Sunday, September 28, 2008

பெங்களுரு புகைப்படக் கண்காட்சி

பெங்களுரில் பாரதீய வித்யாபவனில் கடந்த 3 நாட்களாக 26-27-28 குழும நண்பர் இலட்சுமணன் மற்றும் அவருடைய நண்பர்களான பிவி - அருள் ஜெகதீஷ் - சுரேந்தர் ஆகியோர்களின் புகைப்படக் கண்காட்சி திலீப் என்ற நண்பரின் உறுதுணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சாப்ட்வேர் துறைகளில் இருந்தாலும் இந்த இளைஞர்களுக்கு எப்படி இந்த அளவுக்கு புகைப்பட ஆர்வம் இருக்கின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கின்றது. கைதேர்ந்த புகைப்படக் கலைஞரை ஒத்த புகைப்படங்களை இவர்களகது கேமிராக்கள் படம்பிடித்துள்ளன்.

புகைப்படங்களுக்காக ஒவ்வொரு இடமாய் தேடிச் சென்று இவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றது. நம் கண்களுக்கு வெறும் காட்சியாய் தெரிபவைகள் இவர்களுக்கு கலைகளாகத் தெரிகின்றது.

இந்த இளைஞர்களின் முயற்சிகள் வெற்றி பெற பாராட்டுக்கள். அவர்களது புகைப்படங்களுள் சில:

படம் 1



விழித்திரையின் அடியில்
குழுமியிருக்கும் நீர்த்துளிகள்
இந்தப் புன்னகையை
போலியாக்குகின்றது


படம் 2




இந்தப் புன்னகைக்கு
குடிசையும் தெரியாது
கோபுரமும் தெரியாது


படம் 3



பட்டாம்பூச்சிகளின்
பாதுகாவலில்
பாம்புகள் மேய்ந்துகொண்டிருக்கின்றது


படம் 4



மாட மாளிகைகளில்
வசித்தாலும்
இறுதிப் பயணத்தில்
ஒரு செங்கலைக் கூட
கொண்டு செல்ல முடியாது


படம் 5



எதிர்கொள்ளாதவரை
பிரச்சனைகள்
பிரச்சனைகளாகவே இருக்கின்றன


-ரசிகவ் ஞானியார்

5 comments:

யாரோ said...

நல்ல முயற்சி ...வாழ்த்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்..
நானும் ஒரு வலைதொகுப்பு உருவாக்கியுள்ளேன்...பாருங்களேன்

http://valaikkulmazhai.wordpress.காம்

கார்த்தி

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் அருமை.

பகிர்தலுக்கு நன்றி.

ரகசிய சிநேகிதி said...

படக் கவிதைகள் அருமை..

3வது படத்திற்கான பொருளை அறிய விழைகிறேன்..ஞானி..

நன்றி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ரகசிய சிநேகிதி said...

படக் கவிதைகள் அருமை..

3வது படத்திற்கான பொருளை அறிய விழைகிறேன்..ஞானி..

நன்றி..//


நமக்கு தெரிகின்ற முகம் நிஜமல்ல

ரகசிய சிநேகிதி said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி.

தேன் கூடு