அரசியல்வாதியின் காதல்கவிதை
என் தொகுதியைச் சார்ந்த
காதலியே!
என்னைக் காதலித்தால்
ஆயுள் முழுவதும்
அன்பை
இலவசமாக தருகின்றேன் ...
உனக்கு மட்டும்
எப்பொழுதும்
இதயத்தில் இட ஒதுக்கீடு ...
இது
தேர்தல் வாக்குறுதி அல்ல
ஒரு
தேவதைக்கான வாக்குறுதி !
நீ
பாட்டணியில் அரியர்ஸ் வைத்தாலும்
பரவாயில்லையடி !
நம்
கூட்டணியை மட்டும்
கலைத்துவிடாதே !
தோளோடு தோளிடித்து பழகிவிட்டு
வைகோவைப்போல..
விட்டுப்போய்விடாதே!
எதிர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை
தயவுசெய்து
சட்டசபையில் வந்து
எனக்கு முன்னால் அமருவாயா.. ?
நான் என்
காதலைச் சொல்கின்றேன்
- ரசிகவ் ஞானியார்
5 comments:
//என் தொகுதியைச் சார்ந்த
காதலியே!//
அது எந்தத் தொகுதி இரசிகவ்?
ஏன் அந்தத் தொகுதிக்கு நீங்களும் போகப்போறீங்களா..?
//எதிர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை//
"கககபோ"-- கலக்கீட்டீங்க போங்க
//"கககபோ"//
அட தெளிவாச் சொல்லுங்க..நான் பயந்துட்டேன்.. :)
திர்கட்சியோடுயெல்லாம்
எதிர்த்துப்பேசுகின்றேன்
நீ
எதிரில் வந்தால்தான்
எதுவுமே பேசமுடிவதில்லை//
Post a Comment