Thursday, August 30, 2007

வலைப்பதிவர்களுக்கு ஒரு போட்டி

Photo Sharing and Video Hosting at Photobucket

2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ம் தேதி உலகத்திற்கே விடுமுறை நாள். அன்று பூமியை மிகப்பெரிய விண்கல் ஒன்று தாக்கப் போகின்றது. இதுபோன்ற ஒரு விண்கல்லின் தாக்குதலினால்தான் உலகம் முன்பு டைனோசர் என்ற உயிரினங்களை இழந்தது. இப்பொழுது விழப்போகின்ற இந்தகல் பூமிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தப்போகின்றது என்ற நாசாவின் மிரட்டும் மின்னஞ்சல் ஒன்று வந்திருக்கின்றது.

ந்த விண்கல்லானது பூமியை இதோ இப்படித்தான் வந்து தாக்கப்போகின்றதாம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

து போன்ற ஒரு புரளி முன்பு தோன்றியது. 2000 ம் ஆண்டு உலகம் அழியப்போகின்றது என்று. அதற்கு முந்தைய நாள் ஒரு கிராமமே பிரியாணி போட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது என்று பத்திரிக்கை செய்தியில் படிக்க நேர்ந்தது. அடப்பாவிகளா சாகப்போறதுக்கு முந்தைய நாள் பிரியாணிதான் தங்களின் கடைசி லட்சியமா..?

னால் நமக்கு அப்படிப்பட்ட விண்கலத்தினால் பாதிப்பு இல்லை ..ஏன்னா கண்ணா இப்படிச் ஜுடு..


Photo Sharing and Video Hosting at Photobucket

து உண்மையா பொய்யா என்று ஆராய்வதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை. சும்மா ஒரு கற்பனைக்காக உண்மையிலையே 2019 ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி உலகம் அழியத்தான் போகின்றது என்று எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும்.? உலகம் அழியப்போவதற்குள் இதையெல்லாம் செய்து விடுவேன் என்று மனதில் தேங்கிய எண்ணங்களையெல்லாம் நிறைவேற்றுவீர்களா..? தாங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள் ? தங்களின் ஆசைகள் என்னென்ன என்பதை சுவாரசியமாக எழுதுங்களேன். யாருடையது ரசிக்கத்தக்கதாக இருக்கின்றதோ அவர்களுக்கு 500 ரூ மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும்;.

போட்டியின் விதிகள் :

1. த்தனை வரிகளுக்குள் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எல்லாம்
இல்லை. ஒரு வரியிலும் இருக்கலாம் ஒரு பத்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் இருந்தால் நல்லது.

2. போட்டியில் பங்கு பெறுபவர்கள் எந்த நாட்டிலும் இருக்கலாம் ஆனால்
பரிசு தமிழ்நாட்டிற்குள் இருக்கும் அவர்கள்; பரிந்துரைக்கும் ஒருவருக்கு
வழங்கப்படும்.

3. கடைசிதேதி மற்றும் நேரம் : 03-09-07 - இந்திய நேரம் : இரவு 12 மணி


ப்ப நீங்க ஆரம்பியுங்க...ம் ஸ்டார்ட் மியுஸிக்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

15 comments:

துளசி கோபால் said...

எழுதிக்கிட்டு இருக்கும் தொடர்கள், இன்னும் ஏற்கெனவே எழுதிவச்சுட்டு இன்னும் வெளியிடாமல் இருக்கும் தொடர்கள் எல்லாத்தையும் பதிவுகளாப் போட்டுருவேன்:-)


கொஞ்சம் இருங்க, இந்தியாவில் யாருக்கு என் பரிசுகளைக் கொடுக்கலாமுன்னு யோசிச்சுச் சொல்லட்டுமா?

என் பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவர்கள் பெயர்களை என் பதிவில் பதிந்து கொள்ளலாம்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பு.

பாலராஜன்கீதா said...

ஒருவர் ஒரு முறைதான் எழுத வேண்டுமா அல்லது பலமுறை எழுதலாமா ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பாலராஜன்கீதா said...
ஒருவர் ஒரு முறைதான் எழுத வேண்டுமா அல்லது பலமுறை எழுதலாமா ? //


எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்

கார்த்திக் பிரபு said...

thlaiava enga eludha coments a podava or thani padhiveludhava?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கார்த்திக் பிரபு said...
thlaiava enga eludha coments a podava or thani padhiveludhava?
//

இல்லை கார்த்திக் இங்கையே தொடரலாம்...

