Thursday, August 23, 2007

துபாயா.. அபிதாபியா.. சார்ஜாவா..

Photo Sharing and Video Hosting at Photobucket


வெற்றிக்கொடி கட்டு படத்துல வடிவேலுவை வைத்து சேரன் துபாய் காமெடி பண்ணியிருப்பாரு பார்த்தீங்களா..? அவர் எந்த அனுபவத்துல அப்படி காமெடி வச்சாருன்னு தெரியல? ஆனா நிஜமாகவே இதுபோன்ற அலட்டல்கள் முன்பு எங்கள் ஊரில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் செய்வதுண்டு.

சிறுவயதில் எனக்குத் தெரிந்து வெளிநாடு சென்றுவிட்டு எளிமையாக வந்தவர் எனது நண்பரின் தந்தை ஒருவர் . அவர் சிங்கப்பூர் சென்றுவிட்டு ஒவ்வொரு 3 அல்லது 4 வருட இடைவெளியிலும் வருவார். அவர் வந்துவிட்டால் புது டேப் - வெளியில் அலரும் ஸ்பீக்கர் - செண்ட் வாசனை என்று கமகமக்கும். ஆனால் சென்று விட்டு வந்த எனது நண்பனின் தந்தையை விடவும் அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அலட்டல் சில சமயம் தாங்க முடியாது. புதிய டேப்பில் சத்தம் அதிகம் வைப்பது – டிவி டெக் வாடகைக்கு எடுத்து தெருவில் வைத்து படம் போடுவது என்று அலட்டல்கள் ஆரம்பித்துவிடும்.

ம்ம துபாய்காரங்க என்ன அவுகளுக்கு குறைச்சலா என்ன..? எனது ஊரில் உள்ள பல இளைஞர்கள் துபாய் சென்றுவிட்ட வந்தவர்களின் அலட்டலுக்காகவே துபாய் செல்ல விரும்புவார்கள். அந்த அளவுக்கு அலட்டல்ங்க.

துபாயிலிருந்து அந்த இளைஞர் இந்த தேதிக்கு வருகிறேன் என்று தொலைபேசி வந்தவுடனையே இவர்கள் குடும்பத்தோடு விமான நிலையம் செல்ல தீர்மானித்துவிடுவார்கள். இதில் சொந்தக்காரர்களில் , அவர்களை கூப்பிடவில்லை , இவர்களைக் கூப்பிடவில்லை என்று குறைவேறு.

துபாயிலிருந்து வருகிறவர்களுக்கே இடம் இல்லாதபடிக்கு ஆட்களை அதிகமாக வேனில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.

அட அந்த திருவனந்தபுரம் செல்லும் சாலை மிக மோசமான சாலை. அடிக்கடி விபத்து நேரிடும் பகுதி..அதில இப்படி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகணுமா..? யாராவது ரெண்டு பேர் மட்டும் போனா பத்தாதா..? சொன்னா கேக்குறாங்களா..? சரி விமான நிலையத்தை பார்க்கிற ஆசையில இருக்கலாம்.

துபாயிலிருந்து வருகிறவர் விமானநிலையத்தில் கொண்டு வந்த சொர்ணத்தை காப்பாற்றி எலெக்ட்ரானிக் அயிட்டங்ளை சுற்றி சாக்லேட் ,சோப்பு, துணிமணிகள் வைத்து சுற்றி பெட்டிக் கட்டிக்கொண்டு வருவார்.
துணியை வைத்து சுத்துனா ஸ்கேன்ல தெரியாமலா போகும்…? என்ன ஆளுங்கய்யா..?

ஸ்டம்ஸில் கஷ்டப்பட்டு எதுவுமே இல்லைங்க வெறும் சாக்லேட் துணிமணிகள்தான் என்று பொய் ஒன்றைச் சொல்லி ,பெட்டியை இழுத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் ஆகிவிடும்.

னால் வெளியில் உள்ளவங்களுக்கு இது தெரியுமா..? "விமானம் வந்து எவ்வளவு நேரமாச்சு.? இன்னும் வரக்காணோம்..முதல் ஆளா வரவேண்டடியதுதானே..?" என்று எரிச்சல்படுவார்கள்.
அட இதென்ன திருநெல்வேலி பேருந்து நிலையமா? விட்டவுடன் நேரா வெளியே வர்றதுக்கு..விமான நிலையம்பா..

