நான் ஏற்கனவே ஒவ்வொருவரின் கல்லறைகளிலும் ஒரு வாசம் எழுதினால் என்ன எழுதியிருப்பார்கள் என்று எழுதியிருந்தேன். அதுபோல ஒவ்வொருவரும் காதலித்தால் அவர்களின் துறைக்கு தகுந்தவாறு எவ்வாறு காதல் கவிதைகள் எழுதுவார்கள் என்ற ஒரு கற்பனை. முதன் முதலாக ஒரு மெடிக்கல் ரெப் பற்றிய காதல் கவிதை.
மெடிக்கல் ரெப்பின் காதல் கவிதை
எக்ஸ்ப்ரஸில் சென்றுவிட்ட
பருந்தே!
எக்ஸ்ப்யரி[Expiry] டேட்
முடிந்து போன மருந்தே!
கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..
அடுத்து விவசாயியின் காதல் கவிதை. அவ்வப்போது நேரம் கிடைக்கும்பொழுது "இவர்கள் காதலித்தால்..." தொடர்ந்து கொண்டிருக்கும்.
விவசாயியின் காதல் கவிதை
என்னைப்
பேசவிடாமல் செய்த
அவள் கண்கள் ஒரு
பூச்சி கொல்லி மருந்து!
இல்லை இல்லை
பேச்சி கொல்லி மருந்து!
காத்திருடி!
அறுவடைக்காசிலே
அமெரிக்கா போவோம்..
இல்லை..இல்லை
உல்லாசமாய் போவோம்
உழவர்சந்தைக்கு!
பயிர் வாழ
நீர் தேவை - என்
உயிர் வாழ
நீ தேவை
உன்னுடைய
தற்காலிகப்பிரிவில்...
என் வயல்வெளிகள்
போக்ரானாய் மாறும்
ஆனால்
நிரந்தரமாய் பிரிந்துவிட்டால் என்
டெய்லி வாழ்க்கை
டெமக்ரானோடுதான்!
அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..
- ரசிகவ் ஞானியார்
17 comments:
//கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..//
ஆமா ஞானியார்.நிறையபேர்
இப்படித்தான் சொல்லிகிட்டு திரியுறாய்ங்க.
//பயிர் வாழ
நீர் தேவை - என்
உயிர் வாழ
நீ தேவை.//
அருமை.
//அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..//
இதுதான் நம்ம ஊர் 'பஞ்ச்'.
தொடர்ந்து காதலிக்க வாழ்த்துக்கள்.
wow very nice..
plz continue..
நல்ல யதார்த்தமும், நகைப்பும்
வணக்கம் நண்பரே...கவிதைகள் நன்று...........தொடருங்கள்.........
நிறைய அன்புடன்
வீரமணி
//புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே..//
//அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே//
நல்ல உவமை.படித்தவுடன் உதட்டில் புன்னகை வரவழைத்த வரிகள் இவை.
நம்ம ஆளுங்களைப் பத்தி ஒரு கவிதை எழுதினதுக்கு நன்றிங்க ரசிகவ். தொடர்ந்து இதைப்போலவே எழுத வாழ்த்துக்கள்
கலக்கல் சிந்தனை
Thoughtful
//எக்ஸ்ப்ரஸில் சென்றுவிட்ட
பருந்தே!
எக்ஸ்ப்யரி[Expiry] டேட்
முடிந்து போன மருந்தே!
//
ஆஹா!
ரசிகவின் பழைய டிரேட்மார்க் கவிதைகள்!
வாழ்த்துக்கள் நிலவு நண்பரே!
அன்புடன்...
சரவணன்.
//ஆமா ஞானியார்.நிறையபேர்
இப்படித்தான் சொல்லிகிட்டு திரியுறாய்ங்க.//
ஆமா துபாய் ராஜா..
சமீபத்துல கல்யாணம் ஆகி துபாய்க்கு போனவங்களும் இப்படித்தான் புலம்புறாங்களோ..? :)
// Anitha Pavankumar said...
wow very nice..
plz continue.. //
நன்றி கண்டிப்பாக தொடர்வேன்.
/ வீரமணி said...
வணக்கம் நண்பரே...கவிதைகள் நன்று...........தொடருங்கள்.........
நிறைய அன்புடன்
வீரமணி //
நிறைய நன்றி வீரமணி..
//நல்ல உவமை.படித்தவுடன் உதட்டில் புன்னகை வரவழைத்த வரிகள் இவை.
நம்ம ஆளுங்களைப் பத்தி ஒரு கவிதை எழுதினதுக்கு நன்றிங்க ரசிகவ். தொடர்ந்து இதைப்போலவே எழுத வாழ்த்துக்கள் //
நம்ம ஆளுங்கன்னு மெடிக்கல் ரெப்பைச் சொல்றீங்களா இல்லை விவசாயியைச் சொல்றீங்களா இளா?
//தம்பி said...
கலக்கல் சிந்தனை //
நன்றி அண்ணா..
//ஆஹா!
ரசிகவின் பழைய டிரேட்மார்க் கவிதைகள்!
வாழ்த்துக்கள் நிலவு நண்பரே!அன்புடன்...
சரவணன். //
ம் சரவணன்.. எப்பொழுதும் போல் தொடர்வேன்..
//அய் ஆர் எட்டே! - நம்
காதலை எதிர்த்தால்
உன்
அய்யாவுக்கும் வெட்டே..//
ஞானியாரின் குறும்பு முகமும் நல்ல கற்பனை திறனும் வெளிச்சமாகிறது. ரசித்தேன்.
மத்தவங்க எல்லாம் எப்பங்க வரப் போறாங்க?
//காத்திருடி!
அறுவடைக்காசிலே
அமெரிக்கா போவோம்..
இல்லை..இல்லை
உல்லாசமாய் போவோம்
உழவர்சந்தைக்கு!//
"காத்திருடி!!
அறுவடைக்காசிலே
உல்லாசமாய்
u.s போவோம்....!!
america அல்ல....!
உழவர்சந்தைக்கு!!"
இப்படி வந்திருக்கலாமோ??
சிறியவன் பிழை இருப்பின் மன்னிக்கவும்...!!
//shamsulhaq said...
Thoughtful //
நன்றி சம்சுல்..
//"காத்திருடி!!
அறுவடைக்காசிலே
உல்லாசமாய்
u.s போவோம்....!!
america அல்ல....!
உழவர்சந்தைக்கு!!"//
இப்படியும் எழுதலாம் ஆதவன். ஆனால் எனக்கு அந்த சிந்தனை வரவில்லையே..
அது உங்களின் சிந்தனையில் தோன்றியிருக்கின்றது. இதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது.
கடைசிவரைக்கும்
புரியவேயில்லையடி
உனது காதல்
அந்த டாக்டரின் கையெழுத்துப்போலவே
Post a Comment