Wednesday, May 07, 2008

குருவி - மனதை பாதித்தது


விஜய்யும் த்ரிஷாவும் சின்ன வயசுல ஒரு குருவியை வளர்ப்பாங்களாம்;. அந்தக்குருவியின் முதுகில் ஒரு மச்சம் இருக்குமாம். இரண்டு பேருக்கும் பக்கத்து பக்கத்து வீடு. அந்தக் குருவி இரண்டு பேரின் அன்பையும் பெற்றிருக்கும். அந்தக் குருவியைப் பார்த்து இரண்டுபேரும் ஒரு பாட்டு கூட பாடுவாங்களாம்.

பின் விஜய் குடும்பமும் த்ரிஷா குடும்பமும் தனித்தனியே பிரிந்து போய்விட. அந்தக் குருவி மட்டும் அநாதையாய் அந்த இடத்தில் இருக்குமாம்.

16 வருடங்களுக்குப் பிறகு பட்டணத்தில் விஜய் மீது ஒரு காகம் எச்சில் போட முயன்றபொழுது, எங்கிருந்தோ பறந்து வந்த குருவி ஒன்று காகத்தின் அந்த எச்சத்தை தன் மீது தாங்கிக் கொள்ள,
விஜய்க்கு அதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்திடுமாம். அந்தக்குருவியை கையில் எடுத்து எச்சிலை துடைக்கும்பொழுது கவனிப்பாராம். அது சின்ன வயதில் தான் வளர்த்த குருவியேதான்

பின் ஒரு பாடல் பாடுவாராம்.

இன்னிசைப் பாடிவரும் இந்தக்
குருவிக்கு குஷ்டமில்லை
குருவிகள் இல்லையென்றால் எந்த
அருவிக்கும் நஷ்டமில்லை


என்று சுவிட்சர்லாந்து மலை உச்சியில் நின்று பாடல் பாட அந்தப்பாடல் தான் சின்ன வயதில் கேட்ட பாடல் அல்லவா என்று சென்னை அண்ணாசாலையில் சந்து முனையிலிருந்து , த்ரிஷா சுவிட்சர்லாந்துக்கு ஓடி வந்து விஜய்யுடன் சேர்ந்து பாட்டு பாடி இறுதியாக பாபநாசம் அணையில் வந்து தங்களது நட்பை காதலாக புதுப்பித்துக் கொள்வார்களாம்.


இதன் பிறகு தான் கதையில் திருப்புமுனையே. ஆம் தான் விஜய் மீது எச்சம் போடுவதை தடுத்த குருவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த காகம் குருவியை பழிவாங்க அலையுமாம். தங்களை சேர்த்து வைத்த குருவியை காகத்திடமிருந்து காப்பாற்றியே தீரவேண்டும் என்று விஜய்யும் த்ரிஷாவும் துப்பாக்கியோடு திரிவது கதையில் சிறப்பம்சம்.

- ரசிகவ் ஞானியார்

13 comments:

Anonymous said...

See Please Here

PPattian : புபட்டியன் said...

கலக்கிட்டீங்க...

ஆனா, இந்த கதையோட படம் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்ல.. :))

ச்சின்னப் பையன் said...

அவங்க சுவிஸ், சென்னை, பாபநாசம் இங்கேல்லாம் தாவிக்கிட்டே இருப்பாங்க. கடைசியிலே படம் பாக்குறவங்க குணசீலம்தான் போகணும். சரிதானே??...:-))))

சரவணன் said...

வணக்கம் நிலவு நண்பரே (ரொம்ப கனவு காண்பீர்களோ, என்வே குட் நேம்)

படம் பார்காம விமர்சனம் எழுதகூடாது ரொம்ப தப்பு, நீங்க சொல்ற அளவுக்கு படத்துல பெரிய கதை கிடையாது. குருவி மூளையோட போய்பார்தா படம் சூப்பரப்புன்னு நீங்களே சொல்வீர்கள்

விஜய் படம் எப்ப வரும் வச்சு விளையாடலாம்னு ஒரு குருப்பு வெறியோட குத்தவச்சு உக்காந்திருக்கீங்க போல...

சரவணன்

siva said...

நிலவு தோழா!

"விஜய் படம் எப்ப வரும் வச்சு விளையாடலாம்னு இரண்டு குருப்பு வெறியோட குத்தவச்சு உக்காந்திருக்கீங்க போல"

குருவி பஞ்டைலாக்

சீதபேதி வந்தா
அலோபதி இல்ல ஓமியோபதில
குணபடுத்தலாம் ஆன இந்த
சின்ன தளபதி அ( ந)டிச்சா
இந்தியாவுலே மருந்தே இல்ல....;
சிவா
பாண்டி.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//PPattian : புபட்டியன் said...
கலக்கிட்டீங்க...

ஆனா, இந்த கதையோட படம் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒண்ணும் இல்ல.. :))
//

நன்றி பட்டியன்..

கதையை விடவும் சதையை நம்பும் காலமிது//ச்சின்னப் பையன் said...
அவங்க சுவிஸ், சென்னை, பாபநாசம் இங்கேல்லாம் தாவிக்கிட்டே இருப்பாங்க. கடைசியிலே படம் பாக்குறவங்க குணசீலம்தான் போகணும். சரிதானே??...:-))))
//

ம் குணசீலம், பாபநாசம், ஏர்வாடி இப்படி நிறைய இருக்கே..


//சரவணன் said...

குருவி மூளையோட போய்பார்தா படம் சூப்பரப்புன்னு நீங்களே சொல்வீர்கள்
//

வஞ்சப் புகழ்ச்சி அணியில் கலக்குறீங்க

KRP said...

கலக்கிட்டீங்க...

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//KRP said...

கலக்கிட்டீங்க...

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com///

நன்றி கேபி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//siva said...

நிலவு தோழா!

"விஜய் படம் எப்ப வரும் வச்சு விளையாடலாம்னு இரண்டு குருப்பு வெறியோட குத்தவச்சு உக்காந்திருக்கீங்க போல"

குருவி பஞ்டைலாக்

சீதபேதி வந்தா
அலோபதி இல்ல ஓமியோபதில
குணபடுத்தலாம் ஆன இந்த
சின்ன தளபதி அ( ந)டிச்சா
இந்தியாவுலே மருந்தே இல்ல....;
சிவா
பாண்டி.//

நல்ல பஞ்ச் டயலாக் சிவா

Anonymous said...

நண்பனுக்கு இப்படி சிரிக்க வைக்கவும் தெரியுமா? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Thooya said...
நண்பனுக்கு இப்படி சிரிக்க வைக்கவும் தெரியுமா? :)
//

ஏங்க நண்பன் சிரிக்க கூடதா என்ன?..எல்லாம் நண்பர்களை சிரிக்க வைக்கத்தான்..நன்றி தூயா

கவிதன் said...

கதை டெர்ரரா இருக்கு ஞானியார்!!! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் திரைப்படம் இதுதானோ!!! எந்த தியேட்டர் ல வரப்போகுதுன்னு சொல்லிடுங்க ..... அந்த பக்கம் போகாம இருக்கதான்....

cute said...

sema storyyyyyyy

தேன் கூடு