நேற்று 06.09.06 நண்பர் கௌதம் அவர்கள் தனது வலைப்பதிவில் தடாலடி பரிசுப்போட்டி என்ற ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பிரசுரித்து போட்டி நடத்தினார். 4 மணிக்குள் அந்தப் புகைப்படத்திற்கு ஒரு வரியில் கமெண்ட் அனுப்பவேண்டும். சிறந்த கமெண்டுக்கு பரிசாக சில்லுன்னு ஒரு காதல் படம் பார்க்க வாய்ப்பு என்று அறிவித்த உடனையே மள மளவென்று கமெண்டுகள் வர ஆரம்பித்துவிட்டன.
சத்தமில்லாமல் ஒரு சாதனையையும் செய்து முடித்திருக்கின்றார் என்பதை யாருமே கவனிக்கவில்லை. மதியம் 1.19 க்கு அந்தப் பரிசுப்போட்டியை அவர் ஆரம்பித்திருந்தார். 4 மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வந்து சேர்ந்தன. குறைவான நேரத்தில் அதிகமான மறுமொழிகள் பெற்றார் என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கின்றார். அதற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அவற்றைப்பற்றிய எனது தனிப்பட்ட பார்வைகளைத் தரலாமென்று விருப்பப்படவே இந்தப்பதிவு தோன்றிற்று.
போட்டிக்கான புகைப்படம் இதோ :
4 மணிவரைதான் போட்டி என்று அறிவித்திருந்தார். 4. 17 மணிக்கு போட்டி முடிந்துவிட்டதாக அறிவித்துவிட்டதால் கமெண்டுகளின் வருகைகள் அதன்பிறகு குறைந்துவிட்டன. ஆனாலும் 5.27 வரை கமெண்டுகள் வந்து கொண்டே இருந்தன.
ஒருவரே எத்தனை கமெண்டுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம் என்று அறிவித்திருந்ததால் ஒருவரே அதிகமான எண்ணிக்கையில் கமெண்டுகளை அனுப்பியிருந்தனர்.
நான் அனுப்பிய மற்றும் எனக்குப் பிடித்த கமெண்டுகளை இங்கே தருகின்றேன்.
நான் முதலில் ஒரே ஒரு கமெண்டு அனுப்பிவிட்டு பின்னர் எத்தனை கமெண்டு வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற விதிமுறையைக் கண்டு தொடர்ந்து அனுப்ப ஆரம்பித்தேன்.
என்னுடைய கமெண்டுகள்:
கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?
நீ தலைவியா? தலைவலியா?
எந்தத் திருவள்ளுவனின் படைப்பு நீ?
நெற்றிக்கண்ணால் இடஒதுக்கீடு வாங்கிவிடுவாயோ?
நீ தூங்கும் நேரத்தில் நீ முழிப்பாய்
போதை மருந்து பிடிபட்டது - இப்படிக்கு - இலாகா
இரண்டும் நீயாக இரண்டு காதலி வேண்டும்
லிதகா னிவக ல்நி
ஒன்றும் ஒன்றும் ஒன்று
கோடீசுவரியா? கேடீசுவரியா?
நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?
சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?
4 மணிவரை காதலி
ஆச்சர்யம் ஒரே வானம் இரண்டு நிலவு
பேதை நீ பார்க்க போதை எனக்கா?
விழிகள் விமர்சனமாகின்றது
காதலோ? கள்ளோ?
நான் அனுப்பியவற்றில் எனக்குப் பிடித்தது :
கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?
நீ தலைவியா? தலைவலியா?
சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?
நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?
கொஞ்சம் கர்வப்பட்டேன். எப்படியாவது இவற்றுள் ஒன்று தேர்வு செய்யப்பட்டு விடும் என்று. ஆனால் லக்கிலுக் முந்திக்கிட்டாருங்க. என்ன செய்ய நம்ம காசுல டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டியதுதான்.
நான் ரசித்த மற்றவர்களின் கமெண்டுகள் :
RAANA MONAA :
நீ குவளைக் குமரியா? இல்லை
குவார்ட்டர் குமரியா?
சார் டிக்கட்டை யார்க்கு வேணா அனுப்புங்க
ஆனா அந்தப்பொண்ணோட ஜாதகத்தை எங்க அம்மாவுக்கு அனுப்புங்க
வலைஞன்
மயங்குகிறாள் ஒரு மாது
பார்வைகள் பலவிதம்
Dev
மவனே சிக்குன தனியா
அவ்வளவுதான் சிக்கன் குன்யா
கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்குச் சொந்தமில்லை
விழியன்
கே. எஸ். ரவிக்குமார்கிட்ட இந்தப்படத்தைக்
காட்டிடாதீங்க. அடுத்த படத்துல
ஜோதிகாவுக்கு நாலு கண்ணுவச்சு ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு போட்டுற போறாரு
என் சுரேஷ்
இப்பவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
மதுமிதா
கேமிராவுக்கே போதையா
லக்கிலுக்
கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்
பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்
இவளிடம் லிப் டு லிப்
கிஸ் அடிப்பது எப்படி?
