"நண்பர் ஆசிப் மீரானின் துணைவியார் இயற்கை எய்திவிட்டார்கள்" என்ற செய்தி வலைப்பதிவர்கள் பலருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிப் மீரானுக்கு எங்களது ஆறுதல்கள் என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு செல்ல முடியவில்லை. கனவுகளோடு விடுமுறைக்கு வந்துவிட்டு இனிமையான நினைவுகளோடு திரும்பிச் செல்ல நினைத்திருப்பார். ஆனால் இப்படி சோகமயமாகிவிட்டது.
ஆசிப்மீரானின் தந்தை திரு அப்துல் ஜப்பார் அவர்கள் தனது மறு-மகளைப் பற்றி எழுதியுள்ளது இன்னமும் மனதை சோகமயமாக்குகின்றது.
"இந்தப் பூப்பந்தில் வதியும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் அவளும் ஒருத்தி. ஆனால் நிச்சயம் லட்சத்தில் ஒரு பெண். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஓர் இனிய தேவதை. "
"எங்கள் வீட்டில் விருந்தாளியாகத் தங்கிச்சென்ற ஒரு பிரபல கவிஞர், " இறைவனுக்கு இணை வைப்பது பாவமில்லை எனில் இவளை நான் தெய்வம் என்பேன்" அன்று கவிதை நயத்தோடு சொல்லிச் சென்றார். "
"பெரியவர்களிடம் காட்டும் பண்பும் - பணிவும், கணவனிடம் காட்டும் அன்பும் - பரிவும், குழந்தைகளிடம் காட்டும் பாசமும் - நேசமும், குடும்பத்தினரிடம் காட்டும் கனிவும் - கருணையும், சமூகத்தில் நடந்து கொண்ட கண்ணியமும் - கௌரவமும் யாஸ்மினை ஒரு தனிப்பிறவி என்றே சொல்ல வைத்தன. "
"இரவு பதினொன்றரை மணிக்கு மனசாட்சியே இல்லாததா மருத்துவ உலகம் என்று எண்ணுமளவுக்கு அந்த இரக்கமற்ற இடிச் செய்தியை எங்கள் தலைகளில் இறக்குகிறார்கள் --- யாஸ்மின் இறந்து விட்டாள். "
அப்துல் ஜப்பாரின் இந்த எழுத்துக்கள் ஆசிப்பின் துணைவியாரைப் பற்றி அறியாதவர்களையும் கண்ணீர் விட வைத்துவிடுகின்றது.
இந்த இழப்பிற்கு எந்த நிகழ்வுகளாலும் ஈடு செய்யவே முடியாது எனினும், இந்த இழப்பின் சக்தியை தாங்கும் மனவலிமையை ஆசிப்பிற்கும் அவர்களது குடும்பத்திற்கும் இறைவன் வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.
உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்... இறைவன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சாந்தியும் சமாதானமும் தருவானாக...
- ரசிகவ் ஞானியார்
6 comments:
உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்...
// ILA(a)இளா said...
உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் என்றும் துணையிருப்போம் ஆசிப்...//
நிச்சயமாக நண்பா
உண்மையில் ஆசிப் அவர்களுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை,
இறைவன் தான் அவருக்கு மன பலத்தை தர வேண்டும்...குழந்தைகளுக்காக இறைவனை பிரார்த்திர்க்கிறோம்
ஆசிபிற்கும் அவரது குடும்பத்திற்கும் இம்மாறாத சோகத்திலிருந்து மீண்டு வர மனதைரியத்தை அளிக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
அன்புடன் ச.சங்கர்
//வவ்வால் said...
உண்மையில் ஆசிப் அவர்களுக்கு சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, //
// தூயா [Thooya] said...
இறைவன் தான் அவருக்கு மன பலத்தை தர வேண்டும்...குழந்தைகளுக்காக இறைவனை பிரார்த்திர்க்கிறோம் //
//Anonymous said...
ஆசிபிற்கும் அவரது குடும்பத்திற்கும் இம்மாறாத சோகத்திலிருந்து மீண்டு வர மனதைரியத்தை அளிக்க இறைவனை ப்ரார்த்திக்கிறேன்
அன்புடன் ச.சங்கர் //
ஆசிப் அவர்களின் துக்கத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கு நன்றி
Post a Comment