வர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........

கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..

செண்டிமெண்ட் பேத்தல்கள் கொஞ்சநேரம் நடக்கும். அப்புறம் வேனில் வரும்பொழுதே அவர் இல்லாமல் இருக்கும்பொழுது, ஊரில் நடந்தவைகள் அனைத்து தேதிவாரியாக உறவினர்கள் சொல்லிவிடுவார்கள்.

வர் ஊரில் வந்து இறங்கியவுடனையே அலட்டல்களின் காட்சிகள் அரங்கேறிவிடும். அவரு கொண்டு வந்த பெட்டியை அவரு சீக்கிரம் திறந்து விடக்கூடாது. அட அவரு கஷ்டப்பட்டு சம்பாதிச்சுட்டு வர்றாரு அவரு திறக்க கூடாதாங்க? சரி அவங்க அம்மா, அப்பா யாராச்சும் திறக்கலாம். ஆனா திறக்க கூடாதாம். சொந்தக்காரர்களில் அவங்க வரலை,இவங்க வரலை,எல்லாரும் வந்தவுடன்தான் பெட்டியை திறக்கணுங்கிற கூத்து நடக்கும் பாருங்க எங்க ஊர்ல..வேடிக்கைதான்..

வரு என்ன பெட்டிக்கடையா திறக்கப்போறாரு..? பெட்டியைத்தானே திறக்க போறாரு.. அதுக்கு ஏங்க சொந்தக்காரங்க எல்லாரும் வரணும்..? யாராச்சும் சொந்தக்காரங்கல விட்டுட்டு திறந்திட்டார்னு அந்த சொந்தக்காரர் கோவப்பட்டுட்டு வீட்டுக்கு வரமாட்டாராம். "அவன் என்ன மதிக்கலை..நான் அவனுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்னு " சண்டை போட ஆரம்பிச்சுறுவாங்க.. ஆமாங்க இது உண்மைதான் எங்க ஊர்ல இதனால் மனக்கசப்பானவங்க நிறைய பேர் இருக்காங்க தெரியுமா..?

ரி எப்படியோ பெட்டிக்கு திறப்பு விழா பண்ணியாச்சா..? அப்புறம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணிமணிகள் - நறுமணப்பொருட்கள் - எலக்ட்ரானிக் சாதனங்கள் - குழந்தைகளுக்கு பொம்மைகள் - சாக்லேட் - சொர்ணம் - சோப்புகள் - சப்பு சவரு என்று எடுத்து பிரித்து வைத்துவிடுவார்கள்.

ல்லா நண்பர்களுக்கும் வாங்கி வர முடியாவிட்டாலும் உயிர் நண்பர்களுக்காகவாவது ஏதாச்சும் வாங்கி வரணுமே? துபாய்ல ஈரானிய மார்க்கெட்டில் இரண்டு திர்ஹமுக்கு அள்ளி வரலாம் பொருட்களை . பார்ப்பதற்கு விலை உயர்ந்த பொருள் போலவே இருக்கும். ஆனா விலை கம்மி தரமும்தான். அங்கபோய் உயிர் நண்பர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் வாங்கிப் போட்டிருப்பாங்க..அதை எடுத்து கொடுத்திருவாங்க..

ந்த ஆளு துபாய்ல இருந்து வந்துட்டாருங்கிறதை மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து அலருகிற சத்தத்தில் வருகிற இந்திப் பாடலை வைத்து புரிந்து கொள்ளலாம்.

ப்புறம் இவரு ஊர்ல இருக்கிற நாள் வரையிலும் நண்பர்களோடு படம் பார்க்கச் சென்றால் இவர்தான் டிக்கெட் எடுப்பாராம்…மத்தவங்க பணம் கொடுக்குறேன்னு சொன்னாலும்..

"டேய் டிக்கெட் 30 ரூ தானே..அங்க எனக்கு வெறும் 3 திர்ஹம்தாண்டா.. என்று திர்ஹம் - ரூ கதையளப்பார்கள்."

