என் பாவம் கடவுளுக்குப் பிடித்திருக்கிறது
நான் பாவப்பட்டவனா?
புனிதப்பட்டவனா?
புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே
உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்
பாவத்தின் சம்பளம்
என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஒவ்வொரு குளியலும்
என்னை புனிதமாக்கிவிடும்
மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது
என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே
என் பாவம் கடவுளுக்குப்
பிடித்திருக்கிறது
- ரசிகவ் ஞானியார்
6 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள்!போன வருஷத்தில் ரொம்ப விடுமுறை எடுத்துட்டிங்க..இந்த வருஷம் நிறைய எழுதி ஜமாய்ங்க.
((மெல்ல ஊடுருவும் பேய்களோடும் சிலநேரம் போராடவேண்டியதிருக்கின்றது)).எல்லாருக்கும் பொருந்தும்.
வெகு நாட்களுக்குப் பிறகு .. உண்மை சொல்லும் ஒரு கவிதை.. நன்று.. வாழ்த்துகள் ஞானி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கு இன்னும் பல வெற்றிகளை அள்ளித் தர எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.
என்றும் அன்புடன்,
சிநேகிதி.
A nice one after a long time . Happy new year Rasikow :-)
//உனக்குப் பாவம்
எனக்குப் புனிதம்//
யார் முடிவெடுப்பது எது புனிதம் எது பாவம் என்று? விடை தெரியாத கேள்வி....
அன்புடன் அருணா
இந்த ஆண்டின் முதல் கவிதையா
மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது
என்னை பாவம் செய்யவிடாமல்
பாவம் செய்துவிடாதே
:)-
அருமையான வரிகள் நண்பரே
Deep lines...
புனிதங்களின் பாவத்தோற்றம்
உன்
உணர்வுப்பிழையே
மெல்ல ஊடுருவும்
பேய்களோடும் சிலநேரம்
போராடவேண்டியதிருக்கின்றது
Hats Off to these wordings.
Post a Comment