Tuesday, August 08, 2006

சின்னச்சின்னச் சுவாரசியங்கள் - I

குற்றால சீசன் களைக்கட்டி வருகின்றது. மக்கள் கோடையின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக குற்றால அருவிக்கு வந்து தங்களை நனைத்துக்கொள்கின்றனர். குற்றால அருவியானது ஏழைகளின் நயாகராவாகத் திகழ்கின்றது.

நான் சென்ற வருடத்தில் மட்டும் மூன்று முறை சென்று விட்டேன். எப்பொழுதும் ரசிக்க வைக்கும் யானை - கடல் - ரயில்களின் வரிசையில் இந்த அருவியையும் சேர்த்துக்கொள்ளலாம்..

இப்படி மக்கள் கூட்டம் கூட்டமாய் குளித்துக்கொண்டிருக்கும் குற்றால அருவியில் பிரிட்டிஷ் காலத்தில் நம் மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட விசயம் யாருக்கேனும் தெரியுமா?

ஆங்கிலேயர்களைத் தவிர யாரும் அங்கே குளிக்கக் கூடாது என்று ஆங்கிலேயர்கள் அங்கு ஆணையிட்டனர். அதனால் அதனைச் சுற்றி உள்ள மக்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர். நம்முடைய நாட்டில் உள்ள அருவியில் குளிப்பதற்கு மண்ணின் மைந்தர்களான நமக்கே தடையா..? இது என்ன கொடுமை என்று சுற்று வட்டார மக்கள் கொதித்துப்போய் திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆந்த நீதிமன்றமோ ஆங்கிலேயர்க்ள குளிக்கும்பொழுது தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அருவிக்கு அருகே உள்ள ஆலயத்தில் வேண்டுமானால் ஆங்கிலேயர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வழிபாடுகள் செய்து கொள்ளலாம் என்று ஆணையிட்டது.

இந்தப்பதிலில் திருப்தியடையாத தென்காசி மற்றும் திருநெல்வேலி மக்கள் 1915 ம் ஆண்டு பிரிவி கவுன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர்.. அங்குள்ள ஸர் அனல்ட் என்ற நீதிபதி அருவி என்பது பொதுவானது.

ஆகவே ஆங்கிலேயர்கள் அங்கு இரண்டு மணி நேரமே நீராடலாம் அது மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் திருவிழாக்காலங்களில் அங்கு குளிக்க கூடாது என்று தீர்ப்பளித்ததோடு இல்லாமல் ஹரிஜனமக்கள் தவிர யார் வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று ஆணையிட்டது.

பின்னர் 1938 ம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண பிரதமராக இருந்த காலத்தில் ஹரிஜனங்களும் இங்கே குளிக்கலாம் என்று தடையை நீக்கினார்.

நாம் உல்லாசமாய் குளித்து வருகின்ற இந்த அருவிக்குப்பின்னால் எத்தனை ரணங்கள் இருக்கிறது பார்த்தீர்களா?. ஆகவே இனிமேல் குற்றாலத்திற்கு சென்றால் உடலில் நீரை நனைத்துவிட்டு மனசில் ராஜாஜியையும் நினைத்துப் பாருங்களேன்

- ரசிகவ் ஞானியார்

7 comments:

துபாய் ராஜா said...

அறிந்த அருவி.அறியாத செய்தி.
சுவாரசியங்கள் தொடரட்டும் ஞானியார்.

Sridhar Harisekaran said...

உடலில் உள்ள அழுக்கையும், உள்ளத்தில் உள்ள அழுக்கையும் முழுமையாக கழுவ வேண்டிய இடம் குற்றாலம்.

-- ஸ்ரீதர்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி துபாய் ராஜா..

எல்லா விசயங்களுமே இப்பொழுது அறியப்படுகின்ற நேரம்..என்ன புரியுதா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//உடலில் உள்ள அழுக்கையும், உள்ளத்தில் உள்ள அழுக்கையும் முழுமையாக கழுவ வேண்டிய இடம் குற்றாலம்.

-- ஸ்ரீதர்

//

உடல் அழுக்கு..ஓகே..

உள்ள அழுக்கு எப்படிப்பா நீங்குது..புரியலையே

தாணு said...

புது மாப்பிள்ளை கூட பழைய துடிப்புடன் எழுத ஆரம்பிச்சுட்டீங்க. எனக்கு இன்றுதான் உங்கள் பதிவுகள் வாசிக்க முடிந்தது. தொலைபேசியில் பேச முடியாமல் போனதுக்கு வருந்துகிறேன். இல்லறம் நல்லறமாகட்டும்.
வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

சின்னச் சின்ன சுவாரஸ்யங்கள் தொடரட்டும்.. வலைப் பதிவிலும் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி தாணு..

நன்றி பொன்ஸ்..என்ன ஏதோ பொடி வச்சு பேசுற மாதிரி இருக்கு..?

தேன் கூடு