Friday, January 25, 2008

உன்னை விட்டு விட என்ன செய்வது?

ஒரு அதிகாலை குளிரின்
பனித்துளிகள் சேகரிக்கும்..
பாதையொன்றினில் - ஏதோ ஒரு
மணித்துளியினில் என்னில் வந்து..
மாட்டிக்கொண்டாய்!

சுற்றிக்கொண்டு..
சுவாசம் தர மறுக்கின்றாய்!

விலகி விட நினைத்தால்..
நெருக்கம் இறுக்குகிறாய்!

உன்னை விட்டு விலக..
அறிவுரைகளும் , ஆறுதல்களும்
வந்துகொண்டே யிருக்கின்றன!

எதை விடுவது எதை தொடுவது?

என் மீதான் காதல்
அதிகப்பட்டுப்போனதால்...
அறிவுரைகளை அலட்சியப்படுதியவன்
பின்பற்றுகின்றேன்..

நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Aruna said...

//நீ இன்னும் இன்னும் இன்னும் நெருங்குகின்றாய்..
உன்னை விட்டு விட ...
நான் என்ன செய்வது ஜலதோஷமே?//

அடடா....ஜல்ஸ் ரொம்ப ரொம்ப ஜில்லிப்பா இருந்தது!!!!!!
அன்புடன் அருணா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//aruna said...

அடடா....ஜல்ஸ் ரொம்ப ரொம்ப ஜில்லிப்பா இருந்தது!!!!!!
அன்புடன் அருணா//


நன்றி அருணா...

அது என்னங்க ஜல்ஸ்..

அட இதை கூடவா செல்லமா கூப்பிடுறது..? ;)

Unknown said...

its nice...
plz visit http://animator2.blogspot.com

Anonymous said...

nalla irukku... etho expect panna kadaisila jaladhosham -nu solleettengale...
good ya...

தேன் கூடு