Thursday, October 12, 2006

தீவிரவாதி எம்.பி.பி.எஸ்

நெல்லையில் கிளினிக் வைத்திருக்கும் பிரபல டாக்டர்கள் சிவராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் ஹரிசங்கர் ஆகியோர்கள் பற்றி ஒரு அதிர்ச்சியான தகவல்கள் தாங்க முடியாத தகவல்கள் சிக்கியுள்ளன.

Photobucket - Video and Image Hosting

டாக்டர் சிவராமகிருஷ்ணன் இருதயநோய் சிகிச்சை அளிப்பதிலும் மற்றும் பைபாஸ் அறுவைச்சிகிச்சையிலும் வல்லுனராக திகழ்ந்ததால் இவரைத்தேடி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பக்கத்து மாவட்டங்களிலிருந்தும் பலர் கூட்டமாக வர ஆரம்பித்தனர்.

"இருதய அறுவைச்சிகிச்சையா..அட நம்ம சிவராமன்கிட்ட போப்பா..நல்ல டாக்டர்."

என்று சொல்லுமளவிற்கு புகழ் வாய்ந்தவர் இந்த டாக்டர்.

இவரைப் பார்க்க வேண்டுமானால் முன் கூட்டியே அனுமதி வாங்கி டோக்கன் வாங்க வேண்டும் அந்த அளவிற்கு புகழ்பெற்ற இந்த கஸ்மாலம் செய்த வேலை என்ன தெரியுமா..?

சொல்றேன் கேளுங்க.. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நம்பிராஜன் என்பவர் உடல்நலம் குறைவு காரணமாக இவரைத்தேடி திருநெல்வேலிக்கு வந்திருக்கிறார். இவர் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் தனது மனைவியையையும் துணைக்கு அழைத்து வந்திருக்கின்றார்.

Photobucket - Video and Image Hosting

இந்த சூழ்நிலையில்தான் டாக்டர் சிவராமகிருஷ்ணனின் குறுக்குப் புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நம்பிராஜனின் மனைவி கிருஷ்ணவேணி மீது மோகம் கொண்டு அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றார்.

இதயத்தொடர்பு வைக்கச்சொன்னால்
ஏன்டா
கள்ளத்தொடர்பு வைத்தாய்?



ஒருநாள் நெஞ்சு வலி அதிகமாகி நம்பிராஜன் இறந்து போய்விடவே ( யாருக்குத் தெரியும் சிகிச்சை சரியாக கொடுக்காமல் அவனே கொன்றிருக்கக் கூடும் ) அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் டாக்டர் சிவராம கிருஷ்ணன். தினமும் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்குச் சென்று நம்பிராஜனின் மனைவிக்கு ஆறுதல் அளிப்பதுபோல சிகிச்சை அளிப்பதுபோல நடித்திருக்கின்றார்.


கணவன் இல்லாத அந்த மனைவியின் மீது பாசம் காட்டுவது போலவும் அவர்களின் குடும்பம் மீது பரிவு காட்டுவது போலவும் நடித்து கிருஷ்ணவேணியையும் அவளது மகள் 8 வயது வித்யாவையும் தூத்துக்குடியில் இருந்து இடம்மாற்றி நெல்லையில் டவுணில் தங்க வைத்துள்ளார். இவர்களுடைய தொடர்பும் சமூகத்திற்கு தெரியாமல் தொடர்ந்திருக்கின்றது.

அடேய் சிவராமகிருஷ்ணா..!
நோயைக் கொல்வாயென்று
நம்பி வந்தால்,

என் கணவன்
நம்பிராஜனையல்லவா
கொன்றுவிட்டாய்?

சிவன் இராமன் கிருஷ்ணன் என்று
இத்தனை கடவுள் பெயர்தாங்கிய
உன்னை
எந்தக் கடவுள் வந்து தண்டிப்பானோ?

மக்களுக்கு மட்டுமல்ல..
கடவுளுக்கே நீ எதிரியானாய்!

ஆம்..
சிவனுக்கு நீ அரக்கன்
இராமனுக்கு நீ இராவணன்
கிருஷ்ணனுக்கு நீ நரகாசுரன்



இந்நிலையில் கிருஷ்ணவேணியின் மகள் வித்யா தனது 13 வது வயதில் வயதுக்கு வந்துவிட அந்த டாக்டர் என்னும் அரக்கனின் காமப்பார்வை வித்யாவின் மீதும் விழுந்தது. தாயையும் மகளையும் சோர்த்து அந்த நாய் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான்.

Photobucket - Video and Image Hosting

இந்த நிலையில் டாக்டரின் மகன் ஹரிசங்கர் அந்த நாயும் ஒரு டாக்டர்தான். அந்த ஹரிசங்கருக்கு தந்தையின் கள்ள உறவு தெரிய வர அதனைத் தடுக்க முற்படாமல் அவனும் கிருஷ்ணவேணியின் மகள் வித்யாவை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டான் ( பின்னே சைத்தானுக்கு பிறந்தது எப்படி இருக்கும்? )



நீ பெற்ற
மருத்துவப் பட்டத்தை
கழிவறையின்
காகிதத்தோடு மாட்டிவிடு.

