Monday, February 25, 2008

கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது




அன்று பார்த்தது போலவே..
இன்றும் இருப்பாயோ?

பரிட்சை தோல்விக்கே
பயந்தாயே..?
இப்பொழுது
சின்ன சின்ன தோல்விகளை ...
எப்படித் தாங்கிக்கொள்கிறாய்?

யதேச்சையாய்
கடைவீதியில்….
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?

கல்லூரி இருக்கை மீது
தாளம் போடும் பழக்கத்தை...
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?

அன்றுபோலவே இன்றும்
மழைத்துளிக்குள் ...
முகம்புதைத்து விளையாடுகிறாயா?

ஒரு இலையுதிர் காலத்தில்
சருகு மிதித்து ...
சந்தோஷப்பட்ட அந்த
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?

இப்படி
எங்கு இருந்தேனும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்..
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை...
பிரிந்து போன காதலர்கள்!

ஆயுள் முழுவதும்...
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?


- ரசிகவ் ஞானியார்

31 comments:

சின்னப் பையன் said...

கலக்கிட்டீங்க... எல்லாம் அனுபவம்தானே....:-)

நான் வர அரை மணி நேரம் தாமதமாகுமென்று கூட்டமில்லாமல் வரும் பேருந்துகளையும் தவற விடுவாயே....:-(

Thamiz Priyan said...

அருமை :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ச்சின்னப் பையன் said...
கலக்கிட்டீங்க... எல்லாம் அனுபவம்தானே....:-)

நான் வர அரை மணி நேரம் தாமதமாகுமென்று கூட்டமில்லாமல் வரும் பேருந்துகளையும் தவற விடுவாயே....:-(
//


அட நீங்களும் சும்மா பின்னுறீங்க..உங்களுக்குள்ளும் எங்கோ காதல் ஒளிந்து கொண்டு நோட்டம் பார்க்கின்றது..அள்ளி விடுங்கள் நினைவுகளை

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தமிழ் பிரியன் said...
அருமை :)
//

நன்றி நண்பா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ச்சின்னப் பையன் said...
நான் வர அரை மணி நேரம் தாமதமாகுமென்று கூட்டமில்லாமல் வரும் பேருந்துகளையும் தவற விடுவாயே....:-(//

எனக்காக எல்லாப் பேருந்துகளையும் தவறவிட்ட நீ
இப்பொழுது
என்னையும் தவற விட்டுவிட்டாயடி?

:)

தோழி said...

Excellent. Kathalla ellarum karai kandavangala irukkeengapa.. very good and decent one. keep it up

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anuradha said...

Excellent. Kathalla ellarum karai kandavangala irukkeengapa.. very good and decent one. keep it up//

காதலில் கரை காணாதோர் எவருமிலர்...

முற்றும் துறந்த ஞானி கூட காதலை சுவைத்துவிட்டுதான் ஞானியாகியிருப்பான்....

ஆகவே காதலில் மட்டும் யாரும் யாருக்கும்p உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல.

விமர்சனத்திற்னு நன்றி அனுராதா...

நாடோடி இலக்கியன் said...

அருமை!
அசத்தல்!!
இன்னும் நிறைய எழுதுங்கள்.

Praharika said...

Hi Gnaniyar,

Really Superb!!!

-Praharika..

Anonymous said...

அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?

yes.. success aanaa athan punithathil konjam karaipidikkalam

tholviyil athan punitham kaakapadukirathu ..2 nenjankalal

athanaal thaan kaathal vaazhkirathu..
kavithai...kavithai.. neeruuttai..
rasikow..ungalai ooril vaithu paarka thavarivittaeno.

Unknown said...

நல்ல கவிதை ரசிகவ், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

அன்புடன் புகாரி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நாடோடி இலக்கியன் said...
அருமை!
அசத்தல்!!
இன்னும் நிறைய எழுதுங்கள்.
//

உற்சாகமான விமர்சனத்திற்கு நன்றி இலக்கியன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Praharika said...
Hi Gnaniyar,

Really Superb!!!

