அனுப்புனர்:
அம்மா என்றொரு அநாதை,
முதியோர் இல்லம்.
பெறுநர் :
நன்றி மறந்த மகன்,
நான் வாழ்ந்த இல்லம்
பொருள் : பொருள் மட்டுமே பொருள்
ஞாபகமிருக்கிறதா மகனே?
இன்று
அன்னையர் தினமாம்!
உனக்கு
அன்னையை விட்ட தினம்தான் ...
ஞாபகத்திலிருக்கும்!
நீ என்
விரல்பிடித்து நடந்தநாட்களை
கொஞ்சூண்டாவது உணர்கிறாயா?
என்னை விட்டுச்சென்ற
இந்த நாளில்...
நான் உணர்கின்றேனடா...
என்னைப் பிடித்து நடைபயின்ற
அதே விரல்கள்தான் ...
என்னை
இங்கேயும் அழைத்து வந்ததை
நான் உணர்கின்றேனடா...
பள்ளி வாகனம்
கண்விட்டு மறையும் வரையிலும்,
உன்னை
வழியனுப்பும் ...
விழிகளுக்குச் சொந்தக்காரி நான்!
இப்பொழுதோ உனது
புதிய வாகனத்தில்
நான் கண்விட்டு மறையவேண்டுமென...
இங்கே
விட்டுச் சென்றது நியாயமா?
நீ கல்லூரி செல்லும்பொழுதும்
வாசல் வரை வந்து
ஊட்டிவிட்ட ...
விரல்களுக்குச் சொந்தக்காரி நான்!
இங்கே
வயிறாற கிடைத்தாலும்...
வரிசைச் சாப்பாடுதான்!
சௌக்கியமா மகனே..?
வருகிறவர்களெல்லாம் ...
பரிதாபப்படுகிறார்கள்!
பரிதாபப்படவேண்டிய நீயோ
வர மறுக்கிறாய்!
உயிலோடு இருக்கும்போது வந்தாய்
உயிரோடு இருக்கும்போது வருவாயா?
உனக்காய் எழுதி வைத்த
சொத்துக்களை ...
திருப்பிக் கேட்கமாட்டேன்!
நான் செத்தால் ..
என் சாம்பல் கேட்கவேனும் வா!
என் சாம்பல்
ஈரப்பதமாய் இருந்தால் ...
பயந்து விடாதே!
அது நான் விட்ட
கண்ணீர்களின் கலவை
அவ்வளவுதான்..!
ஒரு வேண்டுகோள் மகனே!
தயவுசெய்து
உன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!
என் மகனுக்காவது
கடைசிவரை ...
தனிமையே கிடைக்க கூடாது !
மரணம் தவிர,
இப்படிக்கு,
அம்மா என்றொரு அநாதை
- ரசிகவ் ஞானியார்
15 comments:
//தயவுசெய்து
உன் மகனை ...
துணைக்கு அழைத்து வராதே!//
தாய் தந்தையை முதியோர் இல்லம் விடும் அவலத்தை மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
//சுல்தான் said...
தாய் தந்தையை முதியோர் இல்லம் விடும் அவலத்தை மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//
நன்றி சுல்தான்
Dear Gnani,
Simply superb!!
Regards
//Anonymous said...
Dear Gnani,
Simply superb!!
Regards //
Thanks Nanpa
நல்ல நேர்த்தி, மனசை நெருடும்படியான வார்த்தைகள். கம்மியா எழுதினாலும் இது மாதிரி எழுதுங்க. நல்ல கவிதை.
//ILA(a)இளா said...
நல்ல நேர்த்தி, மனசை நெருடும்படியான வார்த்தைகள். கம்மியா எழுதினாலும் இது மாதிரி எழுதுங்க. நல்ல கவிதை. //
உங்களின் ஊக்கத்திற்கு நன்றி இளா
Really touching!!
Really touching!!
anthath thaaykku sollavaavathu
thembu
irunthathe.
sollaamal azhintha thaayaivida ivaL koduththu vaiththavaL.
nanRi rasigav.
//Premma said...
Really touching!! //
// வல்லிசிம்ஹன் said...
anthath thaaykku sollavaavathu
thembu
irunthathe.//
நன்றி Premma மற்றும் வல்லி சிம்ஹன்
Romba nlla kavidhai...
sila edathula Pettrorgalukku pillaigalal erpadum avalathai apdiye sollirukkeenga... great ..
// Ezhilanbu said...
Romba nlla kavidhai...
sila edathula Pettrorgalukku pillaigalal erpadum avalathai apdiye sollirukkeenga... great ..//
என் வலைப்பதிவை நானே இப்படி முழுமையாக படித்திருக்கமாட்டேன்..
ஒவ்வொரு பதிவுக்கும் விமர்சனம் தந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி எழில்
:-)
தாயாரின் துயர் சொட்ட சொட்ட எழுதி இருக்கீங்க.... ஆன ஒரு கேள்வி ...
கல்யாணத்துக்கு முன்னாடி எந்தப் புள்ளையாவது ஆயியை அப்பனை அனாதை இல்லத்தில விட்டு இருக்கானா ? சொல்லுங்க ? 1 லெட்சத்தில ஒருத்தன் ?? சொல்லுங்க
கல்யாணாத்துக்கு பின்னால, வீட்டுக்கு வந்தவ அட்ச்சு விரட்டினா அவன் என்னையா பண்ணுவான் ?
முதியோர் படும் பாடு, அவும் தன்க்குன்னு பணம் வெச்சுக்கத முதியோர் படும் பாடு, இந்தியாவில, பெண்ணியத்தின் விளைவு
அன்புடன்
விநாயக்
http://batteredmale.blogspot.com/2008/08/blog-post_6091.html
// Vinayak said...
கல்யாணாத்துக்கு பின்னால, வீட்டுக்கு வந்தவ அட்ச்சு விரட்டினா அவன் என்னையா பண்ணுவான் ?//
தவறு சரி தீர்மானிக்கும் வயதில்லையா நமக்கு?
Post a Comment