Sunday, July 22, 2007

நீங்க ஹாரிபாட்டர் வாங்கியாச்சா..?

Photo Sharing and Video Hosting at Photobucket

"இன்று ஒரே நாளில் பல லட்சம் புத்தகங்கள் விற்று தீர்ந்தன "

"கடைகளின் வாசலில் மக்களின் கூட்டம் "

"நெல்லையில் இன்று வந்த 300க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீர்ந்து போயின.. "

வேற ஒண்ணுமில்லை ஹாரிபாட்டரைத்தான்ப்பா சொல்றேன். பிறமொழிப் புத்தகங்களை விரும்பி படிக்கின்ற அளவுக்கு தமிழ்க் கலாச்சாரம் இப்படி முன்னேறிவிட்டதா..?

"ஹாரிபாட்டர் நான் வாங்கிட்டேன்..? நீ வாங்கியாச்சா..? "என்று வாங்கிய குழந்தை வாங்காத குழந்தைகளிடம் மார்க்கெட்டிங் செய்கின்றது. அப்படி குழந்தைகளை கவரும் வண்ணம் தொடர்ந்து 7 வது பதிப்புகளாக வந்து வெற்றிபெற்றுக்கொண்டிருக்கின்றது . பாராட்டக்கூடிய விசயம்தான். ஆனால் புத்தகம் புடிக்கிறதோ இல்லையோ? அதில் உள்ள கதை விளங்குகிறதோ இல்லையோ? ஆனால் வாங்குவது பணக்காரத்தனமாகிவிடுகின்றது.

ஹாரிபாட்டருக்கு உலகம் முழவதும் கிடைக்கின்ற வரவேற்பில் மயங்கியும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர் புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாத பணக்காரர்கள்.

புத்தகம் எல்லாம் விற்றுத்தீர்ந்த அந்தக்கடைக்குச் சென்று, "ஹலோ ஹாரிபாட்டர் புத்தகம் இருக்கிறதா?" என்று சும்மாக்காட்டியும் வெட்டிப் பந்தாவுக்கு கேட்டுவிட்டு வரலாமா என்று நினைக்கின்றேன்.

அதற்கு கிடைக்கின்ற இவ்வளவு வரவேற்பைப் பார்த்து எனக்கும் ஹாரிபாட்டர் படிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது.

மாயாஜாலங்கள் நிறைந்த கதை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்துவதற்கு அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? புத்தகம் படித்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்ப்பா..ப்ளீஸ்..


Photo Sharing and Video Hosting at Photobucket Photo Sharing and Video Hosting at Photobucket

பணக்காரத்துவத்திற்காக ஹாரிபாட்டர் வாங்கப்போகும் பொழுது சாலையில் இவர்களைக் கண்டால் அடுத்தவேளை உணவுக்கு வழிசெய்துட்டு போங்கப்பா.. ப்ளீஸ்..

செவிக்குணவில்லாதபொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்



- ரசிகவ் ஞானியார்

10 comments:

G.Ragavan said...

ஹாரிபாட்டர் புத்தகத்தைப் பணக்காரத்தனத்துக்கும்னு மட்டும் வாங்குறவங்களச் சொல்றது சரி. பெருமைக்கு மாவிடிக்கிறதுன்னு சொல்வாங்க. அந்த மாதிரி செய்றவங்களுக்குச் சரி.

ஆனா எல்லாரும் அப்படியில்லை. ஹாரி பாட்டர் புத்தகம் வந்த பிறகுதான் காமிஸ்ல இருந்த ஆர்வத்தைப் புத்தகம் படிக்கிறதுல குழந்தைங்க திருப்புனாங்க. பெரும்பாலானவங்க விரும்பித்தான் படிக்கிறாங்கன்னு நம்புறேன்.

ஹாரிபாட்டரப் படிக்கிறாங்களோ இல்லையோ....ஏழைகளுக்கு உதவ வேண்டியது எல்லோருடைய கடமையும்.