Geetha Sambasivam said...

நானும் எழுதணுமா? பரிசு கொடுக்கிறதுக்குள்ளே தமிழ் நாட்டுக்கு வந்துடுவேன், வாங்கிக்க. டாங்ஸு, டாங்ஸூ, கூப்பிட்டதுக்கு! :P

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஆசிப்மீரான் :

உலகம் அழியப் போறது உறுதியாயிடுச்சுன்னா
'ஏ உலக்மே
நீ என் அழிகிறாய்
உன்னை அழிக்குமளவுக்கு
அவ்வளவு
பெரிய ரப்பரைச் செய்தவன் யார்?

உன்னை நினைக்கும்போதெல்லாம்
அன்பு கொண்ட
என்னுள்ளம்
ரத்தம் கசிய கசிய
பெருக்கெடுகிறதே

அன்பினால் வாழும் இந்த
உலகமென்று நினைத்தேனே
அன்பை மறந்து
விட்டு ஓடி ஒளிந்ததால்
இப்படி ஒரு நிலை வந்ததோ?

ஏ! விண்கல்லே!!
நீ வெறும் கருங்கல்லா?
உன் இதய்ம் என்ன
வெறும் கல்லா?

விட்டுவிடு
இன்னும் எழுதி முடிக்க
ஓராயிரம் கவிதை உண்டெனக்கு
யார் செத்தாலும்
ஒப்பாரிக்கவிதை எழுதாமல்
ஓய மாட்டேன் நான்
உலகமே அழியும்போது
அதற்காக எழுதாமல் போனால்
என்னாகும் என் நிலை?
(அதுக்குத்தாம்லே உலகத்தையே அழிக்குறென்னு விண்கல் சொல்லல்க் கூடும்:-)))))

ஓ! விண்கல்லே!
உலகம்ழிக்க நினைப்பது
உனக்கான செயல் இல்லை
நாங்கள் நினைத்தால்
கவன் கல்லெறிந்து உன்னை
உடைப்போம்

காந்தியின் புத்திரர்களானதால்
அகிம்சையால் உன்னை எதிர்ப்போம்"

என்று ஒரு கவிதை எழுதுவேன்
விணகல் தெறித்துப் போய் பக்கத்து கிரகத்தில் விழுந்துவிடாதா இப்படி கவிஞர்கள் வாழும் இடத்தை விட்டு விட்டு :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//கொஞ்சம் இருங்க, இந்தியாவில் யாருக்கு என் பரிசுகளைக் கொடுக்கலாமுன்னு யோசிச்சுச் சொல்லட்டுமா? //

தங்களின் பலமான நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்

குசும்பன் said...

சீ சீ போங்க சொல்ல வெட்கமா இருக்கு.

காத கிட்ட கொண்டுவாங்க ( நான் கல்யாணம் ஆகாத கண்ணி பையன் அதனால அதனால் உலகம் அழியும் முன்பு ஒரே ஒரு முறை உலக அழகிங்க எனக்கு ஐஸ் கிரிம் ஊட்டி விடனும்:))

கண்மணி/kanmani said...

இன்னும் 12 வருஷத்துக்குள்ளதானே? அதுக்குள்ள என்னுடைய மொக்கை கும்மி பதிவுகள் எல்லாத்தையும் தமிழ் மணத்துல்ல இருக்கிற அத்தனை பேரையும் படிக்க வச்சிடுவேன்.
தினமும் காலை ,மாலை இரவு மூன்று வேளையும் அம்புஜம் மாமியோட அல்வாவை தின்ன சொல்லுவேன்.இந்தக் கொடுமையிலேயே மனுஷன் வெறுத்து எப்ப 2019 வரும் உலகம் அழியும்னு காத்திருக்கத் தொடங்கிடுவான்.
அப்படியும் பொறுக்க முடியலேன்னா மாமியோட 'லட்டு' வாங்கி தூக்கி எறிஞ்சு பூமிமேல மோத விட்டுடுவாங்க.விண்கல்லே வேண்டாம் எல்லாம் ஃபணால்.
2019 வரை காத்திருக்க தேவையில்லை.
[மாமியோட அல்வா+லட்டு ரொம்ப பேமஸ்ங்க]

Gnaniyar @ நிலவு நண்பன் said...

