Saturday, April 01, 2006
பிணக்கடன்
சமூக பிதற்றலுக்குப் பயந்து
சாவு வீட்டுக்கு ..
சம்பிரதாயத்திற்காய் சென்றேன்.
பூமியில் வாழுகின்ற
ஒப்பந்தத்தை முடித்துவிட்டு
சொர்க்கமோ? நரகமோ?
புலம் பெயர்கிறது அது
எத்துணை மதிப்புகள்
இருந்தாலுமென்ன..?
இருக்கும்வரை அவர்
இறந்துவிட்டால் அது
தெளிக்கப்படும்..
வாசனைத்திரவியங்களில்
நாற்றத்தை உணர்கின்றேன்.
திருமணத்தில் தெளிக்கப்படுகின்ற
பன்னீர்தான் என்றாலும்
தெளிக்கப்படும் இடம்தான்
வாசனையை தீர்மானிக்கிறது!
தெருவில் தள்ளிவிட்டு
அவமானப்படுத்திய..
கடைசிமகன்
காலைப்பிடித்து அழுதுகொண்டிருக்க
தனிக்குடித்தனம் சென்றுவிட்ட
தலைப்பிள்ளையோ..
பாடைகட்டும்
பரபரப்பில் சுற்றிக்கொண்டிருக்க..
அதிகம்
துக்கப்படுவதாய் காட்டிக்கொள்ள..
மார்பில் அடித்துக்கொண்டு
அலரும் சொந்தங்கள்..
என்னைப்போல்
சம்பிரதாயத்திற்காய்
வந்தவர்கள் யார்யாரோ
திணறி திணறி
முகத்தை சோகமாய்
மாற்றிக்கொள்ள முயல...
சடங்குகள் முடிந்து
பாடை தூக்கப்படும்நேரத்தில்
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க
வேடிக்கைகளையெல்லாம்
வெறித்துப்பார்த்துவிட்டு
கண்ணீரோடு நானும்
கலைந்து சென்றேன்.
என்னிடம்
பிணம் வாங்கிய கடனை
பிறர் தருவாருண்டோ..? என்ற
அதிகப்படியான வேதனையோடு..
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//மாண்ஸ்டர் said...
i too felt the same thing wat u felt ..
//
எத்துணை மதிப்புகள்
இருந்தாலுமென்ன..?
இருக்கும்வரை அவர்
இறந்துவிட்டால் அது//
nice usage of words.. //
நன்றி மாண்ஸ்டர்
கண்டிப்பாய் ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் பற்றிய சிந்தனை வேண்டும்
மரண வீட்டை அப்படியே ஞாபகப்படுத்திட்டீங்களே ரசிகவ் சார்
ஆனா எல்லாருடைய வீட்டிலும் பன்னீர் தெளிக்க மாட்டாங்களே
- பிணம்
//Anonymous said...
மரண வீட்டை அப்படியே ஞாபகப்படுத்திட்டீங்களே ரசிகவ் சார்
ஆனா எல்லாருடைய வீட்டிலும் பன்னீர் தெளிக்க மாட்டாங்களே
- பிணம் //
பிணத்திற்கு நன்றி ( அட அடுத்த கவிதைக்கு தலைப்பு மாதிரி இருக்கு )
பெரும்பாலான வீடுகளில் மரணச்சம்பவத்திற்கு பன்னீர் தெளிப்பது வழக்கம்
ஒருவேளை கலாச்சாரம் இடங்களைப் பொறுத்து வேறுபடலாம்..
//திருமணத்தில் தெளிக்கப்படுகின்ற
பன்னீர்தான் என்றாலும்
தெளிக்கப்படும் இடம்தான்
வாசனையை தீர்மானிக்கிறது!
//
எங்கள் வழக்கத்திலும் பன்னீர் தெளிக்க மாட்டார்கள்.. இருந்தாலும் வாசனை பற்றிய இந்த வரிகள் நிச்சயம் உண்மை..
//என்னைப்போல்
சம்பிரதாயத்திற்காய்
வந்தவர்கள் யார்யாரோ
திணறி திணறி
முகத்தை சோகமாய்
மாற்றிக்கொள்ள முயல...
//
இதுவும் உண்மை.. இப்போதெல்லாம் இறப்புக்கு வருபவர்கள் ஒரு சம்பிரதாயத்திற்குத் தான் வருகிறார்கள். மிகவும் நெருங்கிய சொந்தமாக இருந்தால் மட்டுமே அது விதி விலக்காகிறது..
//இதுவும் உண்மை.. இப்போதெல்லாம் இறப்புக்கு வருபவர்கள் ஒரு சம்பிரதாயத்திற்குத் தான் வருகிறார்கள். மிகவும் நெருங்கிய சொந்தமாக இருந்தால் மட்டுமே அது விதி விலக்காகிறது.. //
இந்த அவசர உலகில் மரணத்தின் பாதிப்புகள் யாருக்குமே கிடையாது. ஒப்புக்கு சென்றுவிட்டு வருகிறார்கள்..
நன்றி பொன்ஸ்..
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க
நல்ல வரிகள் !!
First Time Comment
Good and i realized my personal experience which is very similar to this.
Though i am not good at Poetry and
Tamil, i like this kind of touching incidents and scences.
Will invite this kind of thing in future
Applause and Regards
Krishna
//Will invite this kind of thing in future
Applause and Regards
Krishna //
உங்கள் பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணா
//செல்வேந்திரன் said...
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க
நல்ல வரிகள் !! //
நன்றி செல்வேந்திரா..இந்த வரிகள் எனக்கும் பிடித்தவை..
Wow!!! Excellent!!!
Keep up good work!!!
//Sivabalan said...
Wow!!! Excellent!!!
Keep up good work!!!//
நன்றி சிவபாலன்
Post a Comment