Saturday, August 19, 2006

சிக்னலில் பெண் தேவதைகள்


திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வாகனங்கள் நின்றாலும் அங்கு ஒரு பெண் போலிஸார்களை பணியில் பார்க்கலாம்.. எல்லா வாகனங்களும் இவர்களின் கை அசைவுக்கு கட்டுப்படுகின்றன.


இன்று காலை 9மணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை இரயில்வேகேட் அருகே பெண் போக்குவரத்து போலிஸார்கள் இரண்டு பேர் ரெட் சிக்னல் கொடுக்க , நான் சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன் . அப்பொழுது பெண் போலிஸார்களை அலட்சியப்படுத்தி ஒரு நபர் கடந்து செல்ல அந்த பெண் போலிஸார்கள்: :ஹலோ சார் சார்;: என்று கத்த அந்த நபர் காதில் வாங்கிக்கொள்ளாமல் கடந்து சென்றார்.

நான் உடனே "ஹலோ வண்டி நம்பரை நோட் பண்ணுங்க.. "

"பார்த்துகிட்ட நிற்காதீங்க நம்பரை நோட் பண்ணுங்கம்மா" என்று அவர்களிடம் கூற

அந்த பெண் போலிஸில் ஒரு பெண், " ஹலோ எங்களுக்கு தெரியும்..நீங்க சொல்ல வேண்டாம்.. நாங்க நோட் பண்ணிக்கறோம்.. "என்க

அட நல்லதுக்கு சொன்னா புரிஞ்சுக்கமாட்டேங்கிறாங்களே என்று மனம் வருந்தியபடி அவர்களை நோக்கி திரும்பி ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு நான் வண்டியை சீறிக்கொண்டு வந்துவிட்டேன்.

அந்த பெண் போலிஸார்களின் இடத்தில் ஒரு ஆண் இருந்தால் என்ன ஆகியிருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

"டேய் டேய் நில்லுடா..சொல்லுறேன் போய்கிட்டே இருக்க..வண்டிய ஒதுக்குடா..வண்டிய ஒதுக்குடா" என்று தனக்குரிய வழக்கமான தினச்சம்பளத்தை வாங்கியிருப்பார்.

இப்பொழுது இந்தப்பணியில் அதிகமான பெண்போலிஸார்களை நியமனம் செய்திருக்கின்றார்கள். திருநெல்வேலியில் எந்த சிக்னலில் வந்து நின்றாலும் இந்தப் பெண் போலிஸார்கள்தான் பணியில் இருக்கின்றார்கள்.

சிக்கெடுத்த கூந்தலை
கிராப்பாக்கினாய்
சிக்குண்ட இதயத்தை
கிறுக்காக்கினாய்



சிக்னலில் நிற்பதற்கு
சிகப்பு விளக்கு தேவையில்லையடி
உன்
விழியின் வெளிச்சம் போதும்

ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்




இப்பொழுது திருநெல்வேலியின் ஒவ்வொரு சிக்னலிலும்; வாகனங்கள் அதிக நேரம் நின்று செல்வதாக தகவல். ஓருவேளை இவர்களை ரசித்து மெய்மறந்து நின்று விடுகின்றார்களோ? சரி அத விடுங்க..

இந்தப்பணியில் பெண்களை நியமிப்பதில் சாதகங்கள் மற்றும் பாதகங்களும் இருக்கின்றன


பெண் போலிஸார்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுகின்றார்கள். ஆனால் எல்லா சூழ்நிலைகளிலும் அவ்வாறு இருக்க இயலாது. (சில சமயம் ஆண் போலிஸார்களின் அறிவுரைகளின் பேரில் இவர்களும் கண்ணியம் தவறி நடக்க ஆரம்பிக்கின்றார்கள்)

லாரியை மடக்கி லஞ்சம் வாங்குதல் - அப்பாவி பைக்வாதிகளிடம் தினக்கூலி பெறுதல் -தேவையில்லாமல் வண்டியை ஒதுக்குதல் - போன்றவை தவிர்க்கப்படுகிறது

ஆனால் அவர்களின் கண்ணியமான கட்டளைகளையே தங்களுக்கு சாதகமான எடுத்துக்கொண்டு பெண் போலிஸார்கள்தானே என்று அலட்சியமாய் பொதுமக்கள் எல்லை மீறுகின்றார்கள்

அது மட்டுமல்ல இரவில் இவர்களால் வெகு நேரம் நின்று கொண்டிருக்க முடியாது. அது இவர்களின் கற்புக்கும் கடமைக்கும் ஆபத்து

பெண் போலிஸாருடன் கள்ளக்காதல் - பெண் போலிஸாருடன் தகாத முறையில் நடந்த தலைமைக் காவலர் கைது. என்றெல்லாம் செய்திகள் பத்திரிக்கையில் வரும்பொழுதுதான் அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கவலையாக இருக்கின்றது.




