Sunday, December 16, 2007

இட்லி வாங்கினால் பைனாகுலர் இலவசம்







ங்க ஊர்ல நான் இட்லி சாப்பிட்டுறுக்கேன். ஒரு தட்டில் நாலைந்து இட்லியை வைத்து பின் சாம்பார்க்கென்று ஒரு கிண்ணம் சட்னிக்கென்று ஒரு கிண்ணம். தேவைக்கேற்ப ஊற்றி மெல்ல பிசைந்து ருசித்துச் சாப்பிடுவேன்.

ங்க பெங்களுர்ல வந்து இட்லியை தேட வேண்டியதாப் போச்சுங்க. "இட்லி வாங்கினால் ஒரு பைனாகுலர் இலவசம்னு" ஹோட்டலில் அறிவிப்பு கொடுக்கணும்.

மாங்க இட்லியை சாம்பாருக்குள் தேடித்தான் கண்டுபிடிக்கணும். பின்ன நீங்களே பாருங்களேன்.


"இருக்கிறது ஆனா இல்லை..இல்லை ஆனால்
இருக்கிறது
"


ப்படி இட்லியை சாம்பாருக்குள் மூழ்க வச்சி கொடுத்தாங்கன்னா என்ன பண்றது? இதப் பார்க்கும்பொழுது ஆத்து தண்ணீர்ல யாரோ உயிருக்குப் போராடுகிற மாதிரி இருக்கு. இட்லியை விடவும் சாம்பாரைக் குடித்தே பசியைப் போக்கிடலாம் போல இருக்கு.



கீழுள்ள இந்தப் படம் இட்லி சாப்பிட்ட பிறகு உள்ள நிலை. பாருங்க இரண்டும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது.



அதனால பெங்களுரு வந்து இட்லி சாப்பிட விரும்பும் தமிழர்கள் இட்லியை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் கொடுக்க வேண்டாம். தேடுங்கள் கிடைக்கும்

- ரசிகவ் ஞானியார்

12 comments:

cheena (சீனா) said...

ரசிகவ், அங்கே போய் ஏன் இட்லியத் தேடுறீங்க - அங்கே சாம்பார் கூட இனிக்குமே - அங்கெ உள்ளதெ அங்கே சாப்பிடனும் - இங்கே உள்ளதே இங்கே சாப்பிடனும் - ஓக்கேயா

Anonymous said...

I love idli very much. I wish I have Idli now.

Rumya

Anonymous said...

it z a nice article

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// cheena (சீனா) said...
ரசிகவ், அங்கே போய் ஏன் இட்லியத் தேடுறீங்க - அங்கே சாம்பார் கூட இனிக்குமே //

ம் அதுக்காக சாம்பாரை மட்டும் குடிக்க முடியாதே...

//- அங்கெ உள்ளதெ அங்கே சாப்பிடனும் - இங்கே உள்ளதே இங்கே சாப்பிடனும் - ஓக்கேயா//

அனுபவத்துல பேசுறீங்க..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//I love idli very much. I wish I have Idli now.

Rumya//

இந்த இட்லி படத்தை பார்த்தே சாப்பிட்ட திருப்தி வந்துச்சுன்னா ஓட்டல பில்லை எனக்கு கொடுத்திருங்க..

முஹம்மது ,ஹாரிஸ் said...

ரொம்ப சரியான வேடிக்கையான பதிவு

G.Ragavan said...

ஹா ஹா ஹா

இது சாம்பார் வடை மாதிரி சாம்பார் இட்லி. :) சாம்பார் இட்லி பேடா-ன்னு சொன்னா தட்டுல வெச்சிக் குடுப்பாங்க. இந்தச் சாம்பார் இட்லியும் ருசிதான். அப்படியே கொஞ்சங் கொஞ்சமாக் கொத்திச் சாம்பார்ல கலந்து சாப்புடனும். சாப்ட பெறகு இட்லியும் இருக்கக் கூடாது..சாம்பாரும் இருக்கக் கூடாது. அதுதான் நேக்கு. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தங்கத்தமிழன்ஹாரிஸ் said...
ரொம்ப சரியான வேடிக்கையான பதிவு
//

ம் நன்றி தங்கத்தமிழன்...

தங்கத்தமிழன்- இது வச்ச பெயரா இல்லை வச்சுக்கிட்டதா..? நல்லாயிருக்குப்பா..

சின்னப் பையன் said...

இட்லியை கடவுளுக்கு ஒப்பிடறீங்க... இருக்கிறது ஆனால் இல்லை.. இல்லை ஆனால் இருக்கிறது என்று... நல்லது...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ச்சின்னப் பையன் said...
இட்லியை கடவுளுக்கு ஒப்பிடறீங்க... இருக்கிறது ஆனால் இல்லை.. இல்லை ஆனால் இருக்கிறது என்று... நல்லது...
//

கடவுளுக்கு ஒப்பிடவில்லையப்பா காதலுக்கு ஒப்பிடுகின்றேன். :)

பிரேம்ஜி said...

அது இட்லி சாம்பார் இல்லை இட்லி சக்கரைம்பார். இனிப்பா கொடுமையா இருக்கும். நல்ல இட்லி சாப்பிட முருகன் இட்லி கடைக்கு வாங்க.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பிரேம்ஜி said... ...
அது இட்லி சாம்பார் இல்லை இட்லி சக்கரைம்பார். இனிப்பா கொடுமையா இருக்கும். நல்ல இட்லி சாப்பிட முருகன் இட்லி கடைக்கு வாங்க.
//

கண்டிப்பாக வருகின்றேன்..அழைத்துச் செல்ல எப்போ வர்றீங்க பிரேம்ஜி?

தேன் கூடு