Monday, July 24, 2006

எனக்காக ஒரு கடிதம்...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் நேரம் கிடைத்தது. ஆகவே நிலவு நண்பனைக் காணவில்லை என்ற அறிவிப்புகள் வருவதற்கு முன் வந்து ஆஜராகி விடவேண்டும் என்ற அவசரத்தில் வந்திருக்கின்றேன், "எனக்கு ஒரு கவிதை எழுதி தாடா" என்று கேட்டகல்லூரி தோழிக்கு ( ? ) எழுதிய ஒரு பழைய கடிதத்தோடு. இனிமேல் பல சுவாரசியமான பதிவுகளோடு தொடர்ந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு...



உனக்கே உனக்காக ...
ஒரு கவிதை!

உன்னைப்பற்றியா...? - இல்லை
உனக்காகவா?

உன்னைப்பற்றி
எழுதவேண்டுமானால்...
மன்னித்துக்கொள்ளடி!
எனக்கு
கவிதையைப்பற்றி
கவிதை எழுதத்தெரியாது... (! ...ஐஸ் )

உன்னைப்பற்றிய கவிதைகளில் -
சில உளறல்கள்...
சில நிஜங்களின் தடுமாற்றங்கள்;...
சில தயக்கம்...
வெளிவந்துவிடுமோ என்ற
அச்சத்தில்...
மொத்தத்தை சொல்லாமல்
மிச்சத்தை உளருகிறேன்
பெண்ணே!

உன் தலைக்கனம் பற்றி
கல்லூரியில் சிலர் கனைக்க
நானோ
ஆண்கள் செய்தால் கிண்டல்
பெண்கள் செய்தால் தலைக்கனமா?
என
பெண்ணுரிமை பேசிய - என்னை
சந்தேகமாய் பார்த்த
என் வகுப்பறை தோழிகள்...

எத்தனை பேருக்கு
வாய்த்துவிடப்போகிறது...?
தன்
கல்லூரி நண்பர்களோடு
கடைசிவரை பயணித்திட...
நண்பனாகவோ
அலுவலகத் துணையாகவோ..
பக்கத்துவீட்டுக்காரனாகவோ..
வாழ்க்கைத்துணையாகவோ (?)..

எனக்கும் வாய்க்கும்
என நம்பிக்கையிருக்கிறது..
நீ கடைசிவரை
ஒரு தோழியாக!
என் வாழ்க்கையில் கடைசிவரை

ஆரஞ்சு மிட்டாய்க்காக
ஆகஸ்டு 15 -ஐ எதிர்நோக்கும்
பள்ளிச்சிறுவனைப்போல...

ரமலான் முதல் நோன்பில்
நோன்பு திறக்கும் நேரம் காத்திருக்கும்
ஓரு முகம்மதியனைப்போல¸

சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள் ,
காத்திருப்புகள்,
எல்லாருடைய வாழ்க்கையிலும் உண்டு

ஆனால்
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்..
கட்டபொம்மன் பேருந்து வரை!

உன்
துப்பட்டா பற்றி
தூர்தர்ஷனில் சொன்னார்களாமே?
அப்படியா ... ?

முதன்முதலில்
உன்னைப்பற்றிய
எதிர்பார்ப்புகளை கொடுத்ததே
உன் துப்பட்டாதான் தெரியுமா ?

துப்பட்டாவின் பின்புறம்
நீ இடுகின்ற முடிச்சில்
மாட்டிக்கொணட...
மாணவர்களில் நானும் ஒருவன்!