-Praharika..
//

தொடர்ந்து தருகின்ற விமர்சனத்திற்கு நன்றி நண்பா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?

yes.. success aanaa athan punithathil konjam karaipidikkalam

tholviyil athan punitham kaakapadukirathu ..2 nenjankalal

athanaal thaan kaathal vaazhkirathu..
kavithai...kavithai.. neeruuttai..
rasikow..ungalai ooril vaithu paarka thavarivittaeno.
//

விமர்சனத்திற்கு நன்றி..முதல்ல நீங்க யாருன்னு சொல்லவேயில்லையே...

Anonymous said...

See HERE

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Doum said...
See HERE
//

? ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Doum said...
See HERE
//

? ?

Anonymous said...

super...mudinthaal www.shiblypoems.blogspot.com il enathu kavithaihalai padittu vimarsanam seyyavum

Anonymous said...

Neysithavarae life partner aanall.. iruvarum sernthu kaadhal ninaivugalai asaipodu-vathenpathu ....ellarukkum kidaikatha oru varam!!

Anonymous said...

neysithavarae vazhkai thunaiyaga kidatha pin.. iruvarum sernthu kaadhal ninaivugalai asaipodu vathenpathu .... ellarukkum vaikatha oru varam...!!!!

Aruna said...

//ஆயுள் முழுவதும்...
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை...
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?//

தொலை தூரத்து நிலவு எப்போதும் கைக்கெட்டாதா? என்ற ஏக்கம் எப்போதும் ஒரு விதமான எதிர்பார்ப்பதையும் நினைவுகளை அசை போடுவதையும் தவிர்க்கவே முடியாதோ?
அன்புடன் அருணா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//shibly said...
super...mudinthaal www.shiblypoems.blogspot.com il enathu kavithaihalai padittu vimarsanam seyyavum
//

நன்றி ..கண்டிப்பாக தங்களது வலைப்பதிவு படித்துவிட்டு விமர்சிக்கின்றேன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//karl marxi said...
Neysithavarae life partner aanall.. iruvarum sernthu kaadhal ninaivugalai asaipodu-vathenpathu ....ellarukkum kidaikatha oru varam!!
//

ம் இதுவும் வரம்தான்..ஆனால் இதனை விடவும் அதனில் ஆழம் அதிகமாக இருக்கும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தொலை தூரத்து நிலவு எப்போதும் கைக்கெட்டாதா? என்ற ஏக்கம் எப்போதும் ஒரு விதமான எதிர்பார்ப்பதையும் நினைவுகளை அசை போடுவதையும் தவிர்க்கவே முடியாதோ?
அன்புடன் அருணா//

கையில் சேர்ந்துவிட்ட பொருளைப்பற்றி கவலைப்படமாட்டோம்...சேராத பொருளுக்குத்தான் ஏக்கம் இருக்கும். அதுபோல நிறைவேறாத காதலில் ஏக்கங்கள் இரண்டு பக்கமும் அதிகமாகவே இருக்கும்

த. சீனிவாசன் said...

உங்கள் பதிவுகள் RSS Readerல் தெரிவதில்லை. வெறும் தலைப்பு மட்டுமே தெரிகிறது. உங்கள் Blogger Accountல் RSS Setting களை மாற்றி, RSS Readerல் தெரியுமாறு மாற்றுங்கள்.

நன்றி!

Anonymous said...

Romba nalla irukku.. vaazhthukkal...
indha thalaippilana ungal puthagathai ethirparthu !!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Ezhilanbu said...

Romba nalla irukku.. vaazhthukkal...
indha thalaippilana ungal puthagathai ethirparthu !!!//

ம் நிதர்சனமான உண்மை புத்தகம் போடப்போவது எப்படி தெரியும்..? நன்றி கண்டிப்பாக புத்தகம் தயாரானவுடன் தகவல் தருகின்றேன்.

Anonymous said...

epdiyo therinjathu... title romba pudichirundhahdu....

Anonymous said...

nice!!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// jaseela said...

nice!!!!//

நன்றி ஜெஸிலா

கைதட்டுங்கள்

Jumaana Syed Ali said...

Yes, Kattayam Avasiyam thaan nanba. Antha suham thani :) Fantastic one.

தேன் கூடு