
அன்பின் பீரங்கியே!
அழகின் ஆயுதமே!
நான் தெருமுனைக்குச் சென்றாலே...
தவித்துக் கொண்டிருப்பாய்!
இப்பொழுது
போர்முனைக்கு வந்திருக்கின்றேன்!
எப்படியிருக்கிறாயடி?
எதிரிகளின்
தாக்குதலுக்கு துடிக்கின்ற
துடிப்பை விடவும்
உன்
தபாலுக்குத்தான் ...
அதிகமாய் துடித்திருப்பேன்!
"உனக்கு தைரியமிருந்தால்
எனக்கு பூ வாங்கி வா
பயமாயிருந்தால்
போரிடப்போ"
என்று எழுதியிருக்கின்றாய்!
கலவரங்கள் மண்ணில்
தோன்றிடுமோவெனப் பயந்து..
போரிடவே போய்விட்டேனடி!
இனி என் மண்ணில்
தைரியமாக இருக்கலாம் நீ!
என் காயங்களுக்கு
தரப்படுகின்ற
மருந்து மட்டுமல்ல...
உன்
கடிதமும்
சாப்பாட்டுக்கு முன்
சாப்பாட்டுக்கு பின் என்றாகிவிட்டது!
தீவிரவாதிகளை...
தோட்டாக்களால் விரட்டினேன்!
எனக்குள் காமம் வந்து...
தீவிரவாதியாகியானது!
உன்
விழித்தோட்டாவில்...
நான்
விழப்போவது எப்போது?
உன் நினைவுகள் ஒரு கோழை!
ஆம்
நான் உறங்கும்பொழுது...
ஓடி வந்து தாக்குகிறது!
இனி
கடித முனைகளை
முத்தமிட்டு ஒட்டு!
கடிதங்களுக்குள்
ஆக்சிஜன் நிரப்பி அனுப்பு!
நச்சுக் காற்றுகளுக்கு நடுவே...
உன்
நா காற்றில் நான் சுவாசிக்க!
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?
கொஞ்சம் பொறு!
டுமீல்! டுமீல்!
ம்! சொல்!
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?
- ரசிகவ் ஞானியார்
10 comments:
"என் காயங்களுக்கு
தரப்படுகின்ற
மருந்து மட்டுமல்ல...
உன்
கடிதமும்
சாப்பாட்டுக்கு முன்
சாப்பாட்டுக்கு பின் என்றாகிவிட்டது!"
நன்றாக இருக்கிறது நிலவு நண்பன்
//
குசும்பன் said...
நன்றாக இருக்கிறது நிலவு நண்பன் //
நன்றி குசும்பன்.....
//"உனக்கு தைரியமிருந்தால்
எனக்கு பூ வாங்கி வா
பயமாயிருந்தால்
போரிடப்போ"//
//வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?
கொஞ்சம் பொறு!
டுமீல்! டுமீல்!
ம்! சொல்!
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது?//
ரசிகவ். கலக்கல். காதலையும், வலிகளையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். ரொம்ப அருமையாக இருக்கிறது.
good one!!!
அருமை!!!
அன்பின் வலிகளை உணர்கிறேன்.
very nice poem friend. Beautiful wordings ! I really admire you. Keep it up !!
Very nice.. Rasikow..
உனக்கு தைரியமிருந்தால்
எனக்கு பூ வாங்கி வா
பயமாயிருந்தால்
போரிடப்போ
ithu romba nalla irukku....
வெங்காயம் வெட்டும்போது...
விரல் கீறியதாய் சொன்னாயடி
எப்படியிருக்கிறது .. These lines are very nice...
உன்
விழித்தோட்டாவில்...
நான்
விழப்போவது எப்போது?
உன் நினைவுகள் ஒரு கோழை!
ஆம்
நான் உறங்கும்பொழுது...
ஓடி வந்து தாக்குகிறது!
sam
உன்
விழித்தோட்டாவில்...
நான்
விழப்போவது எப்போது?
உன் நினைவுகள் ஒரு கோழை!
ஆம்
நான் உறங்கும்பொழுது...
ஓடி வந்து தாக்குகிறது!
Post a Comment