(அங்க அவனுங்க 1 திர்ஹமுக்கு அழுவாங்க)

னது நண்பன் ஒருவன் ஊரில் பிச்சைகாரியிடம் 5 ரூ போட்டுவிட்டு பெருமையாகச் சொன்னான். "துபாய்ல வெறும் ½ பில்ஸ்தானடா" என்று.

னா இவனுங்க விடுமுறை முடியும் பொழுது தான் தெரியும் உண்மையான நிலைமை..முதலில் தாம் தூம்னு செலவழிக்கிறவனுங்க..திரும்பவும் துபாய்க்கு செல்கிற நாட்கள் வரும்பொழுது அப்படியே கமுக்கமா அடக்கி வாசிப்பாங்க..பின்னே கொண்டு வந்த காசெல்லாம் செலவழிச்சிடுவாங்க.. யார்கிட்ட காசு கேட்டாலும் கவுரவம் போயிடும்.. அதனால வீட்டை விட்டு வெளியே வர மாட்டாங்க..

வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றில் குளிக்கப்போகிற பொழுது சைக்கிளின் பின்புறம் துபாய்ல இருந்து கொண்டு வந்த பூப்போட்ட துண்டுக்கு (ஈரானி மார்க்கெட்ல 2 திர்ஹம் துண்டுதான்) நடுவுல அரபு எழுத்துக்கள் வெளியே தெரிகிறது போல உள்ள சோப்பினை வைத்துகொண்டு செல்வார்கள். அந்த அரபு எழுத்து பதிந்த சோப்பினை காண்கிறவர்கள் தலைவரை துபாய் பார்ட்டின்னு நினைப்பாங்களே… அதுக்குத்தான்..

ப்புறம் துபாய் தமிழ் பஜார்ல மொலினா என்கிற சிங்கப்பூர் கடையில் வாங்கிய சிங்கப்பூர் வேஷ்டியை உடுத்துட்டுதான் வலம் வருவாங்க..அதுதான் தலைவரு துபாய் பார்ட்டின்னு பளிச்சினு காட்டிக்கொடுக்கும்..

செண்ட் அடிக்காம வெளியே வந்திறமாட்டாறு தலைவரு.. அப்படி அடிச்ச செண்ட்ல மயங்குன கூட்டம்தான்ங்க, இதுபோல நாமும் செண்ட் அடிக்கணும்னு பறந்து இப்போ துபாய்ல சுத்திகிட்டு இருக்காங்க..

துபாய் பற்றியோ, அரபு நாடுகள் பற்றியோ, வெளிநாடு அனுபவம் சற்றும் இல்லாத நண்பர்களை கூட்டி வச்சிட்டு அடிக்கிற அரட்டைதாங்க தாங்க முடியாது.

"இங்க இருக்கிற எல் ஐ சி எல்லாம் என்ன கட்டிடம்..அங்க வந்து பாருங்க ஒரு தெருவுல போனோம்னா தலையை உயர்த்திக்கிட்டேதான் போகணும்.. அந்த அளவுக்கு உயரமான கட்டிடங்களை பார்க்கலாம்..அது மாதிரி ஒரு கட்டிடத்திலதான் நான் தங்கியிருக்கேன்.."

"அங்கல்லாம் லிப்ட் நாமாத்தான் பட்டனை அழுத்தணும்..போத்தீஸ்ல மாதிரி ஆட்கள் எல்லாம் இருக்கமாட்டாங்க.. நான் தினமும் லிப்ட்ல நானாக ஏறி நானாக இறங்கிவேன் தெரியுமா?"

"நைட்ல எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் சுத்தலாம் தெரியுமா..? வியாழக்கிழமை இரவுல நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி பீச்சுக்கு போய்ட்டு வருவோம்..கிரிக்கெட் விளையாடுவோம்.."

"ஒரு கார்டு கொடுப்பாங்க அந்த கார்டை வச்சிக்கிட்டுதான் நாம எங்கே வேண்டுமானாலும் போகணும். கார்டை தொலைச்சோம்னா அவ்வளவுதான் ஜெயில்ல போட்டுறுவாங்க.."