என்னுடைய சில ஆசைகளை தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்...

திருமணம்:
ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு வரக்கூடிய மனைவி இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று நிறைய ஆசைகள் இருக்கும். அதற்கு நான் மட்டும் என்ன? விதி விலக்கா?? எனக்கும் நிறைய ஆசைகள் இருக்கின்றது. காதலிக்க நேரம்மில்லை... உலகமே அழியப்போகின்றது இப்பப்போய் காதல் கீதல் என்று... கல்யாணத்திருக்கு பிறகு காதலித்துக்கொள்ளலாம்... அதன்னால் நேரா கல்யாணம்தான். எனக்கு பிடித்தவளை விட என்னை பிடித்தவளையே நான் திருமணம் செய்துக்கொள்வேன் (இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கு. இப்ப சண்டைப்போட நேரம்மில்லை அதான் இந்த முடிவுப்பா........).

பாசம்:
எனது நீண்ட நாள் ஆசை பிரிந்திருக்கும் என் உறவினர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று தான். அதை இந்த மந்திர வார்த்தைகளாள் (உலகம் அழியபோகின்றது) பழை கசப்பான நினைவுகளை மறந்விட்டு இருக்கக்கூடிய கொஞ்ச நாட்கள் சந்தோஷ்மாக இருப்போம். என்று சொல்லி இன்ஷா அல்லாஹ மீண்டும் சேர்த்துவிடுவேன். இருக்கக்கூடிய நாட்களை அவர்களுடன் சேர்ந்து கழிப்பேன்.


பொது நலம்:
என்னால் முடிந்த அளவுவிற்கு மற்றவர்களுக்கு உதவிச்செய்வேன். ஆனால் இப்ப உள்ள கால கட்டத்தில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தாலே போதும் அதே அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவி. அதை நான் முதலில் செய்வேன்.

சாப்பாடு, தூக்கம்.... இதுப்போல் நிறையா ஆசைகள் இருக்கின்றது. அதை எழுத இப்ப நேரம் இல்லை... அடுத்த முறை பார்க்கலாம்...

நன்றி...

ABDULLA
Mufees

நாகை சிவா said...

உலகம் அழிய போவதை லைவ் வாக பிளாக்கரில் அப்டேட் யாரும் செய்யுறாங்களா என்று த.ம வந்து பாத்து, அப்படி பண்ணி இருந்தால் அதுக்கு ஒரு பின்னூட்டம் போடனும்.!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ABDULLA
Mufees

உலகமே அழியப்போகின்றது இப்பப்போய் காதல் கீதல் என்று... கல்யாணத்திருக்கு பிறகு காதலித்துக்கொள்ளலாம்...

எனது நீண்ட நாள் ஆசை பிரிந்திருக்கும் என் உறவினர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று தான்

இப்ப உள்ள கால கட்டத்தில் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருந்தாலே போதும் அதே அவர்களுக்கு நாம் செய்யும் பெரும் உதவி. அதை நான் முதலில் செய்வேன்//


ஒவ்வொரு விசயமாக பிரித்து தான் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என கூறிய அப்துல்லாவிற்கு பரிசு வழங்கப்படுகின்றது...

உலகம் அழிவதற்குள் பிரிந்து போன தன்னுடைய உறவினர்களையெல்லாம் ஒன்று சேர்த்துவிடவேண்டும் என்ற அவரது நல்ல எண்ணம்தான் அவருக்கு பரிசு கிடைப்பதற்கான முக்கிய காரணம்..

அப்துல்லா அவர்கள் தனிமடலில் என்னைத் தொடர்பு கொண்டு பரிசியைப் பெற்றுக் கொள்ளலாம்

Unknown said...

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை எனக்கு பரிசு கிடைக்கும் என்று. நான் எழுதிய முதல் கட்டுரை இது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொள்கிறேன்...

நன்றி...

Mufees

இந்த முகவரிக்கு பரிசை அனுப்பவும்:

M.H. ABDULLAH MUFEES,
37,SHOWKAT ALI STREET,
KOOTHANALLUR - 614101,
THIRUVARUR - (DISTRICT),
TAMIL NADU - INDIA.

Thamizhan said...

எப்பா!சாமி!கடவுளே!
உலகமே அழியப் போவுதாம்.ஒரே ஒரு
தபா வந்து மூஞ்சியே காட்டிடுப்பா,கண்ணில்லே!

தேன் கூடு