Tuesday, April 18, 2006

கொடுத்து விடு




கொடுத்து விடு
தோழியே!

திருப்பிக் கொடுத்துவிடு!

கேட்பவன் இறைஞ்சுவதுதான்
உலக நியதி
இங்கோ
கொடுத்தவன் இறைஞ்சுகிறேன்

திருப்பிக்கொடுத்துவிடு தோழியே!

நான் கொடுத்ததை
மறப்பது
நல்லமரபல்ல!
வேண்டாமென விட்டுவிட - நானொன்றும்
நிலப்பிரபு அல்ல.

நேரிடையாய் கேட்கும்
நாகரீகம் எனக்கில்லை

தரவேண்டும் என்ற
கடமையும் உனக்கில்லை

உன்
தோழியிடம் சொல்லி தூதனுப்பவா..?
இல்லை
துண்டுச் சீட்டில் ஞாபகப்படுத்தவா?
என்ன செய்வதோ?

தவித்துக்கொண்டிருக்கின்றேனடி
என் திருமணத்திற்கு முன்னாவது
தந்துவிடுவாயா தோழியே?

நீ என்னிடம் வாங்கிய
கடனை

- ரசிகவ் ஞானியார்

12 comments:

Mani said...

என்ன கடன்னு சொல்லவே இல்லயே. எனக்கு என்னவோ கொஞ்சம் விவகாரமான விசயமோனு தோனுது.

கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் நம் நண்பன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mani said...
என்ன கடன்னு சொல்லவே இல்லயே. எனக்கு என்னவோ கொஞ்சம் விவகாரமான விசயமோனு தோனுது.

கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினான் நம் நண்பன். //



அட கடன் என்றால் பணக்கடனைத்தான்பா சொன்னேன்..

விடுங்கப்பா.. அப்புறம் அழுதுறுவேன்..

Anonymous said...

இதற்கு தான் இத்தனை பீடிகையா..
அட! போங்கப்பா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//யாழிசைச்செல்வன் said...
இதற்கு தான் இத்தனை பீடிகையா..
அட! போங்கப்பா.. //



வேற என்ன நீங்க எதிர்பார்த்தீங்க..

உங்க பெயர் உச்சரிப்பதற்கு இனிமையாக இருக்கிறது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//jansi said...
Kadan vaangi kalyanam panna poreengala.........kalyanathukku munnadi thiruppi kudukka sollirukeenga.......... //


புரிஞ்சிக்கிட்டா சரிதான்.. :)

Anonymous said...

//உங்க பெயர் உச்சரிப்பதற்கு இனிமையாக இருக்கிறது//
நன்றி தோழா!
:)

Mani said...

அடைவது மட்டுமே ஆனந்தம் என
எண்ணும் மனிதனுக்கு,
இழப்பதில் உள்ள இன்பத்தை அறிமுகப்படுத்துவதுதான் காதல்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்.

அவள் தோழி எனில் எதற்காக கவிதை எழுதி கடனை திருப்பிக்கேட்க வேண்டும். சாதரணமாக கேட்டால் போதாதா? அவளிடம் கொடுத்த கடன் கூட உங்களிடம் கவிதையை தூண்டுதோ?

அவளிடம் வேண்டுவது கடனையா? காதலையா?

கடன் தான் வேண்டும் என்றால் கவிதையை (கூடவே காதலையும்) விட்டுவிடுங்கள்.
காதல் தான் வேண்டும் என்றால் கடனை விட்டுவிடுங்கள் (ஆனால் கனவுகள் இலவசம்).

ஒருவேளை காதல் தான் அந்த கடனோ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Mani said...
அடைவது மட்டுமே ஆனந்தம் என
எண்ணும் மனிதனுக்கு,
இழப்பதில் உள்ள இன்பத்தை அறிமுகப்படுத்துவதுதான் காதல்.

- கவிக்கோ அப்துல் ரகுமான்.//


அட ராசா நெஞசைத் தொட்டிட்டியே ராசா..


இதயத்தைக் கடன் கொடுத்தவள் வட்டியோடு சீக்கிரம் திருப்பி தரப்போகின்றாள். இந்தக் கடனில் மட்டும்தான் வட்டிகள் வரவேற்கப்படுகின்றது.. அட கவிதைப்பா..

நியுட்டன் மூன்றாம் விதி

தயவுசெய்து
கடன் மட்டும் கேட்டுவிடாதே நண்பா
எனக்கு உன்
நட்பு வேண்டும்

- ரசிகவ் ஞானியார்

Anonymous said...

சில கடன்கள் திருப்பிக்குடுத்தால்
தொடர்பு விட்டுப்போகும் என்று
உங்களுக்குத் தெரியாதா?
அதுதான் அவங்க தாராமல் இருக்காங்க போல
:-) :-)


நேசமுடன்..
நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சில கடன்கள் திருப்பிக்குடுத்தால்
தொடர்பு விட்டுப்போகும் என்று
உங்களுக்குத் தெரியாதா?//



அப்படின்னா நீங்க எனக்கு கடன் தாங்க..

பொன்ஸ்~~Poorna said...

ஞானியார்,
கடன் அன்பை முறிக்கும்னு சொல்றாங்க.. நிறைய கடன் கேக்காதீங்க ;)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
ஞானியார்,
கடன் அன்பை முறிக்கும்னு சொல்றாங்க.. நிறைய கடன் கேக்காதீங்க ;) //


கடன் நட்பை வளர்க்கும்னு மாத்திட்டாப் போச்சு..

தேன் கூடு