"வெள்ளிக்கிழமையானா போதும் தமிழர்கள் எல்லாம் ஒண்ணா ஒரு இடத்துல கூடுவோம். "
(உண்மையில வெள்ளிக்கிழமைதான் நல்லா தூங்குவாங்க)..

"டேய் இந்திலாம் தெரியுமாடா உனக்கு? " என்று எந்த அப்பாவியாவது கேட்டுவிட்டால் போதும்

"தெரியுமாவா..? கான காயா..? ஆப் கா நாம் கியா ஹே? தும் பாகல்..? "என்று தமக்குத் தெரிந்த லோக்கல் இந்தியை நண்பர்களுக்கு மத்தியில் அவிழ்த்து விடுவார்கள்..

"அங்க இந்தி தெரியலைன்னா அவ்வளவுதான்.. நாங்க ஆபிஸ்ல இந்திதான் பேசுவோம் தெரியமா.. சும்மா சரளமா பேசுவோம்.."

( ஆனா அங்க போனாதான் தெரியும் இவங்க பேசுற இந்தியோட லட்சணம்… இந்தி தெரிஞ்சவன் எவனாவது கேட்டான்னா காறித் துப்பிடுவான்..அந்த அளவுக்கு இந்தி மோசமாக இருக்கும்)

"ஒரு டிவி 150 திர்ஹம்தான்…

1 திர்ஹம் கொடுத்தா 1 பெப்சி டின் வாங்கிடலாம்…

நான் தினமும் பெப்ஸிதான் குடிப்பேன்.."

( ஆமா சாப்பாட்டுக் காசை மிச்சப்படுத்தி பெப்ஸி மட்டும்தான் குடிப்பாரு இவரு :) )

ப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நிறைய இளைஞர்களை துபாய் கொண்டு தள்ளிய புண்ணியம் இதுபோன்ற எங்களின் முன்னோடி இளைஞர்கள் பலரைச் சாரும். அவர்கள் மட்டும் அலட்டல் காட்டாமல் இருந்தாங்கன்னா நிறைய பேருக்கு வெளிநாடு மோகமே இருந்திருக்காது..

நானும் துபாய் அப்படி இப்படி என்று நண்பர்களிடம் கதையளக்கலாம் என்று வந்தால் எல்லாப் பயலுவலுமே துபாய்க்கு வந்துட்டானுங்க..என்ன பண்றது..? பார்க்கலாம் யாராவது ஒரு அப்பாவியாவது துபாய் பற்றி கேக்காமலா போகப்போறான் ? அவன்கிட்ட வச்சுக்கறேன் என்னுடைய பீலாவை.. இதைப் படிக்கிற யாராச்சும் கேப்பீங்களாங்க..?

ப்படி நிறைய பேர் இருக்காங்க அலட்டல்வாதிகள். வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.

நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை.


- ரசிகவ் ஞானியார்

28 comments:

Maya said...

அன்பு நண்பா,
உன் பதிவை நீண்ட காலம் படித்துக் கொண்டு இருந்தாலும் இப்பொழுதுதான் பின்னூட்டம் இடுகிறேன்..திருமண வாழ்த்துக்கள்(அட பாவி ..இவ்வளவு லேட்டா சொல்லுரீகளே,,)

/நான் நகைச்சுவையாக அவர்களைப் பற்றி எழுதினாலும் நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை.
/
இதோடு நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்..என்னதான் உள்ளூரில் அலட்டல் விட்டாலும்..உள்ளூரில் அடுத்தவனை ஏமாற்றி பிழைக்காமல் வெளியூரில் கஷ்டப்பட்டு உண்மையாக சம்பாதிக்கிறார்கள்..அதற்காக அவர்களின் அலட்டகளை பொறுத்துக் கொள்ளலாம்..
உங்கள் பதிவில் திர்ஹம்-டாலர்,இந்தி-ஆங்கிலம்,துபாய்-அமெரிக்கா இவைகளை replace பண்ணினால் அது அமெரிக்கா வாழ் (சி)(ப)ல மக்களுக்கும் பொருந்தும்...