ஏழாவது புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டேன். விரைவில் வருது பதிவு. புத்தகத்துல என்ன இருக்குன்னு அந்தப் பதிவுல தெளிவாச் சொல்ல முயற்சி செய்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஹாரிபாட்டருக்கு உலகம் முழவதும் கிடைக்கின்ற வரவேற்பில் மயங்கியும் ஹாரிபாட்டர் புத்தகம் வாங்கி தனது வீட்டில் வைத்திருப்பதை பெருமையாகவும் கருதுகின்றனர் புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாத பணக்காரர்கள்.//

இந்த வியாதி பல பணக்காரருக்குண்டு. சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

Anonymous said...

மனதைத் தொட்ட பதிவு. போலித்தனம் தான் அடிப்படை. இங்கு ஜேர்மன் பிள்ளைகள் அப்படியொன்றூம் ஆஹா ஓஹோ என அலறியதை பார்க்க முடியவில்லை.

Anonymous said...

குழந்தைகளை விடுங்கள், சில பெரிசுகளும் துள்ளிக் குதிப்பதைக் கவனிக்கவில்லையா? உங்கள் பதிவில் உள்ள படங்கள் அவர்களின் கண்ணைத் திறக்கும் என நம்பவிலை!!!


ஒரு ஈழத் தமிழன்

dondu(#11168674346665545885) said...

//மாயாஜாலங்கள் நிறைந்த கதை என்பது மட்டும் எனக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளை இந்த அளவுக்கு வசியப்படுத்துவதற்கு அந்த கதையில் அப்படி என்னதான் இருக்கின்றது? புத்தகம் படித்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்ப்பா..ப்ளீஸ்..//
குழந்தைகள் மட்டுமா? என்னைப் போன்ற இளைஞர்கள் மற்றும் பெரியவர்களை கூடத்தான் ஹாரி பாட்டர் கட்டிப் போட்டுள்ளான். மேஜிக் என்பதற்காக லாஜிக்கெல்லாம் விட்டுவிடாமல் எழுதியுள்ளார் ரௌலிங். அதிலு க்விட்டிச் மாதிரி ஒரு விளையாட்டை அதன் விதிகளுடன் கற்பனை செய்து எழுதுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை. ரன்னிங் காமெண்டரி வேறு.

இதையெல்லாம் கூறுவது ஆங்கிலத்தில் ஏழு புத்தகங்களையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் 3 புத்தகங்களையும், ஜெர்மன் மொழிபெயர்ப்பில் இரண்டு புத்தகங்களையும் படித்துள்ள டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//G.Ragavan
ஏழாவது புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டேன். விரைவில் வருது பதிவு. புத்தகத்துல என்ன இருக்குன்னு அந்தப் பதிவுல தெளிவாச் சொல்ல முயற்சி செய்றேன். //

ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்..கண்டிப்பா சொல்லுங்க... நன்றி ராகவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//G.Ragavan
ஏழாவது புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டேன். விரைவில் வருது பதிவு. புத்தகத்துல என்ன இருக்குன்னு அந்தப் பதிவுல தெளிவாச் சொல்ல முயற்சி செய்றேன். //

ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்..கண்டிப்பா சொல்லுங்க... நன்றி ராகவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இந்த வியாதி பல பணக்காரருக்குண்டு. சரியாகச் சொல்லியுள்ளீர்கள். //

//Anonymous said...
மனதைத் தொட்ட பதிவு. போலித்தனம் தான் அடிப்படை. இங்கு ஜேர்மன் பிள்ளைகள் அப்படியொன்றூம் ஆஹா ஓஹோ என அலறியதை பார்க்க முடியவில்லை. //

நன்றி யோகன்..மற்றும் பெயர் சொல்லா பெரியவருக்கும்.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
குழந்தைகளை விடுங்கள், சில பெரிசுகளும் துள்ளிக் குதிப்பதைக் கவனிக்கவில்லையா? உங்கள் பதிவில் உள்ள படங்கள் அவர்களின் கண்ணைத் திறக்கும் என நம்பவிலை!!!


ஒரு ஈழத் தமிழன் //

நன்றி தமிழா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இதையெல்லாம் கூறுவது ஆங்கிலத்தில் ஏழு புத்தகங்களையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் 3 புத்தகங்களையும், ஜெர்மன் மொழிபெயர்ப்பில் இரண்டு புத்தகங்களையும் படித்துள்ள டோண்டு ராகவன்.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

அப்படின்னா சரியாகத்தான் இருக்கும்..:)

தேன் கூடு