Thursday, October 12, 2006

உங்க சின்னம்.. பட்டை நாமம்



உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்கள் ஒவ்வொரு தெருமுனைகளிலும் ஆட்டோ ஆட்களோடு வெகு வேகமாய் நடந்து கொண்டிருக்கின்றது.

உங்கள்.. வீட்டுப்.. பிள்ளை.. என்று ஆரம்பித்து .................

காலில் வணங்கி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ---------- சின்னத்தில் ஓட்டு போடுங்கள். என்று முடிக்கும் வரையிலும் எல்லாருமே குறிப்பிட்ட வசனங்களை பயன்படுத்துவதால் அதனைக் கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டது

எங்கள் வார்டில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். பாவம் அவருடைய கணவரின் கட்டளையின் பெயரில் நிற்கின்றார்கள். அந்த பெண்மணிக்கு அரசியல் அணுகுமுறைகளும் பொது அறிவும் மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொண்டேன்.

திணறி திணறி எங்களுக்கு ஓட்டுப் போடுங்க..நாங்க..நாங்க சட்டசபையில் இந்த வார்டைப்பற்றி பேசுவேன் என்று கூற

எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர்களிடம் இல்லைம்மா நீங்க பேசவேண்டியது சட்டசபை இல்லை மாநகராட்சிக் கூட்டம்தான்..

ம்..ஆமா ஆமா மாநகராட்சி கூட்டத்துல நம்ம வார்டைப்பற்றி பேசுவேன். குறைகளைத் தீர்ப்பேன்..நம்ம பகுதிக்கு சீராக தண்ணீர் கொண்டு வருவேன்.. என்று கூற

நான் அவர்களிடம் இப்பத்தான் தண்ணி ஒழுங்கா வருதே..

இல்லை இல்லை..நான் ரோடு போட உதவி செய்வேன்..என்றார்கள்

ஏற்கனவே ரோடு போடுகின்ற வேலை நடந்துகிட்டுதானே இருக்கு என்க

அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..ஓட்டுப் போடுப்பா..நாங்க வந்தவுன்ன நம்ம பகுதிக்கு நல்ல வசதிகள் செய்து கொடுப்போம் என்று உடன் வந்த குட்டி குட்டி ஜால்ராக்களும் கையெடுத்து கும்பிட்டு ஓட்டு சேகரித்தபடி சென்றனர்.

பாருங்கப்பா சட்டசபைக்கு போகணுமா இல்லை மாநகராட்சி கூட்டத்திற்கு போகணுமாங்கிறது கூட தெரியாம ஒரு வேட்பாளர்.

இதுல என்ன வேடிக்கைன்னா ஏதோ அவர்கள் முதலமைச்சர் ஆகப்போகிற மாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றர்கள்.


"மணல் கொள்ளையைத் தடுக்குவோம்"

"ஏழைகளுக்கு உதவி செய்வோம்."

"பெண்களுக்கு சுய உதவி குழு வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு நிதி வழங்குவோம்"

"எங்கள் குடும்பத்தையே சமுதாய சேவைக்காக அர்ப்பணிப்போம்"



ஆகவே எங்களுக்கு இந்தச் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள் என்று கத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மறைமுகமாக என்ன சொல்ல வருகிறார்கள் என்பதான ஒரு சின்ன கற்பனை :

"மணல் காண்டிராக்டர்களின் கமிஷன் எனக்கும் கிடைக்க வேண்டும். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எப்பொழுதுதான் நானும் எனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவது? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"சாதாரணமாய் வீதிகளில் திரிகின்ற நான் பத்திரிக்கைகள் மற்றும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் எப்படி இடம் பிடிப்பதாம்? ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"வறுமையில் இருக்கும் உங்களது கஷ்டங்களை போக்குகின்றேனோ இல்லையோ எனது குடும்பத்தின் வறுமையை விலக்க விரும்புகின்றேன். ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"எனது வீட்டிற்கு முன்னால் ஒரு அடி பம்பு அமைக்க நீண்ட நாளாக ஆசை. ஆகவே பட்டை நாமம் சின்னத்தில் எனக்கு ஓட்டுப் போடுங்கள்."

"கட்டிய டெபாசிட் 2000 த்தை பன் மடங்காக உயர்த்த உங்கள் வீட்டுப்பிள்ளை பட்டை நாமம் சின்னத்தில் ஓட்டு கேட்டபடி வந்து கொண்டிருக்கின்றார்."


அவரைக் கடைசியாய் நீங்கள் பார்க்கின்ற நாள் தேர்தல் நாள்தான்

அவர் கையெடுத்து கெஞ்சுகின்ற இந்த அரிய காட்சி இனிமேல் நிச்சமாய் கிடைக்காது. அவருக்கு ஓட்டுப் போட்டு இளிச்சவாயன் என்று நீங்கள் முகத்தில் முத்திரை இட்டுக்கொள்ள அவருக்கு பட்டை நாமம் சின்னத்தில் முத்திரை இடுங்கள்.



- ரசிகவ் ஞானியார்


4 comments:

நன்மனம் said...

ரொம்ப கோவமா இருக்கீங்க போல தெரியுது.

//நாங்க சட்டசபையில் இந்த வார்டைப்பற்றி பேசுவேன் என்று கூற..//

என்னத்த சொல்ல :-(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நன்மனம் said...
ரொம்ப கோவமா இருக்கீங்க போல தெரியுது.//



ம் ஆமாப்பா ரொம்பத்தான் கடுப்படுக்கிறாங்க..

Anonymous said...

வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான பார்வை ரசிகவ். பாராட்டுக்கள்.

- அன்பு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Anbu said...
வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான பார்வை ரசிகவ். பாராட்டுக்கள்.

- அன்பு //

நன்றி அன்பு...

மீண்டும் தருக விமர்சனத்தை மட்டுமல்ல அன்பையும்தான்..

தேன் கூடு