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

Sundar Padmanaban said...

நிலவு நண்பன்

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் பெரும்பாலானோருடைய நிலைமை கவலைக்கிடம் என்பது பரிதாபத்துக்குரியது.

//அவர் வெளியே வந்தவுடன் நேராக ஓடிப்போய்….........

கட்டித்தழுவுவாங்கன்னு பார்த்தீங்களா.? இல்லைங்க அவரு கொண்டு வர்ற பெட்டியை வாங்கிக்குவாங்க..
//

சிங்கார வேலனில் சென்னையில் நண்பனைத் தேடிவரும் கமல்ஹாசனை வெளியில் பிடித்து வரவேற்கும் கவுண்டமணி சொல்வது 'டேய் மனோ யாரு வந்துருக்காங்க பாரு. கருவாடு வந்திருக்கு' -

இது நினைவுக்கு வந்தது. :-)

நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சின்ன வயசுல எங்க சித்தப்பா bahrainல இருந்து வந்தா ஒரே மாதிரி hero pen, watchனு dozen கணக்குல வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுப்பாரு. அலட்டல் இருக்காது. ஆனா, அந்த பெட்டிக்கு ஒரு மதிப்பு தான் :)

//வெளிநாடு சென்றுவிட்டு அதனைப் பற்றிய நன்மை/தீமைகளை மற்றவர்களுக்கு விளக்கி சொல்வதை விட்டுவிட்டு, இப்படி அலட்டியதனால்தான் நிறைய இளைஞர்கள் நாமளும் போய்ட்டு வந்தா இப்படி ஆடம்பரமா இருக்கலாம்னு வீட்டை விற்று ,நகையை விற்று, வட்டிக்கு வாங்கி, வெளிநாடு போய்ட்டு கடைசியில இங்கே இருக்கிற ஆடம்பரத்தையும் இழந்து, ஏழைகளாக திரும்பிவருகின்றார்கள்.//

1980கள் வாக்கில் புதுகை பக்கமும் இந்ந துபாய் அலட்டல் இருந்தது. 1990களில் அது சிங்கப்பூர் அலட்டலாக மாறியது. 2000 வாக்கில் மொத்த கிராம இளைஞர்களுமே சிங்கப்பூருக்கு பெயர்ந்து இப்ப வீட்டுக்கு வீடு சிங்கப்பூர் ஆள் இருப்பதால் அலட்டல்கள் குறைவு. தவிர, முதல் முறை திரும்பி வருகிறவர்கள் மாதிரி அடுத்த முறை வருகிறவர்கள் அலட்டுவதில்லை. இந்த வெளிநாட்டு வாழ்க்கை, அதன் சமூகப் பொருளாதார தாக்கம் பத்தி ஆராய்ச்சி செஞ்சு பட்டமே வாங்கலாம். அவ்வளவு விசயம் இருக்கு.

நிறைய பேர் சூழ்நிலைக்கைதிகளாகத் தான் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களே விரும்பாவிட்டாலும் மாறிவிட்ட வாழ்க்கைத் தரம், குடும்பத்தினரின் ஆடம்பரம், முறையாகத் தொழில் பயிலாமை, நம்ம ஊரில் சமூகத் தொடர்புகள் அறுந்து போகுதல் என்று வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்கள் விட்டால் போதும் திரும்ப அங்கு கிளம்பி விடுகிறார்கள். இல்லை, வீட்டில் இருப்பவர்களே கிளப்பி விடுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைச் சோகத்தைப் பார்க்கும்போது ஏதோ விடுமுறையில் இப்படி அலட்டுவது கூடத் தப்பில்லைன்னு தோணுது..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Maya said...
அன்பு நண்பா,
உன் பதிவை நீண்ட காலம் படித்துக் கொண்டு இருந்தாலும் இப்பொழுதுதான் பின்னூட்டம் இடுகிறேன்..திருமண வாழ்த்துக்கள்(அட பாவி ..இவ்வளவு லேட்டா சொல்லுரீகளே,,)//

