15 வினாடிகள் ஒவ்வொரு பயிற்சிக்கும் செலவழித்து கையை காப்பாற்றுங்கள். உங்கள் குடும்பம் தங்களின் மீது வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றுங்கள்.
இந்தப்பயிற்சியை தினமும் 3 தடவைகள் செய்தால் போதும். இதற்காக தனியாகவெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.
சாப்பாடு நேரம் அல்லது நண்பர்களோடு அரட்டை அடிக்கின்ற நேரம் அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது அல்லது காரில் டிராபிக்கில் மாட்டியிருக்கும் பொழுது என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தப்பயிற்சியை செய்யலாம்.
மணிக்கணக்கில் வேலை பார்த்து ...
மணிக்கட்டை இழக்காதீர்கள்!
மணி நேர பயிற்சிக்கு...
மனம் ஒதுக்குங்களேன் நண்பர்களே!
- ரசிகவ் ஞானியார்
15 comments:
அன்பு ஞானி,
அறிவுரைக்கு நன்றி. நானும் ஒத்தை விரலால்தான் கொத்துகிறேன். இனி குறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
// ஞானவெட்டியான் said...
அன்பு ஞானி,
அறிவுரைக்கு நன்றி. நானும் ஒத்தை விரலால்தான் கொத்துகிறேன். இனி குறைத்துக்கொள்ள வேண்டியதுதான். //
நன்றி ஞானவெட்டியான் அவர்களே.
நல்ல தகவல் தந்தீர்கள் ஒரு வாரமாகவே சுண்டுவிரல் மறத்து போன மாதிரி.. இதனால்த்தானோ? இனி கவனமுடன் இருக்கவேண்டும்
நன்றி ரசிகவ் :)
//meena said...
நல்ல தகவல் தந்தீர்கள் ஒரு வாரமாகவே சுண்டுவிரல் மறத்து போன மாதிரி.. இதனால்த்தானோ? இனி கவனமுடன் இருக்கவேண்டும்
நன்றி ரசிகவ் :) //
நன்றி மீனா.. தாங்களும் தெரிந்தவர்களுக்கெல்லாம் இந்த தகவலை சொல்லுங்கள்
Thanks ....
Really important one!!!
நல்ல தகவல் நண்பரே,
என்னோட நண்பருக்கும் மணிக்கட்டு மரத்துப் போன மாதிரி இருக்க, மாத்திரையும் wrist band-ம் தான் கைகொடுத்திச்சு. கணிணி உபயோகத்தால் பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.
-புவனா
மணிக்கட்டின் முக்கியத்துவத்தை "மணி" க்கு உணர்த்தியதற்கு மிக்க நன்றி ரசிகவ்.
//கணிணி உபயோகத்தால் பலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது.
-புவனா
Mani said...
மணிக்கட்டின் முக்கியத்துவத்தை "மணி" க்கு உணர்த்தியதற்கு மிக்க நன்றி ரசிகவ்//
புவனா மற்றும் மணிக்கு
தகவல்களை நல்லபுள்ளையாய் கேட்டதற்கு நன்றி
தங்களது தகவளுக்கு நன்றி.
சொடக்கு என்று ஒன்று எடுப்பார்கள், அது கூட பயிற்சி என்று தான் நினைக்கின்றேன்.
நன்றி,நல்ல தகவல் தந்தீர்கள்
நன்றி,நல்ல தகவல் தந்தீர்கள்
// நாகு said...
தங்களது தகவளுக்கு நன்றி.
Kavitha said...
நன்றி,நல்ல தகவல் தந்தீர்கள் //
நன்றி நாகு மற்றும் கவிதாவுக்கு.
அட இதுகூடத் தெரியுமா
உங்களுக்கு??
முந்தி
பிள்ளையும் கிள்ளி
நல்லாத் தோட்டிலும்
ஆட்டுவீங்க போல..
:-) .-) :-)
முறாய்காதீங்க ;-)
தகவலுக்கு நன்றி
நேசமுடன்..
-நித்தியா
//அட இதுகூடத் தெரியுமா
உங்களுக்கு??
முந்தி
பிள்ளையும் கிள்ளி
நல்லாத் தோட்டிலும்
ஆட்டுவீங்க போல..
:-) .-) :-)//
என்ன நித்தியா நக்கலா..?
எதைச் சொல்ல வர்றீங்க புரியலையே..?
கணினியை கண்டாலே.. கை நடுங்குதுப்பா...?
:(
Post a Comment