ஒற்றை இருமலை
இரட்டையாய் ( ? ) எதிரொலிக்கும்...
நம் கல்லூரி வராண்டா

மீசையில்லாத முகத்தோடு
உன் முன்
அசடு வழிந்தபடி நின்ற
மாடிப்படி ஏரியா,

கடந்து செல்லும்பொழுதெல்லாம்
உளவு பார்க்கத் தூண்டிய
கம்ப்யூட்டர் லேப்,

உன்
நோட்டுப்புத்தகத்திலிருந்து
காகிதம் வலிக்காமல்
கிழித்தெடுத்த
கண்ணதாசன் கவிதை...,

கொடுத்து அனுப்புவதில் நேசமல்ல - என்று
நான் திருப்பி அனுப்பிய
வாழ்த்து அட்டையை
நேரில் கொடுத்து
நேசமுணர்த்திய நாட்கள்,

இப்படி உன்னை ஞாபகப்படுத்துகின்ற....

துப்பட்டா..
கல்லூரி வராண்டா..
மாடிப்படி ஏரியா..
கம்ப்யுட்டர் லேப்..
கிழித்த கவிதை..
வாழ்த்து அட்டை..

என
உயிறற்றவைகளை கூட...
மறக்கமுடியவில்லை!

உன் முகம் மறந்திடுவேனென்று...
புகைப்படம் அனுப்பி
புண்படுத்திவிட்டாயடி!

ஆகவே
திருப்பித்தர மாட்டேன்
உன் புகைப்படத்தையும்
அந்த நினைவுகளையும்!

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்...
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !

- ரசிகவ் ஞானியார்

34 comments:

நாகை சிவா said...

ஆஹா வந்துட்டியா நண்பா.
இன்னும் கால் தரைக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன்.
நடக்கட்டும் நடக்கட்டும்
வாழ்த்துக்கள்

முத்துகுமரன் said...

வீட்டுகாரம்மா பற்றிய கவிதை நல்லா இருக்கு ரசிகவ்:-)..

கவிதையாகவே காலத்தை களிக்க வாழ்த்துகள்

உங்கள் நண்பன்(சரா) said...

வாருங்கள் நண்பரே...
உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்...

அப்புறம் திருமண வாழ்க்கை எப்படி போகுது?
புது மாபிள்ளைக்கு கவனிப்பெல்லாம் பலமா இருக்குதா?(கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் கவனிப்பாங்க.)
சகோதரி ஜஹானை கேட்டதாக சொல்லவும்,

//இனிமேல் பல சுவாரசியமான பதிவுகளோடு தொடர்ந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையோடு...//

மிகவும் சந்தோசமான செய்தி, தொடர்ந்து எழுதவும்..
வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன்.

கார்த்திக் பிரபு said...

vandhutaaruyya ..vadhitaaruyya..

vaanga nilavu nanban..nalama..inimale marubadiyum paataya kila arambichuruveenga thane..valthukal..

ungal eluthukalai aarvamudan edirnnokum

unga pakkathu oor kaaran

We The People said...

simply superb! எப்படிங்க இதெல்லாம் தானா வருமா! நல்ல இருக்கு நிலவு நண்பா.

//*
எனக்கும் வாய்க்கும்
என நம்பிக்கையிருக்கிறது..
நீ கடைசிவரை
ஒரு தோழியாக!
*//

இந்த வரி சும்ம நச்சுன்னுயிருக்கு!

Anonymous said...

now if you got that lady as your wife please tell her to avoid mutuchu in thubata

Priya said...

/உன்னைப்பற்றிய கவிதைகளில் -
சில உளறல்கள்...
சில நிஜங்களின் தடுமாற்றங்கள்;...
சில தயக்கம்...
வெளிவந்துவிடுமோ என்ற
அச்சத்தில்...
மொத்தத்தை சொல்லாமல்
மிச்சத்தை உளருகிறேன்
பெண்ணே!/

How true for someone who really has to describe his love, but his fears tremble him to fulfill in his dreams.

Welcome back after a wonderful break!!!

Anonymous said...

Neenda idaivelaiku piragu padhivai thodarndhulleergal.. adhuvum oru azhagiya kavidhaiyodu

உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !

Miga azhagaana varighal Gnaniyaar..!!

-- Jayalakshmi

Gnaniyar @ நிலவு நண்பன் said...

காதலைச் சொல்வதில் தயக்கம்தான் பெருன்பான்மையான இந்திய இளைஞர்களின் காதல் தோல்விக்கு காரணம்..

