
நண்பர் மூர்த்தி அவரகள் சூர்யாவுக்குத் தெரியாமல் ஜோதிகாவுக்கு ஒரு கவிதை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.
வெட்கத்தால் சிவந்து கிடந்தன
என் கண்ணப் பகுதிகள்
ஆசைகளால் நிரம்பிக் கிடந்தது
என் இதயம்...
அடிக்கடி தொட்டுப் பேசி
கட்டிப்பிடிக்க நினைத்தது
என் மனசு...
துள்ளும் என் இளமைக்கு
நேரம் காலம் தெரிவதில்லை..
இரவு வந்தால் போதும்
தறிகெட்டுப் பாயும்
எல்லாம் வயசுக் கோளாறு..
இத்தனை நாள் பரவாயில்லை
இனிமேல் தகாது
இன்னொருவன் மனைவியை
ஏறெடுத்துப் பார்த்தல் பாவமாம்!
வெட்கத்தை உடுத்திக்கொண்டு
நீயே என் கனவில்
வரலாமென்றாலும்
சூர்யாவுக்கு நீ செய்யும்
துரோகமல்லவா!
பூவும் மலருமாய்
கனியும் சுவையுமாய்
நீவிருவரும்
இணைந்து வாழ
முத்தமிழ் மன்றத்தின்
அன்பு வாழ்த்துக்கள்.
- மூர்த்தி
இதைப்பார்த்து சூர்யாவுக்கு தான் எழுதுவதுபோல ஒரு கவிதை எழுதிக் கேட்ட அன்புடன் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கவிதை.
சட்டென்று
செப்டம்பரில் கரைந்துபோன
என் கண்ணாளா..
நேருக்கு நேர் வந்து
எங்கள் இதயம் பதிந்தாய்!
பேரழகனாய்
பெண்கள் மனதில் விழுந்தாய்!
சில்லென்று ஒரு
சிலையின் நெஞ்சத்தில் ஏறினாய்!
ஆரெம்கேவி
சேலையின் வியாபாரம் இறக்கினாய்!
ரஜினி வாழ்த்துப்பெற்ற
கஜினியே!
செப்டம்பர் 11 ல்
பெண்கள் மனதை உடைத்தாய்!
நட்சத்திரத்தை கைபிடித்து
நிலவுக்கே வெட்கம் கொடுத்தாய்
உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)
உன்னை
வசீகரப்படுத்திக்கொள்ள
விருப்பம்தான்!
ஆயினும்
ஜோதிகாவை
கோபமூட்டவும் - எங்கள்
கணவர்களுக்கு
கிறுக்குப்பிடிக்க வைக்கவும்..
எங்களுக்கு சம்மதமில்லை
ஆகவே
மேக்கப்பை கலைத்துவிட்டு
ஜோவை மட்டும் காதலி!
- ரசிகவ் ஞானியார்
6 comments:
yabba...
romba romba too much ithu :-) aana 2 kavithaiyum super 'o' super
//EH said...
yabba...
romba romba too much ithu :-) aana 2 kavithaiyum super 'o' super
//
மிக்க நன்றி
"உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)"
ha..ha..ha
நான் ஏதோ தப்பு பண்ணிட்டேண்ணு நினைச்சு ஓடி வந்தேன்.ஹி..ஹி
//"உன்
கல்யாண நாள்தான் - எங்களின்
கணவர்களுக்கு நிம்மதி நாளானது! ( ?)"
ha..ha..ha //
அனானியின் சிரிப்பில் ஏதும் அர்த்தம் இருக்கின்றதா?
// ஜோ / Joe said...
நான் ஏதோ தப்பு பண்ணிட்டேண்ணு நினைச்சு ஓடி வந்தேன்.ஹி..ஹி //
என்னப்பா..உண்மையிலேயே ஏதாச்சும் தப்பு பண்ணியிருக்கீங்களா..?
Post a Comment