நிலா ரசிகன்
நான்கு விழியால் காதல் கொலை
தலைசுற்ற வைத்து பின் இதயம் சுற்றச் செய்
மின்னுது மின்னல்
Error 404
ஜெஸிலா
தலைவலி மருந்தே தலைவலியானால்
அருட்பெருட்கோ
முத்தம் ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
அம்புடன் 4 கண்கள்
டுபுக்கு
இதென்ன ஆடித்தள்ளுபடியா
எதை விடுவது எதை எடுப்பது?
இவற்றுள் இறுதியாக 3 தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது லக்கிலுக் எழுதிய "கிர்ர்ர்ருன்னு ஒரு காதல் " பரிசுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசு சம்பந்தமாகவே அவருடைய கமெண்டும் ரசிக்கும்படி இருந்ததால் அவருடையது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். ஆகவே லக்கிலுக் அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 கமெண்டுகளையும் தந்திருந்தால் கொஞ்சம் உற்சாகமாக இருந்திருக்கும். கௌதம் சொல்லுவாரா?
எத்தனை பேர்களின் எண்ணங்களிலிருந்தும் எத்தனை விதமான கமெண்டுகள் பாருங்களேன். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கின்றது.
இந்த போட்டியில் நீங்கள் நடுவராக இருந்தால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கமெண்டுகளில் இருந்து எதனைத் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள் கொஞ்சம் சொல்லிட்டுப்போங்கப்பா ப்ளீஸ்..
நீங்க சொன்னதில இருந்து என் மனசுல உள்ள அந்தப் பரிசுக்குரிய கமெண்ட் பொருத்தமாக இருந்தால், உங்களை சூர்யா - ஜோதிகா வின் கல்யாணத்திற்கு அழைத்துச் செல்கின்றேன்.
எனக்கும் சூர்யா - ஜோதிகா அழைப்பிதழ் வந்துச்சுப்பா.."வேண்டாம் சார் நீங்க பிஸியா இருப்பீங்கன்னு" சொன்னாலும் கேட்காம அடம்பிடிச்சு அனுப்பி வச்சுட்டார் சூர்யா.
- ரசிகவ் ஞானியார்
23 comments:
My choice
கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்கு சொந்தமில்லை ... Dev
எங்கள் தலையை பெருமைப்படுத்திய நிலவுக்கு நன்றி
லக்கியார் இலக்கிய பேரவை
அண்ணன் லக்கியார் ரசிகர் மன்றம்
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா
ராசுக்குட்டியின்,
1)இவள் கண்ணடித்து சிரித்தாள்!
2)இவள் கண்ணடித்து சிரித்தால்?
என்ற கமெண்டை நான் மிகவும் ரசித்தேன்.
எனக்கு பிடித்தது...
இப்பவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி
இறுதிவரை வந்து பriசுக்கு மல்லுக்கட்டிய ஐந்து கமெண்ட்டுகளில் ஒன்று உங்களுடையது.
அது..
'லிதகா னிவக ல்நி'
//லக்கியார் இலக்கிய பேரவை
அண்ணன் லக்கியார் ரசிகர் மன்றம்
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா //
லக்கி உண்மையிலேவே லக்கிதான். உலகமெல்லாம் அவருக்கு பேரவையா?
நாமக்கல் சிபியின் ரசனை வித்தியாசமாக இருக்கின்றது. நன்றி
இரட்டை மகிழ்ச்சியான செந்தழல் ரவிக்கும் நன்றிங்கோ
//லிவிங் ஸ்மைல் said...
My choice
கண்ணோடு காண்பதெல்லாம்
கண்களுக்கு சொந்தமில்லை ... //
ம் எனக்கும் தேவ் எழுதிய இந்த கமெண்ட் பிடித்திருந்தது. நன்றி
// ஜி கௌதம் said...
இறுதிவரை வந்து பriசுக்கு மல்லுக்கட்டிய ஐந்து கமெண்ட்டுகளில் ஒன்று உங்களுடையது.
அது..
'லிதகா னிவக ல்நி' //
எல்லாரும் படத்தை பார்த்து தலைசுற்ற எழுத்தையே தலைசுற்றவைத்தால் என்ன என்று தோன்றியதால் அப்படி எழுதினேன்.
நன்றி கௌதம்
// ஜி கௌதம் said...
இறுதிவரை வந்து பriசுக்கு மல்லுக்கட்டிய ஐந்து கமெண்ட்டுகளில் ஒன்று உங்களுடையது.
அது..
'லிதகா னிவக ல்நி'
//
மற்றொன்று...???
idhellam nall irundhadhu..
