Saturday, April 05, 2008
வலி உணரும் தோல்கள்
தவித்த வாய்க்கு ...
தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்!
தாகம் தீருமுன்...
தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ?
நாங்கள்
தண்ணீர் கேட்டால்
இரத்தம் தருகின்ற...
உங்கள் பெருந்தன்மைதான் என்னே!
நாற்காலிகள்
நகர்ந்துவிடக்கூடாதென்றா
அருவியின் வெள்ளத்தில்...
அணை கட்ட முயல்கின்றீர்கள்?
நீங்கள் தண்ணீர் சேமிக்க…
நாங்கள் அணை கட்டிக்கொடுத்தோம்!
நாங்கள் கண்ணீர் சேமிக்க…
நீங்கள் அணை கட்டுகின்றீர்கள்!
தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்
உங்களிடம்…
அனுமதி கேட்டால்,
எங்கள்
தலைமுறைகள்...
பட்டுப்போய்விடும்!
கடந்து சென்ற காலத்தையும்…
கடந்து வந்த நீரையும்…
திருப்பி எடுக்க
எவனும் பிறக்கவில்லை!
யாருடைய மொழி சிறந்தது
என்பது
இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால்
வலி உணரும் தோல்கள்தான்
இருவருக்கும்!
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
காலத்திற்கேற்ற கவி, உணர்வார்களா?
வாவ்வ்!!
அருமையான கவிதை ரசிகவ்...
//தலைமுடியை வெட்டுவதற்கெல்லாம்
உங்களிடம்…
அனுமதி கேட்டால்,
எங்கள்
தலைமுறைகள்...
பட்டுப்போய்விடும்!///
அப்படிப்போடுங்க...என்னப்பா நெனைச்சுட்டு இருக்காங்க??
///ஆனால்
வலி உணரும் தோல்கள்தான்
இருவருக்கும்!///
இதெல்லாம் எளிதில் புரிய வைக்க முடியுமா??...ஹூம்ம்ம்...:(
//கானா பிரபா said...
காலத்திற்கேற்ற கவி, உணர்வார்களா?
//
உணர வைக்க வேண்டும்..
நன்றி கானா பிரபா
//malligai said...
வாவ்வ்!!
அருமையான கவிதை ரசிகவ்...
அப்படிப்போடுங்க...என்னப்பா நெனைச்சுட்டு இருக்காங்க??
இதெல்லாம் எளிதில் புரிய வைக்க முடியுமா??...ஹூம்ம்ம்...:(
//
நன்றி வாணி..
மொழி மத இன வெறிகள் காட்டுமிராண்டியாக்கி விடுகின்றது மனிதர்களை
மிக நன்றாக உணர்வாக வந்திருக்கிறது !
// கோவி.கண்ணன் said...
மிக நன்றாக உணர்வாக வந்திருக்கிறது !
//
நன்றி கண்ணன்
நிகழ்கால பிரச்சனையைப் பேசும்
இந்தக் கவிதையும் அழகு
அதன் வலியைச் சொல்ல துடிக்கும்
மொழியும் அழகு...தொடருங்கள்....
கவிதை அருமை நிலவு நண்பண்.
//meha said...
நிகழ்கால பிரச்சனையைப் பேசும்
இந்தக் கவிதையும் அழகு
அதன் வலியைச் சொல்ல துடிக்கும்
மொழியும் அழகு...தொடருங்கள்....
//
சிக்கனமாக அழகிய வாழ்த்துக்கு நன்றி meha
//சுல்தான் said...
கவிதை அருமை நிலவு நண்பண்.//
நன்றி சுல்தான் அய்யா
உணர்வுபூர்வமான கவிதை.
அற்புதமான படைப்பு.
வாழ்த்துக்கள் நண்பரே.,
Post a Comment