Thursday, December 27, 2007

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் அடி



இடம் : லால்பாக் வெஸ்ட் அருகே உள்ள ஆர்.வி ரோடு.

இந்தச் சாலையில் நான் வழக்கமாக உணவருந்தும் அந்த ரெஸ்டாரெண்ட் அருகே தினமும் காலையில் மீட்டிங் ஆரம்பித்துவிடும். மேனேஜர் ஒருவருக்காக மற்ற எக்ஸிகியுட்டிகள் காத்திருப்பர். மேனேஜர் வந்தவுடன் பரபரப்பாக இயங்கும் அந்தப்பகுதி. வாடகை இல்லை, மின்சாரம் இல்லை . சுற்றி நின்று மீட்டிங் நடைபெறும்.

தினமும் அவர்களது ரிப்போர்ட்கள் அங்கையே பரிமாறப்படும். கிட்டத்தட்ட ஒரு அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் அந்த இடத்தில் நடைபெறும். நடமாடும் அலுவலகம் இது.

ன்றும் வழக்கம்போல அந்த நடமாடும் அலுவலகத்தை கவனிக்கின்றபொழுது அவர்களில் மேனேஜர் ஒருவர் ஒரு எக்ஸிகியுட்டியை கன்னத்தில் அடிக்க ஆரம்பிக்கின்றார். அந்த நபரும் தலையை குனிந்தபடியே மௌனமாக இருக்கின்றார்.

ந்த எதிர்தாக்குதலும் இல்லாமல் அவர் அடிக்க அடிக்க மௌனமாக இருக்கின்றார் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டவேண்டியதூன் ஆனால் மறுகன்னத்திலும் அடித்தால்..? திருப்பி கொடுக்க வேண்டியதுதான்..? அவர் திருப்பிக் கொடுத்திருந்தால் அடித்த நபர் கொஞ்சம் நிலை குலைந்திருக்ககூடும். ஆனால் அடிவாங்கிய அவருடைய நிலை என்னவோ தெரியவில்லை..?

ட என்னதான் தவறு செய்தாலும் இப்படியா நடுரோட்டில் வைத்து அடிப்பது.? அடிவாங்கிய அந்த நபருக்கு அவரது வீட்டில் எந்த அளவுக்கு மரியாதை இருக்கும். இங்கு வந்து அடிவாங்கிய விசயம் அவரது வீட்டாருக்குத் தெரிந்தால் எந்த அளவுக்கு வருத்தப்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களை விடுங்கள் அந்த தனிமனிதனின் உள்ளம் எந்த அளவுக்கு சங்கடப்படும்.

பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன். அந்த நிகழ்வு மனதை ரொம்பவும் சங்கடப்படுத்திவிட்டது.

-- ரசிகவ் ஞானியார்

11 comments:

Unknown said...

// பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன். //

பணத்தேவை குறையும் போதுதான் தன்மானம் வளரும்.

குறைந்தபட்ச வாழுதல் தேவைகளுக்காக பணம் அவசியம். அது உழைப்பின் மூலமே வரும். நமது உழைப்பை பணமாக்க ஒரு தொழில் தேவை. அந்த தொழிலில் இது போன்ற சிரமங்கள் :-((((

**
பாலியல் தொழில் நல்ல உதாரணம்.வயிற்றை நிரப்ப வயிற்றுக்கு கீழே உள்ளதை நிரப்ப வேண்டிய அவமானம். பொதுவில் துணியுடன் இருக்க தனிமையில் துணிவிலக்க வேண்டிய கொடுமை.

***
நல்ல எஜமானர்கள் கடவுள்

மணிப்பக்கம் said...

நன்று! சுய மரியாதை இயக்கத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/
பணத்தேவை குறையும் போதுதான் தன்மானம் வளரும்.
/நல்ல எஜமானர்கள் கடவுள்//

ம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்...

அனுபவத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் இவைகள்...

நன்றி கல்வெட்டு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சிவாஜி - The Boss! said...

நன்று! சுய மரியாதை இயக்கத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது!!//


நன்றி சிவாஜி..

பணம் இல்லையென்றாலே தன்மானங்களையும் தொலைத்து விடவேண்டுமென நினைக்கின்றார்கள் சிலர்... அது மிக தவறு... ஆனாலும் பணம் இருந்தால் தான் நம்பிக்கையே வருகின்றது நம்பிக்கை மட்டுமல்ல உறவுகளும்தான்...

நாடோடி இலக்கியன் said...

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு".

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நாடோடி இலக்கியன் said...

"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு".//



ஆத்திரக்காரனுக்கு புத்தி கட்...

நன்றி நாடோடி..

N Suresh said...

பல்வேறு தளங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் அவமானங்களை சகித்துத் தான் உலகத்தில் எல்லா மனிதர்களும் இவ்வுலகில் வாழவேண்டியுள்ளது.

அளவு இடம் இவைகளைப் பொருத்து இது கவனிக்கப் படுகிறது.

பாங்களூரில் இதே சம்பவம் பலரும் கண்டிருக்கலாம். ஒரு கவிஞன்/எழுத்தாளன் ஆகிய நிலா நண்பன் இதை பார்க்கையில் அது ஒரு பதிவாகிறது.

இதனால் தான் எழுத்தாளர்களை மதிக்கும் ஒரு சமூகத்திற்கு வளர்ச்சி நிச்சயம் என்றும் முன்னோர் சொன்னார்கள்.

வாழ்த்துக்கள்

என் சுரேஷ்

Tech Shankar said...

அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்பான்சு செய்தார். அதைப் பாதியில் விட்டுவிட்டீர்களே?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// என் சுரேஷ்... said...
பல்வேறு தளங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் அவமானங்களை சகித்துத் தான் உலகத்தில் எல்லா மனிதர்களும் இவ்வுலகில் வாழவேண்டியுள்ளது.//



நன்றி சுரேஷ்..

அவமானங்களை சகித்துக் கொள்ளுதலும் ஒருவகையினில் தனிமனித வளர்ச்சியின் உந்துகோலாக அமைகின்றது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//TamilNenjam said...
அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்பான்சு செய்தார். அதைப் பாதியில் விட்டுவிட்டீர்களே?//


அதுதான் குறிப்பிட்டிருக்கின்றேனே நண்பா..
//எந்த எதிர்தாக்குதலும் இல்லாமல் அவர் அடிக்க அடிக்க மௌனமாக இருக்கின்றார் //

அவர் அமைதியாக தலைகுனிந்து நின்று கொண்டேயிருந்தார் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல்.

Anonymous said...

பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன்.

Really true in everyone's life

தேன் கூடு