காலம் கடந்து சொன்னாலும் இதயம் கடக்காமல் இருப்பீர்கள்..வாழ்த்துக்கு நன்றி..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//maya said: என்னதான் உள்ளூரில் அலட்டல் விட்டாலும்..உள்ளூரில் அடுத்தவனை ஏமாற்றி பிழைக்காமல் வெளியூரில் கஷ்டப்பட்டு உண்மையாக சம்பாதிக்கிறார்கள்..அதற்காக அவர்களின் அலட்டகளை பொறுத்துக் கொள்ளலாம்//

அவர்கள் அலட்டட்டும் ஆனால் தாங்கள் படுகின்ற வேதனைகளை மற்றவர்களிடம் சொல்லட்டும் பார்க்கலாம். சொல்லமாட்டார்கள்.

படிக்காத ஒரு இளைஞன் தான் விமான நிலையத்தில் தரையை கழுவுகின்ற வேலையை செய்து
வந்தாலும் இங்கு வந்து தான் விமான நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்ப்பதாக கூற அதனை நம்பி படிக்காத பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கி அங்கு போய் நிலைமையை உண்ர்ந்து மற்ற வேலைகளைச் செய்ய விருப்பமில்லாமல் மீண்டும் திரும்பிவந்து குடும்பத்தை வறுமைக்கு தள்ளிய சம்பவம் நிறையவே நடைவெபற்றிருக்கிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வற்றாயிருப்பு சுந்தர் said...
நிலவு நண்பன்

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் பெரும்பாலானோருடைய நிலைமை கவலைக்கிடம் என்பது பரிதாபத்துக்குரியது.//

ம் சுந்தர்...நீங்கள் சொல்வது போல பெருன்பான்மையான அலட்டிக்கொள்பவர்களின் வெளிநாட்டு வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்குரியது...

தங்களின் விமர்சனத்திற்கும் கரிசனத்திற்கும் நன்றி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ரவிசங்கர் : நிறைய பேர் சூழ்நிலைக்கைதிகளாகத் தான் வெளிநாட்டில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். //

உண்மைதான் ரவிசங்கர்...10க்கு 2 பேர் வாழ்க்கையாவத சோகமாகத்தான் இருக்கும்.. எனக்கு இவர்களோடு நேரிடையான அனுபவம் உண்டு..

ILA (a) இளா said...

எப்பா, என்னா ஒரு தொகுப்பு, பில்ட் அப்.
வவாசங்கம் இந்தப் பதிவை பரிந்துரை செய்கிறது

தனசேகர் said...

//நிஜமாகவே அவர்களைப் பற்றி நினைக்கும்பொழுது மனம் கனத்துப் போகிறது என்பதுதான் உண்மை//

ஆமாம் ரசிகவ் .. பெருமை பேசுவதை விட நம் நாட்டை எப்படி முன்னேற்றலாம் என எண்ண வேண்டும்..

தாசன் said...

நண்பரே நல்ல விடயம் உண்மைகளை நகைசுவையாக தந்தீர்கள் வாழ்த்துங்கள். (அச்சா) வெள்ளி கிழமை நல்ல நாள் (தும் கிதர் காம் கரேக்கா) படங்களை விட தொலைக்காட்சியிலும் நாடகத்திலும் டுபாயை தொட்டு காட்டப்படுவதை பார்த்திர்களா?(திருமண வாழ்த்துகள்)

koothanalluran said...

60, 70 களில் சிங்கை மலேசியாவாசிகள் அடிக்காத கூத்தா ? சாப்பிட்டால் Huntly Palmers Marie பிஸ்கட்டும் Jacob;s butter puff மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பார்கள். எங்களூரில் இன்னும் இவர்களின் ஆதிக்கம்தான் துபாய் சவூதி எல்லாம் ஜுஜுபி அய்யா

மீறான் அன்வர் said...

நல்ல வேளை பார்த்திபனும் வடிவேலுவும் இந்த அலட்டல்களை கொஞ்சம் கட்டுப்படுத்திட்டாங்க. இல்லேன்னா நாங்களெல்லாம் அவ்வளவுதான் :)

துபாய் என்றதும் அனவருக்கும் அதன் வானுயர்ந்த கோபுரங்களும் மாட மாளிகையுமான ஒரு பக்க வாழ்க்கையே தெரிகிறது, அங்கு ஒறே அறையில் 60,70 பேர் ஒன்றாக ஒருவரின் முகம் மேல் இன்னொருவர் கால் வைத்து தூங்கும் அவல நிலை தெரிவதில்லை.