கண்கள்
கள்ளடித்துவிட்டதா என்ன?
மயக்குகிறாள் ஒரு மாது
ஐயோ, ஒரு பொம்பளைக்கு ரெண்டு வாயா............?
ஓபியம் சாப்பிட்டேன் ஓவியம் தெரிந்தது
That was something different from you.
இயல்பாகவே போட்டிக்காக என்றுதான் மறுமொழிகள் குவிந்தன. ஆனால் போட்டி முடிந்த பிறகு அன்றைய தினமே இரண்டாவது பதிவு இட்டதால் ஏற்பட்ட தேதிக் குழப்பத்தாலோ என்னவோ பிளாக்கரின் தனிப்பதிவு செயலிழந்திருந்ததில் அதன்பிறகு தமிழ்மண மறுமொழி நிலவரத்தில் கௌதமின் பதிவு வெகு நேரம் காட்டப்படவில்லை. அதுவும் மறுமொழிகள் பின்னர் குறைந்திருக்க காரணம்.
நானே சுமார் 50 பதில்கள் எழுதி வைத்தேன். இங்கே 3 மணி முதல் 4.30 வரை மின்சாரம் தடைப்பட்டதில் என்னால் பிறகு அதில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
லக்கி தான் பரிசு பெறுவார் என்று முதலிலேயே எனக்குத் தோன்றியது.
என் சாய்ஸ்
ஓபியம் சாப்பிட்டேன் ஓவியம் தெரிந்தது
உங்களுடைய 'லிதகா னிவக ல்நி' நல்ல ஐடியா! ஆனால் வாசகம் இன்னும் சற்று பொருத்தமாக இருந்திருக்க வேண்டும்.
// மின்னுது மின்னல் said...
மற்றொன்று...??? //
அதெல்லாம் தொழில் ரகசியம் சொல்லச்கூடாதுங்க..
சரி சரி போகட்டும் உங்களுக்காக நம்ம கௌதம் இப்போ சொல்லுவாரு பாருங்க.. :)
//
கார்த்திக் பிரபு said...
idhellam nall irundhadhu..//
ம் உங்களோட செலக்ஷன் நல்லாவே இருக்குது. புத்திசாலிகள் ஒரே மாதிரி சிந்திப்பாங்களாமே உண்மையா?
//priya said...
That was something different from you. //
உங்களுக்கு பிடிச்சது எதுவுமே எழுதலையா?
//நானே சுமார் 50 பதில்கள் எழுதி வைத்தேன். இங்கே 3 மணி முதல் 4.30 வரை மின்சாரம் தடைப்பட்டதில் என்னால் பிறகு அதில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போய்விட்டது.//
நல்லவேளை லக்கி லுக் தப்பித்தார்
//உங்களுடைய 'லிதகா னிவக ல்நி' நல்ல ஐடியா! ஆனால் வாசகம் இன்னும் சற்று பொருத்தமாக இருந்திருக்க வேண்டும். //
ம் எனக்கும் பின்னர்தான் தோன்றியது. நேரம் இல்லாததால் சிந்தனைகள் சுருங்கி விட்டது.
ada neengalum namalai madhiri puthisali thana?
ரசிகவ்,
இப்போதுதான் இந்தப் பதிவை வாசித்தேன்...
கமெண்டுகள் நிறைய கவிதையாகவே இருந்தன...எல்லாவற்றையுமே ரசித்தேன்!
ஆனால் அது "நச்"சுனு இருக்கனும்னு கௌதம் சொன்னதால் லக்கிலுக்கின் கமெண்ட் பரிசுக்குரியதாக தேர்வானது சரியான முடிவென்றே நினைக்கிறேன்...
// அருட்பெருங்கோ said...
ரசிகவ்,
இப்போதுதான் இந்தப் பதிவை வாசித்தேன்...//
நன்றி அருட்பெருட்கோ..
சொல்லில்லாத மனிதனும் இருக்கலாம் இப்பொழுது செல்லில்லாமல் யாரும் இல்லை.
Enakku ungaloda antha lithakaa nivaka lni thaan rombavee pidiththirunthathu. naan naduvaraanaal athai thaan theritheduppeen.
mudivai sollave illaiyee
பரிசுக்கு மல்லுக்கட்டிய இன்னும் மூன்று கமெண்ட்டுகளை அவரவர் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். சில விஷயங்கள் அப்படியே இருப்பதுதான் அழகு!
அப்புறம் இன்னொரு தகவல்.. அடுத்த தடாலடி பரிசுப்போட்டி அநேகமாக வரும் சனிக்கிழமையே இருக்கலாம். பரிசு இன்னும் முடிவாகவில்லை, ஆகிவிட்டால் வெள்ளிக்கிழமையே அறிவிக்கத் திட்டம். :-)
My Choice:
நீ இறைவனின் இலக்கணப்பிழையா?
தலை கண பிழையா?
Post a Comment