- ரசிகவ் ஞானியார்



14 comments:

Mani said...

போலீஸை மாமா என செல்லமாக அழைக்கிறோம். அதுபோல, இவர்களை அத்தை என அழைக்கலாமா அல்லது அக்கா என அழைக்கலாமா?

(சும்மா தமாசுக்கு தான்)

நெல்லைக் கிறுக்கன் said...

மக்கா,
நீரு இன்னும் நெல்லைல தான் இருக்கீரா? பொம்பள போலீசப் பத்தி சொல்லி ஆசய தூண்டி விட்டுட்டீரு.. இந்தியா வந்ததும் நெல்லைக்குப் போய் எல்லா சிக்னலயும் பாக்கப் போறேன்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்
///

நல்லா இருக்குங்க இது.

கார்த்திக் பிரபு said...

thalaivaa vlaiyil oru police kaaraum valai padhigiraar so jaakiradhayaa eludhunga!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//போலீஸை மாமா என செல்லமாக அழைக்கிறோம். அதுபோல, இவர்களை அத்தை என அழைக்கலாமா அல்லது அக்கா என அழைக்கலாமா?//

என்ன மணி அடி வாங்கப்போறீங்களா..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நெல்லைகிறுக்கன்: பொம்பள போலீசப் பத்தி சொல்லி ஆசய தூண்டி விட்டுட்டீரு.. இந்தியா வந்ததும் நெல்லைக்குப் போய் எல்லா சிக்னலயும் பாக்கப் போறேன்... //

சரி எந்த மருத்துவமனையில வந்து உங்களை பார்க்கலாம் நண்பா.?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
ஒவ்வொரு சிகனலிலும்
யார் போட்டது
மனித வேகத்தடைகள்


நல்லா இருக்குங்க இது. //

நன்றி குமரன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//thalaivaa vlaiyil oru police kaaraum valai padhigiraar so jaakiradhayaa eludhunga!!! //

அப்படியா..? யாரு அது நீங்களா? :)

கார்த்திக் பிரபு said...

nan illai avarai parri thrindhu koll avar valai padhivrkku poga ..numma doctor valaipadhivrkku ponga..adhu sari doctor yarunnavadhu thriyumaa?

Unknown said...

சிக்னலில் பைக்லே தனியாவே போனீரு... ம்ம் மக்கா அதான் இப்படி ஒரு தலைப்பிலே இப்படி ஒரு பதிவுப் போட்டிருக்கீரு...
நடக்கட்டும்வே

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dev said...
சிக்னலில் பைக்லே தனியாவே போனீரு... ம்ம் மக்கா அதான் இப்படி ஒரு தலைப்பிலே இப்படி ஒரு பதிவுப் போட்டிருக்கீரு...
நடக்கட்டும்வே //



யோவ் என்னவே வம்புல மாட்டி விடுறீரு?

ராம்குமார் அமுதன் said...

அன்பின் ரசிகவ்..... உங்கள் அத்துணை பதிவுகளையும் இன்று தான் படித்தேன்..... அருமையிலும் அருமை...... நானும் நெல்லைக்காரன் தான்...... தற்பொழுது தாங்கள் இருப்பது துபாயிலா???

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// அமுதன் said...
நானும் நெல்லைக்காரன் தான்...... தற்பொழுது தாங்கள் இருப்பது துபாயிலா??? //



இல்லை நண்பா..தற்போது நான் நெல்லை மண்ணில்தான் இருக்கின்றேன்.

Anonymous said...

போலிஸ்காரர்கள் "மாமா" என்றால், லேடி போலிஸ் "அக்கா"வாக தானே இருக்க முடியும்

விஷய தானம்: உருப்படாத் நாரயணன்

http://urpudathathu.blogspot.com/2006/09/blog-post.html

தேன் கூடு