புன்னகையோடு
வரவேற்கின்ற
விமான பணிப்பெண்கள் ...
முன் இருக்கையிலிருந்து
சிரிக்கின்ற
குழந்தை...
பக்கத்து
இருக்கை பயணிகள் ...
சோகத்தை
யாரிடமுமே
கடத்திவிடாமல்
இயல்பு
மறைக்கும் அந்தப் பயணத்தில்,
நான்
கண்ணாடி
பெட்டியை உடைக்கும்
கண்ணீர்கள்
சுமப்பவன் என....
தெரிந்திருந்தால்
நிச்சயமாய் அறிவித்திருக்க
மாட்டார்கள்
Have a pleasant journey
என்று...
- ரசிகவ் ஞானியார்
2 comments:
சோகம் இழையோடுது
மிக்க நன்றி ராஜி
Post a Comment