விளக்கில் விழும் விட்டில் பூச்சாக போய் விழுகின்றனர் இதை எடுத்துரைக்க யாரும் முன்வராதது வேதனை, அந்த விதத்தில் ரசிகவுக்கு ஒரு சபாஷ்

அங்கிருப்பவன் இங்கு வந்துவிட துடிப்பான் இங்கிருப்பவன் அங்குபோய் வெந்துவிட துடிப்ப்பான்.

மொத்தத்தில் ஏழைகளின் இரத்தத்தில் உருவான துபாய் சிலருக்கு சொர்க்கம் பலருக்கு நரகமே.

உண்மையை உணர்த்திய ரசிகவிற்கு ரசிகனின் நன்றி

Unknown said...

அட! உங்க ஊர்லயும் இப்டித்தானுங்களா?
நான் என்னவோ நம்மூர் பசங்கதான் இப்டி பந்தா பண்ணிட்டு அலைஞ்சானுவோன்னு நினைச்சேன்.
ஆனா இப்பலாம் அவ்வளவு இல்லை - அதுக்கு வடிவேலு காரணமுமில்லை.

அபி அப்பா said...

அடப்பாவி நண்பா! எல்லா கதையும் அவுத்து வுட்டுட்டியே, இனிமே நம்மள எவன் மதிப்பான் ஊர்ல:-))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/// அபி அப்பா said...
அடப்பாவி நண்பா! எல்லா கதையும் அவுத்து வுட்டுட்டியே, இனிமே நம்மள எவன் மதிப்பான் ஊர்ல:-)) //

அட அவுகதான் நீங்களா... :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சுல்தான் said...
அட! உங்க ஊர்லயும் இப்டித்தானுங்களா?
நான் என்னவோ நம்மூர் பசங்கதான் இப்டி பந்தா பண்ணிட்டு அலைஞ்சானுவோன்னு நினைச்சேன்.
ஆனா இப்பலாம் அவ்வளவு இல்லை - அதுக்கு வடிவேலு காரணமுமில்லை. //

எல்லா ஊர்லயும் ஒண்ணுதான்..

வடிவேலு காமெடியே இவர்களை வைத்துதான் தோன்றியிருக்க கூடும்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மீறான் அன்வர் said... அங்கிருப்பவன் இங்கு வந்துவிட துடிப்பான் இங்கிருப்பவன் அங்குபோய் வெந்துவிட துடிப்ப்பான். //

இங்கிருக்கும்பொழுதே அங்கு எப்படி வெந்துபோவோம்னு தெரிஞ்சா போக மாட்டாங்க

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தாசன் said...
நண்பரே நல்ல விடயம் உண்மைகளை நகைசுவையாக தந்தீர்கள் வாழ்த்துங்கள். (அச்சா) வெள்ளி கிழமை நல்ல நாள் (தும் கிதர் காம் கரேக்கா) படங்களை விட தொலைக்காட்சியிலும் நாடகத்திலும் டுபாயை தொட்டு காட்டப்படுவதை பார்த்திர்களா?(திருமண வாழ்த்துகள்) //



நன்றி தாசன்..

திருமண வாழ்த்துக்கள் எனக்கா சொன்னீங்க..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//koothanalluran said...
60, 70 களில் சிங்கை மலேசியாவாசிகள் அடிக்காத கூத்தா ? சாப்பிட்டால் Huntly Palmers Marie பிஸ்கட்டும் Jacob;s butter puff மட்டுமே சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பார்கள். எங்களூரில் இன்னும் இவர்களின் ஆதிக்கம்தான் துபாய் சவூதி எல்லாம் ஜுஜுபி அய்யா //


எந்த ஊரு என்றாலும் அலட்டல் இருக்கத்தான் செய்யுது...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ILA(a)இளா said...
எப்பா, என்னா ஒரு தொகுப்பு, பில்ட் அப்.
வவாசங்கம் இந்தப் பதிவை பரிந்துரை செய்கிறது //

நன்றி இளா..

