கணக்கு வாத்தியாரின் காதல் கவிதை
கடந்து செல்லும்பொழுது
326 முறை
முறைத்துப் பார்த்தாய்
3 முறை
செருப்பெடுத்துக் காட்டினாய்
64 முறை
அன்பாக பார்த்தாய்
42 முறை
சிரித்தாய்
காதலைச்சொல்ல..
76 முறை
தயங்கி தயங்கி திரும்பினேன்
83 முறை வெட்கப்பட்டாய்
இவ்வளவும் செய்துவிட்டு
பாடம் நடத்தும்போது
படுத்துறங்கும் மாணவன் போல
நான்
காதல் சொல்லியும்
கண்மூடிச்செல்கிறாயா..?
என் அன்பே..
அல்ஜிப்ராவே!
ஜாமட்ரிக் பூவே!
உன்
கண்கள் எனக்கு
கால்குலஸ்!
உன்
சிரிப்பு எனக்கு
Statistics!
கரும்பலகையில் மட்டும்
தைரியமாய்
கணக்கு எழுத வருகிறது!
உன்
மனப்பலகையில் எழுத வந்தாலோ
சாக்பீஸ் கூட ...
சங்கடப்படுகிறது!
கஷ்டங்களை கழித்துவிட்டு
காதலைக் கூட்டிக் கொள்வோம்..
தலைமுறைகளை பெருக்குவதற்காய்
பாதைகளை வகுப்போம்
வா வா வா
- ரசிகவ் ஞானியார்
8 comments:
//கரும்பலகையில் மட்டும்
தைரியமாய்
கணக்கு எழுத வருகிறது!
உன்
மனப்பலகையில் எழுத வந்தாலோ
சாக்பீஸ் கூட ...
சங்கடப்படுகிறது!//
"உன்னிடம் பேச
ஒருகோடி
வார்த்தைகள்
நீ தூரத்தே
வரும்போது
என் தைரியம்
எங்கு போனதோ
தெரியவில்லை....!"
//உன்னிடம் பேச
ஒருகோடி
வார்த்தைகள்
நீ தூரத்தே
வரும்போது
என் தைரியம்
எங்கு போனதோ
தெரியவில்லை....!" //
ஏன் அவங்க வீட்டுல யாராவ பின்னால வந்தாங்களா?
உன்
மனப்பலகையில் எழுத வந்தாலோ
சாக்பீஸ் கூட ...
சங்கடப்படுகிறது!//
//ஏன் அவங்க வீட்டுல யாராவ பின்னால வந்தாங்களா? //
எப்படிங்க இதெல்லாம்? இதுக்கு முன்னாடி விஜயகாந்த் கூட CBIல வேலை பாத்தீங்களா??
இன்னொரு ராமானுஜமாக
என் கனவில் இடமில்லை!
ஏன் என்று கேட்காதே ?
என் அறிவிற்கு
இந்த வாத்தி (யார்) வேலையே
கடவுள் கொடுத்த வரம்!
அறிவிருந்தால் காதல் வலையில் சிக்க
அடியேனுக்கு என்ன பைத்தியமா?
ஏதோ ஓர் மூலையில் மறைந்து கண்ணீர்வடித்தபோது
ஓர் கரம் என்னை ஆதரவாய் வருடியது
அது...
நீ தான்!!
என் அருகில் நின்றாய்!!!
என்ன ஏது என்று கண்களால் வினாவினாய்
காரணம் சொல்லத் தெரியாமல் மௌனமாய் நின்றேன்
உன் பார்வையின் கூர்மை என்னை ஏதோ செய்தது
"ஒன்றுமில்லை" என சிக்கு முக்காடி என் கண்களை அதிலிருந்து விலக்கினேன்
அக்கணத்தில் என்ன தோன்றியதோ உனக்கு
என்னைவிட்டு அகன்று சென்றாய்
ஒரு சில வினாடிகள் மறந்திருந்த என் துயரம்
மறுபடியும் வெளியே வெடித்து விசும்பலாக வடிய ...
எங்கு இருந்து ஓடிவந்தாயோ
சட்டென இதயத்தோடு இதயத்தை பேசவைத்தாய்
இறுக இவளை அணைத்துக் கொண்டாய்!
என் கண்ணீர்த்துளிகள் உன் மார்பை நனைத்து
- எனை சிலிர்க்கவைத்தது.
அப்படியே மரந்துவிட்டேன்
என் துயரத்தை மட்டுமல்ல
என்னையும்!!!
-santya
//அப்படியே மரந்துவிட்டேன்
என் துயரத்தை மட்டுமல்ல
என்னையும்!!!
-santya //
ஒரு அடையமுடியா காதலின பிரிவும், ஏக்கமும், அனுபவப்பூர்வமாக வெளி கொண்டுவந்துள்ளீர்கள் தோழி. பாராட்டுக்கள்
// SP.VR.SUBBIAH said...
இன்னொரு ராமானுஜமாக
என் கனவில் இடமில்லை!
ஏன் என்று கேட்காதே ?
என் அறிவிற்கு
இந்த வாத்தி (யார்) வேலையே
கடவுள் கொடுத்த வரம்!
அறிவிருந்தால் காதல் வலையில் சிக்க
அடியேனுக்கு என்ன பைத்தியமா? //
நீங்க உண்மையிலே வாத்தியாரா
சரி சரி உங்ககிட்ட தைரியமாக குழந்தைகளைபடிக்க அனுப்பலாம்
Post a Comment