நன்றி ப்ரியா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//now if you got that lady as your wife please tell her to avoid mutuchu in thubata //

அட உங்களுக்கு எதுக்குங்க பொறாமை.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//karthick said...
vandhutaaruyya ..vadhitaaruyya..//



நன்றி கார்த்திக்.. ம் உங்க ஆதரவோட மீண்டும் வந்திருக்கின்றேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//மிகவும் சந்தோசமான செய்தி, தொடர்ந்து எழுதவும்..
வாழ்த்துக்கள்.


அன்புடன்...
சரவணன். //


நன்றி சரவணா..

திருமண வாழ்க்கை நண்பர்களின் ஆசிர்வாதங்களோடு நன்றாகச் செல்கின்றது.

சரியா சொல்லிப்புட்டீங்களே..ம் என்ன செய்ய எல்லாரும் அப்படித்தான்
ஒருநாள் ஹீரோ.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகை சிவா said...
ஆஹா வந்துட்டியா நண்பா.
இன்னும் கால் தரைக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன்.
நடக்கட்டும் நடக்கட்டும்
வாழ்த்துக்கள் //



ம் நன்றிப்பா.

ஏன்பா இப்படி சொல்றீங்க..கால் தரைக்கு வந்து கீழே கீழே கீழே போய்கிட்டு இருக்கு..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வீட்டுகாரம்மா பற்றிய கவிதை நல்லா இருக்கு ரசிகவ்:-)..//


நன்றி குமரன்..

எப்படி அங்க துபாய்ல வெயில் கொளுத்துதா..?

Unknown said...

வாருங்கள் நண்பா :)

உங்கள் நண்பன்(சரா) said...

//ஒருநாள் ஹீரோ.. :)//

பழையபடி ப்ரொபைலில் இருக்கிற மாதிரி இப்போ காமெடியனா..?


//ஏன்பா இப்படி சொல்றீங்க..கால் தரைக்கு வந்து கீழே கீழே கீழே போய்கிட்டு இருக்கு//

பாவம் ரசிகவ்...
சகோதரிகிட்ட அடி பலமா வாங்குறீங்களே...
காலு கீழ போற அளவுக்கு அடிவிழுகும் போல ஹய்யோ ஹய்யோ... ஒரே காமெடியா இருக்கு...


அன்புடன்...
சரவணன்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பாவம் ரசிகவ்...
சகோதரிகிட்ட அடி பலமா வாங்குறீங்களே...
காலு கீழ போற அளவுக்கு அடிவிழுகும் போல ஹய்யோ ஹய்யோ... ஒரே காமெடியா இருக்கு...//

யானைக்கும் அடி சறுக்கும்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... - ஒருநாள் உங்களுக்கும் வரும் காத்திருக்கின்றேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Dev said...
வாருங்கள் நண்பா :) //



ம் வந்துட்டேன் தேவ்.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// We The People said...
simply superb! எப்படிங்க இதெல்லாம் தானா வருமா! நல்ல இருக்கு நிலவு நண்பா.//


ம் நன்றிங்கோ...

முத்துகுமரன் said...

//எப்படி அங்க துபாய்ல வெயில் கொளுத்துதா..?//

நிலாக்கு பக்கத்துல இருக்கோங்கிற நக்கலு :-)

போட்டு வறுக்குதய்யா வெய்யில் :-(

நெல்லைக் கிறுக்கன் said...

நிலவு நண்பா,
கல்யாணம் சிறப்பா நடந்திருக்குமின்னு நெனைக்கேன். பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க. உம்ம கவிதய படிக்கும்போது எனக்கும் கல்லூரி நியாபகம் வந்துட்டுது...

பொன்ஸ்~~Poorna said...

வாங்க வாங்க!!

//ஆனால்
காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்..
கட்டபொம்மன் பேருந்து வரை!
//

நண்பன் வந்துட்டீங்க :)

VSK said...

