இந்த வார குங்குமம் ( 13.08.06) பக்கம் 88 ல் என்னுடைய படைப்பு ஒன்று வந்திருக்கின்றது. நவரச சிறப்பிதழுக்காக நண்பர் பாலபாரதியும், விக்கி என்ற ப்ரியனும் குங்குமத்தில் உள்ள நண்பர் கேட்டதற்கிணங்க என்னிடம் ஏதாவது ஒரு நவரசத்தைப்பற்றி எழுதச்சொல்ல, நான் "காதலை பற்றி எழுதலாமா?" என்று அவரிடம் கேட்க
"யாரைக்கேட்டாலும் இதத்தான் சொல்றாங்க..வேற ஏதாவது தலைப்பை எடுங்கப்பா" என்று கூற
"தெரிஞ்சதைத்தானே எடுக்க முடியும்..சரி சோகம் பற்றி எழுதவா" என்க
"ம் எழுதுங்க எனக்கு நாளைக்கே வேணும்" என்று கண்டிப்பாய் கூறினார்.
குங்குமம் இதழில் நமது படைப்புகள் வருகிறது என்பது சாதாரண விசயமா..? எப்படியாவது எழுதிக் கொடுத்துவிடவேண்டும் என்ற ஆவலில் இன்றுவரை என்னைச்சுற்றி நடந்த சின்னச் சின்னச் சோகம் பற்றி எழுதலாம் என்று தீர்மானித்தேன்.
நான் துபாயில் இருக்கும்பொழுது என்னுடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் நண்பர் ஒருவர், தனது தாயாரின் மரணத்திற்கு கூட செல்லமுடியாமல் தவித்ததைப்பற்றி எழுதினேன்.
சரி எதற்கும் மகிழ்ச்சியைப்பற்றியும் எழுதலாம் என்று தீர்மானித்து கல்லூரி நாட்களில் நடைபெற்ற ஏற்கனவே வலைப்பூவில் எழுதிய சில சுவாரசியமான கல்லூரிக் கிண்டல்களைப்பற்றி எழுதினேன்.
3 படைப்புகள் தயார் செய்து நண்பர் விக்கியின் மூலமாக பாலபாரதிக்கு அனுப்பி குங்குமம் நாளிதழுக்கு அனுப்பச்செய்தேன். அவர்கள் சோகத்தை விட்டுவிட்டு கல்லூரி நாட்களில் நடைபெற்ற கிண்டலான சம்பவத்தை தேர்ந்தெடுள்ளார்கள்.
எனது படைப்புகள் மட்டுமல்ல அன்புடன் குழுமத்தின் உறுப்பினர்களின் ( ரசிகவ் - விழியன்- ஜெஸிலா - ஜொள்ளுப்பாண்டி - நிலா )படைப்புகள் பெருன்பான்மையாக இடம் பெற்றுள்ளன.
தேர்ந்தெடுத்து பிரசுரம் செய்த நண்பர், குங்குமம்பொறுப்பாசிரியர் கௌதம் மற்றும் நண்பர் பாலபாரதி மற்றும் விக்கி அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதுபோன்று வலைப்பதிவாளர்களுக்கு குங்குமம் போன்ற பத்திரிக்கைகள் தருகின்ற ஆதரவுகளால் அவர்கள் மேலும் எழுதுவதற்கு தூண்டுகோலாக அமையும்.
இப்பொழுது வலைப்பதிவர்கள் மீதும் தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களின் பார்வை விழுந்துவிட்டது என்பதே வலைப்பதிவர்களின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.
இப்பொழுது பத்திரிக்கைகளே வலைப்பதிவினரின் பதிவுகளை தேர்ந்தெடுத்து தங்களுடைய பத்திரிக்கையில் பிரசுரிக்கும் அளவிற்கு வலைப்பதிவினர் வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
-ரசிகவ் ஞானியார்
22 comments:
congratulations
வாழ்த்துக்கள் நண்பா
//தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.//
உண்மையான உண்மை ஞானியார்.
