Friday, September 01, 2006

இவர்கள் காதலித்தால் III

இவர்கள் காதலித்தால் I

இவர்கள் காதலித்தால் II



கிரிக்கெட் வீரனின் காதல் கவிதை




நீ பார்வையாளராக
வந்தாலே போதுமடி எனக்கு
பார்வையே தேவையில்லை

உன்
காதலன் என்ற
கேப்டன் பொறுப்பை ஏற்றபிறகு
டார்லிங்கே நான்
டக்அவுட் ஆகிவிடுகின்றேன்

நன்றாக
கிரிக்கெட் விளையாடத் தெரிந்தாலும்
உன்
கண்கள் வீசும்
பந்து வீச்சில் மட்டும்
நான்
அவுட் ஆகிவிடுகின்றேனடி

உனது
ஒவ்வொரு சிரிப்புக்கும்
சதம் அடிப்பேன்..

நீ
பிரிந்துவிட்டால் என்னால்
4 கூட அடிக்கமுடியாது.

நம் காதலுக்கு
தடைபோடுவது உன்
தந்தையாக இருந்தாலும்
சிக்ஸர் அடித்துவிடுவேன்.


நம்
விழியிரண்டும்
விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது ,
நோபால் சொல்லி
நோகடித்த
உன் தந்தையென்ன
அம்பெயரா?

பெண்ணே
கிரிக்கெட் வீரனை
கிறுக்குபிடிக்க வைத்துவிடாதே!
மைதானத்தில் ஓடியவனை
மயானத்தில் படுக்க வைத்துவிடாதே!


என்னைக்
கழட்டிவிட்டுவிடாதே கண்ணே நான்
கங்குலி அல்ல..

ஒண்டே மேட்ச்சில்
தோற்றாலும் பரவாயில்லை
பெண்ணே கிடைக்குமா?
காதல் என்னும்
வேர்ல்டு கப்..



- ரசிகவ் ஞானியார்

15 comments:

கார்த்திக் பிரபு said...

ungal karpanai soopero sooper..adhu eppadiyaa thirunelveli naale ellarum kalakuraangalE!!!1..

SP.VR. SUBBIAH said...

அன்பே!
உன்னைத்தொடர்ந்து
வரும்
உன் அண்ணனின்
முகம் கண்டால் - பெளலர்
முரளீதரன்
முன்வந்து நிற்கின்றார்
அடுத்தமுறை
வரும்போது
அவரை மட்டும்
அழைத்து வராதே பெண்ணே!
-SP.VR.SUBBIAH

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// கார்த்திக் பிரபு said...
ungal karpanai soopero sooper..adhu eppadiyaa thirunelveli naale ellarum kalakuraangalE!!!1.. //

நன்றி கார்த்திக்..


அது திருநெல்வேலியோட மண் மகிமை நண்பா..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// SP.VR.SUBBIAH: அடுத்தமுறை
வரும்போது
அவரை மட்டும்
அழைத்து வராதே பெண்ணே!//

ஆமாம் அன்பே
அண்ணனை அழைத்து வராதே
அடியாட்களை அழைத்து வந்து இவரை மொத்து

இராம்/Raam said...

ரசிகவ்,

நல்லா இருக்குங்க உங்களின் வரிகள். திருமணத்திற்கு பிறகும் காதல் கவிதைகள் இயற்றும் திறமை போற்றதக்கதே...... :-)))))))

கைப்புள்ள said...

//ஒண்டே மேட்ச்சில்
தோற்றாலும் பரவாயில்லை
பெண்ணே கிடைக்குமா?
காதல் என்னும்
வேர்ல்டு கப்..//

ஒவ்வொரு வரியும் அருமைங்க. நகைச்சுவையும் உங்க கற்பனை வளமும் போட்டி போட்டுக்கிட்டு நிக்குது.
:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ராம் said...
ரசிகவ்,

நல்லா இருக்குங்க உங்களின் வரிகள். திருமணத்திற்கு பிறகும் காதல் கவிதைகள் இயற்றும் திறமை போற்றதக்கதே...... :-))))))) //



அடப்பாவிகளா அப்படின்னா திருமணத்திற்குப்பிறகு காதல் கவிதைகளே எழுதக்கூடாதா என்ன|?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி கைப்புள்ள

என்னையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவதே என் தலையாய பணி

dondu(#11168674346665545885) said...

ஒரு சினிமா பாட்டில் கேட்டிருக்கிறேன் இம்மாதிரி வரிகளை, "சில்வெஸ்டர் ஸ்டல்லோனைப் போன்ற அப்பனை கூட்டி வரலாகுமா" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஒரு சினிமா பாட்டில் கேட்டிருக்கிறேன் இம்மாதிரி வரிகளை, "சில்வெஸ்டர் ஸ்டல்லோனைப் போன்ற அப்பனை கூட்டி வரலாகுமா" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன் //



ம் ராகவன் அது பூவே உனக்காக திரைப்படம் ..

ஆமா நீங்க போலியா? உண்மையா?

நாமக்கல் சிபி said...

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், அடித்து நொறுக்க அவள் அப்பனும் நோக்கினான்!

நாமக்கல் சிபி said...

//என்னைக்
கழட்டிவிட்டுவிடாதே கண்ணே நான்
கங்குலி அல்ல..
//

விட்டுடுங்கப்பா பாவம்!
(கழற்றி விடச் சொல்ல வில்லை)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நாமக்கல் சிபி @15516963 said...
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள், அடித்து நொறுக்க அவள் அப்பனும் நோக்கினான்! //

பாவம் உங்க கதை ரொம்ப சோகமா இருக்குதுங்க :)

Jazeela said...

உரு மாறி உரு மாறி காதலிச்சிருக்கீங்களா என்ன? தத்ரூபமா கொட்டுது ;-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ஜெஸிலா said...
உரு மாறி உரு மாறி காதலிச்சிருக்கீங்களா என்ன? தத்ரூபமா கொட்டுது ;-) //

எத்தனை உருமாறி வேண்டுமானாலும் காதலிக்கலாம் ஜெஸிலா.. ஆனால் ஒரே பெண்ணைத்தான்..

தேன் கூடு