தங்கள் மீள்வரவு நல்வரவாக வாழ்த்துகிறேன்!

கார்த்திக் பிரபு said...

enna appuram oru padhivum kanal..marubadiyum kaanama poyiteenga

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//enna appuram oru padhivum kanal..marubadiyum kaanama poyiteenga //


பொறுங்க நண்பா.. பிஸியாயிட்டேன்ல..வரும்பா கவலைப்படாதீங்க..

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாகை சிவா said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //


நன்றி சிவா.. தங்களுக்கும் மற்றும் அனைத்து வலைப்பதிலு நண்பர்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Anu said...

supera irukkunga
so oru kavidhaiye unga vaazhkai thunaiavum agittangala
congrats

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// அனிதா பவன்குமார் said...
supera irukkunga
so oru kavidhaiye unga vaazhkai thunaiavum agittangala
congrats //



நன்றி..

கவிதைதான் வாழ்க்கையாச்சு..இப்போ வாழ்க்கையே கவிதையாச்சு

Anonymous said...

எனக்காக மட்டும்னு தலைப்பு கொடுத்துவிட்டு எங்களோட உள்ளத்தையும் இல்ல அள்ளிகிட்டீங்க.

உங்க வகுப்பறை தோழிகள் மட்டுமில்லீங்க நானும் தான் சந்தேகமா பார்க்கிறேன். நிஜமாகவே தோழி தானா.....


எப்படியோ இப்படி ஒரு கவிதை தந்து கல்லூரி காலங்களை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி நண்பரே

Anonymous said...

எனக்காக மட்டும்னு தலைப்பு கொடுத்துவிட்டு எங்களோட உள்ளத்தையும் இல்ல அள்ளிகிட்டீங்க.

உங்க வகுப்பறை தோழிகள் மட்டுமில்லீங்க நானும் தான் சந்தேகமா பார்க்கிறேன். நிஜமாகவே தோழி தானா.....


எப்படியோ இப்படி ஒரு கவிதை தந்து கல்லூரி காலங்களை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி நண்பரே

வாழ்த்துக்களுடன்

அமலி

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எனக்காக மட்டும்னு தலைப்பு கொடுத்துவிட்டு எங்களோட உள்ளத்தையும் இல்ல அள்ளிகிட்டீங்க.

உங்க வகுப்பறை தோழிகள் மட்டுமில்லீங்க நானும் தான் சந்தேகமா பார்க்கிறேன். நிஜமாகவே தோழி தானா.....


எப்படியோ இப்படி ஒரு கவிதை தந்து கல்லூரி காலங்களை கண்முன்னே கொண்டு வந்ததற்கு நன்றி நண்பரே

வாழ்த்துக்களுடன்

அமலி

//

மிக்க நன்றி அமலி..

அட நம்புங்க நிஜமாகவே தோழிதான் இன்னமும்

Anonymous said...

உன் முகம் மறந்திடுவேனென்று...
புகைப்படம் அனுப்பி
புண்படுத்திவிட்டாயடி!

ஆகவே
திருப்பித்தர மாட்டேன்
உன் புகைப்படத்தையும்
அந்த நினைவுகளையும்!

மழைவிட்ட பிறகும்
சூரியன் வரும்வரை
தூறலாய் விழுந்துகொண்டிருக்கும்...
இலைத்துளி சாரல்போல்,

உயிர் மறையும்வரை...
சொட்டுசொட்டாய்
வழிந்துகொண்டேயிருக்கும் ...
உன் நினைவுகள் !

inthakavithaiyai kodutthu nee ennil aalamaga vaeruunti vittayada

naesathai naesikkum tholanae

enakkum konjam panku kodaen vun naesathil

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//inthakavithaiyai kodutthu nee ennil aalamaga vaeruunti vittayada

naesathai naesikkum tholanae

enakkum konjam panku kodaen vun naesathil//

விமர்சனத்திற்கு நன்றி

எத்தனை கிலோ நேசம் வேண்டும்?

தேன் கூடு