படைப்புலகில் மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ரசிகவ். படைப்பாளிகளில் 5 பேர் அன்புடன் குழும
அன்பர்கள் என்பதில் பெருமகிழ்ச்சி.
valthukkal ragasiv ..andha idamperr padaipaiyum ingey poturukkalamey..nangalum padipom allava
//valthukkal ragasiv ..andha idamperr padaipaiyum ingey poturukkalamey..nangalum padipom allava //
நன்றி கார்த்திக் ..புக் விற்பனை ஆக வேண்டாமா தலைவா..?
//ப்ரியன் said...
வாழ்த்துக்கள் நண்பா //
எப்போதுமே முன்னுக்கு நிற்கிறாய் நண்பா..வாழ்த்துவதிலும் சரி ஊக்கமளிப்பதிலும் சரி
// அனிதா பவன்குமார் said...
congratulations //
நன்றி அனிதா..
உங்களுடைய படைப்பும் வந்திருக்கிறதே..அதற்கும் என் வாழ்த்துக்கள்.
soory idhu ennaku thonama pochey ..sari aduth vaarm pdhivi idunga ok ya?
thlaiva page no sollunga
இன்றுதான்...
உங்கள் படைப்பு பார்த்தேன் .. அருமை...
வாழ்த்துக்கள் ... உங்களுக்கு..
நன்றி ப்ரியனுக்கு ....
//தனி மனித துவேசம் - மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற ஈனச்செயல்களை மட்டும் தவிர்த்துக்கொண்டால் வலைப்பதிவுகளின் வளர்ச்சிகள் பிரமிக்கவைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
//
தாங்கள் சொல்லுவது உண்மையே,
நானும் குங்குமத்தில் நமது வலை நண்பர்களின் எழுத்துக்களைப் பார்த்து சந்தோசப்பட்டேன்,எனது நண்பர்களிடமும் காண்பித்து பெருமைப்பட்டுக் கொண்டேன்.
நண்பர் ரசிகவ் ஞானியாருக்கும் மற்றைய அனைத்து வலப்பூ நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
அன்புடன்...
சரவணன்.
வாழ்த்துகள் ஞானியார். உங்கள் படைப்பைப் படிக்கவும் ஆவல் உள்ளவனாக உள்ளேன்.
Congrats buddy!!!
I am little/very late to wish you. I have missed a lot of your posts hmmm.
/*பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.*/
முற்றிலும் உண்மை...
மிக்க மகிழ்ச்சி...
/*பத்திரிக்கைக்கு படைப்புகளை அனுப்பி திருப்பி அனுப்பப்பட்டு தங்களது திறமைகளை எந்த வகையிலாவது வெளிகொணர்ந்து விடமாட்டோமா என்று ஏங்கியவர்களுக்கு இந்த வலைப்பதிவுகள் ஒரு வடிகாலாக விளங்குகின்றது.*/
முற்றிலும் உண்மை...
மிக்க மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் நண்பரே!இன்னும் வளர வாழ்த்துக்கள்!
உங்கள் சிங்கை வானொலிக் கவிதை கேட்டேன்.மனதைத் தொட்டு விட்டீர்கள்!
மிக நன்றாய் இருந்தது! அந்த குரல் அதற்கு மேலும் இனிமை சேர்த்தது.
வாழ்த்துகள் நண்பரே
அன்பு ரசிகவ் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கெளதம், பாலபாரதி மற்றும் விக்கிக்கும் நன்றி.
முத்தமிழ் மற்றும் நம்பிக்கை குழுமம் சார்பாகவும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்!!!
தொடர்ந்தும் பல வெகுசனப் பத்திரிகையில் உங்கள் ஆக்கங்கள் வரட்டும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்
My hearty Congrates!!
Post a Comment