Friday, March 02, 2007
ஒரு பத்தினி காத்திருக்கின்றாள்
இருட்டு ,ஆசை, தனிமை, பணம்
இவற்றின் உந்துதலில்
எச்சில் இலைகள் நோக்கி ...
எட்டி சென்றேன் !
சிறு மணற்திட்டில் கால் இடற
தடுக்கி திரும்பி
திடுக்கிட்டேன்...
அது
மணற்திட்டா?
மனைவியின் கர்ப்பப்பையா?
கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?
விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!
விலைமாதுவின் பணம் தடவிய
வருடல்கள்.. .
முகம் தடவிய மனைவியின்
மருதாணிக் கைகளுக்கு முன்னால்
நெருடலாகத்தான் இருந்தது!
கலவி கொள்ள முயன்றபொழுது
நேற்று தொலைபேசியில்
"ப்பா..ப.லூ..னு.. "
குழந்தை வாங்கிக் கேட்ட
பலூன் ஞாபகம் வந்தது !
உறுத்தலோடு திரும்பிவிட்டேன்
ஊரில் ஒரு பத்தினி
காத்திருக்கின்றாள்..
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கவிதை அருமை..
ஆனா..தேடலுக்கும், தேவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
தேவையோடு முடிவடையும் எதற்குமே இந்த சிந்தனை கவிதை தேவையிருக்காது..
புரியலனா..விட்டுடுங்க :)))))
//அது
மணற்திட்டா?
மனைவியின் கர்ப்பப்பையா?
கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?
விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!
விலைமாதுவின் பணம் தடவிய
வருடல்கள்.. .
முகம் தடவிய மனைவியின்
மருதாணிக் கைகளுக்கு முன்னால்
நெருடலாகத்தான் இருந்தது!
//
அருமை ரசிகவ். நிறைய காதல் கவிதைகளுக்கு இடையில் இது போன்ற கவிதைகளை காண்பது மகிழ்ச்சி.
// கவிதா said...
கவிதை அருமை..
ஆனா..தேடலுக்கும், தேவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது..
தேவையோடு முடிவடையும் எதற்குமே இந்த சிந்தனை கவிதை தேவையிருக்காது..//
நன்றி கவிதா
புரியுது ஆனால் புரியல :)
//அருமை ரசிகவ். நிறைய காதல் கவிதைகளுக்கு இடையில் இது போன்ற கவிதைகளை காண்பது மகிழ்ச்சி. //
தொடர் விமர்சனத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி ரவிசங்கர்
\\கத்தரிக்காய்க்காக
காலணா குறைக்கப் போராடும் ...
மனைவியின் பேரம் ,
விலைபேசாமல் முடிந்த இந்த
வியாபாரத்தில் ஏனோ உறுத்துகிறது?
விலைமாதுவின் கூந்தலில்
முத்தமிட முயன்றபொழுது ...
மனைவியின் தலையில் சத்தியமிட்ட
முதல் இரவு ஞாபகம் வந்தது!//
அருமை ,அருமை , அருமை
நன்றி நர்மதா
Post a Comment