Sunday, February 19, 2006
நான் உன்னைக் காதலிக்கின்றேன்
காதலிக்க விருப்பமில்லையென்றால்
என்னை
கடந்து செல்லாதே
கடந்து சென்றுவிட்டாயா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு!
சந்தனமரம் கண்டும்
வெட்டாமல் விடும்
வீரப்பன் உண்டா?
நான் வீரப்பன்தான்
காதலிக்க விருப்பமில்லையென்றால்
சிரித்துவிடாதே
சிரித்துவிட்டாயா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு
காற்றடித்தும் எந்த
காகிதமும்
பறக்காமலிருக்கமுடியுமா
நான் காகிதம்தான்
காதலிக்க விருப்பமில்லையென்றால்
கண்களை தாழ்த்திக்கொள்
கண்களை தாழ்த்தவில்லையா?
தயவுசெய்து என்னை
காதலித்துவிடு
கல்லெறிந்தும் நீர்
சலனப்படாமல் இருக்குமா?
நான் நீர்தான்
காதலிக்க விருப்பமில்லையென்றாலும்
பரவாயில்லை..
என்னை காதலித்துவிடுடி
நான் உன்னைக் காதலிக்கின்றேன்.
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உங்கள் வலை கடந்து கொண்டு
இருக்கும்போதுதான்
"என்னைக் கடக்காதே" என்பதைப்
படித்தேன்..
சற்றே சிரிக்கும்போதுதான்
"சிரித்துவிடாதே" என்பதைப்
படித்தேன்..!
சுவாரசியமாக இருந்ததால்
தொடர்ந்தே படித்தேன் கண்களை
தாழ்த்தாமல் !!
அட அப்புறம்தான
புரிஞ்சுது.. எனக்கு
எழுதவில்லை என்று
:-):-):-)
நல்லா எழுதுறீங்க ஞானி
நேசமுடன்..
-நித்தியா
// நித்தியா said...
அட அப்புறம்தான
புரிஞ்சுது.. எனக்கு
எழுதவில்லை என்று
:-):-):-)//
யாருக்குலாமோ புரியுது..
எழுதப்பட்டவங்களுக்கு புரிஞ்சிருக்குமான்னு தெரியல.. : )
இப்படியே புலம்பிகிட்டு இருக்காமே போய் சட்டுப் புட்டுன்னு கேட்டுறவேண்டியதுதானே.
உமக்கு சொல்லி சொல்லி, அட நாமளே போய் சொல்லிறலாமான்னு தோணுது (ஆன நமக்கு ஏற்கனவே இருக்காங்கங்றதாலே ச்சும்மா இருக்கேன்.)
கவிதைக்கும் நித்தியாவின் பதில் நச்.
//உமக்கு சொல்லி சொல்லி, அட நாமளே போய் சொல்லிறலாமான்னு தோணுது //
என்ன ராசா வீட்டு போட்டுக் கொடுத்திறவா
Post a Comment