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// தனசேகர் said...
ஆமாம் ரசிகவ் .. பெருமை பேசுவதை விட நம் நாட்டை எப்படி முன்னேற்றலாம் என எண்ண வேண்டும்.. //

தங்கள் ஆதங்கம் நியாயமானது தனசேகர். நன்றி

Sridhar Harisekaran said...

வாழ்த்துக்கள் அன்பரே.. மிக அருமையான பதிவு..

வளைக்குடாவில் நம்ம மக்கள் படுற அவஸ்த்தை சொல்லமாளாது. அவங்க 3 வருஷத்துக்கு ஒரு முறை திரும்பி வரும் போது இந்த கஷ்டத்தை சொல்லி உறவினர்களையும் கவலைப்படக்கூடாதுனு ஒரு நல்ல எண்ணமாகவும் இருக்கலாம்.

திர்ஹம் - ருபாய் conversion அருமை.

ஸ்ரீதர்.

சிவா said...

நண்பா,
உங்கள் பதிவில் உள்ளதை நிறைய தடவை காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது. நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். இன்னொரு கொடுமையையும் இங்கு காணலாம்
http://vaasiyin-nizhal.blogspot.com/2007/08/blog-post_15.html
இதைப்பற்றி எழுதியதற்கு வந்த பின்னூட்டம் இங்கே.
http://vaasiyin-nizhal.blogspot.com/2007/08/blog-post_08.html#comment-1605190417974738930

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஸ்ரீதர் said...
வாழ்த்துக்கள் அன்பரே.. மிக அருமையான பதிவு..

திர்ஹம் - ருபாய் conversion அருமை.//

விமர்சனத்திற்கு நன்றி ஸ்ரீதர்.

//Vaasi said...
நண்பா,
உங்கள் பதிவில் உள்ளதை நிறைய தடவை காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்திருக்கிறது. நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்//

வாசியின் வாசிப்பிற்கு நன்றி...

தங்கள் பதிவு பார்த்தேன்...பொது காரியங்களுக்கு வந்தால் விமர்சனத்தை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆகவே தளராமல் எழுதுங்கள் நண்பா

Unknown said...

ரசிகவ்,

நகைச்சுவையான பதிவு!! அரபு நாடுகள் மட்டுமில்லே, சிங்கப்பூர், மலேசியா, இப்போ அமெரிக்கா ன்னு, அந்த அலட்டல் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு. வெளினாடுகளில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இந்தியா செல்லும்போது ஒரு 'பந்தா' (சரி, இது தமிழ் வார்த்தையா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!!) காட்டுவது வழக்கமாகத்தான் உள்ளது.

வெளினாட்டு மோகம் மாறாதவரைக்கும் இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

இதோடு நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்..என்னதான் உள்ளூரில் அலட்டல் விட்டாலும்..உள்ளூரில் அடுத்தவனை ஏமாற்றி பிழைக்காமல் வெளியூரில் கஷ்டப்பட்டு உண்மையாக சம்பாதிக்கிறார்கள்//

This is so true Rasigav.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தஞ்சாவூரான் said...
ரசிகவ்,

இந்தியா செல்லும்போது ஒரு 'பந்தா' (சரி, இது தமிழ் வார்த்தையா? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!!) காட்டுவது வழக்கமாகத்தான் உள்ளது.//

பந்தா தமிழ் வார்த்தை அல்ல...பகட்டு என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்..

//வெளினாட்டு மோகம் மாறாதவரைக்கும் இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
//



வெளிநாட்டு மோகம் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வல்லிசிம்ஹன் said...
இதோடு நான் இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன்..என்னதான் உள்ளூரில் அலட்டல் விட்டாலும்..உள்ளூரில் அடுத்தவனை ஏமாற்றி பிழைக்காமல் வெளியூரில் கஷ்டப்பட்டு உண்மையாக சம்பாதிக்கிறார்கள்//

This is so true Rasigav.
//

ம் நிதர்சனமாக உண்மைதான் நண்பா..

தேன் கூடு