அது
அதற்குத்தான் லாயக்கு!

ஹரிசங்கரா
முகத்தில் கரி பூசிக்கொள்ளடா!


வித்யாவும் தனது நிலையை யாரிடமும் சொல்ல வெட்கப்பட்டு தவித்துக் கொண்டிருந்திருக்கின்றாள். சமுதாயத்தில் பணபலமும் ஆட்பலமும் புகழும் இருக்கின்ற இந்த டாக்டர்களைப்பற்றி சொன்னால் தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து நடுங்கி போயிருக்கின்றாள்.

இந்த விசயம் கிருஷ்ணவேணியின் மகன் ராஜாவுக்கு ( இவன் நம்பிராஜனின் முதல் மனைவிக்கு பிறந்தவன்) தெரிய வர அவன் அவமானம் தாங்கமுடியாமல் வித்யாவிடமும் கிருஷ்ணவேணியிடமும் அறிவுரை கூறி வாருங்கள் சொந்த ஊருக்கே சென்று விடலாம் என்று வற்புறுத்தி வர இந்த நிலையில் அவனும் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போய்விட்டான். அவனுக்கு வைத்தியம் பார்த்தது டாக்டர் சிவராமகிருஷ்ணன்தான்..என்ன சந்தேகப்படுகின்றீர்களா..? இருக்கலாம் ஒருவேளை அந்த டாக்டரே அந்த ராஜாவைக் கொன்றிருக்கலாம். யாருக்குத் தெரியும்.?

13 வயதிலிருந்து வித்யாவை இப்பொழுது 21 வயது வரையிலும் அந்த டாக்டர் சிவராமகிருஷ்னண் என்ற நாயும் அவனுக்குப்பிறந்த ஹரிசங்கர் என்ற நாயும் அனுபவித்து வந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் இன்னொரு பகீர் தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதாவது
இத்தனை ஆண்டுகளாக அவர்களது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்ற அழகான பெண் நோயாளிகளை மயக்க மருந்து ஊசி போட்டு பாலியல் கொடுமைகள் செய்திருப்பதாக புகார் வந்திருக்கின்றது. இவர்கள் மட்டுமல்ல இவர்களது நண்பர்களுக்கும் பெண்களை அனுபவிக்க ஏற்பாடு செய்திருக்கின்றார்கள் இந்த மாமாப் பயலுகள்.


இதயத்தை
சோதனையிடச் சொன்னால்
சோகம் இட்டுவிட்டாயடா..?

எனக்கு ஒரு சந்தேகம்
நீ இதயம் பொருத்துவதற்கு படித்தாயா
இல்லை
இதயம் பெயர்ப்பதற்கு படித்தாயா..?

ஒன்று தெரிந்து கொள்
நீ
மயக்க மருந்து கொடுத்தது
நோயாளிகளுக்கல்ல..

உன் மருத்துவத்தொழிலுக்கு!


அந்த நாய்கள்இப்பொழும் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டதாம். மும்பையில் யாரேனும் பார்த்தால் தயவுசெய்து நாய் பிடிக்கும் வாகனத்திற்கு தொலைபேசி செய்யுங்கள்.

அந்த மருத்துவமனைகளை இப்பொழுது சீல் வைத்து விட்டார்கள். அங்குள்ள நர்சுகள் எல்லாம் இப்பொழுது வேலை வேண்டாம் கற்பு போதும் என்று ஓட்டம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மருத்துவர்களை முழுவதுமாய் நம்பி தன்னுடைய உடலையே அவர்களிடம் பரிசோதிக்க ஒப்படைக்கின்றார்கள் மக்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற இந்த துரோகம் மனித கலாச்சாரத்திற்கே கேவலமான செயல்.

பிறந்த குழந்தையை பார்க்கின்ற பார்வையில் அந்த டாக்டர்களின் பார்வை மற்ற நோயாளிகளின் மீது வேண்டும்.

திருநெல்வேலி மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களில் இந்த டாக்டர்களிடம் சென்று சிகிச்சை எடுத்த எல்லாரும் இப்பொழுது வெளியில் வருவதற்கே வெட்கப்படுகின்றார்கள். இந்த மருத்துவனிடம் தானும் சிகிச்சை எடுத்தோமே என்று அவமானப்பட்டு துடிக்கின்றார்கள்.

எவ்வளவு பிரபலமாய் இருந்த இந்த டாக்டர்களா இப்படிச் செய்தார்கள் என்று திருநெல்வேலி மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். திருநெல்வேலி முழவதும் இப்பொழுது இந்த நாய்கள் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்குள்ள மக்களால் இந்த விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கொதித்துப்போயிருக்கின்றனர் திருநெல்வேலி மக்கள்.

புனிதமான மருத்துவத்தொழிலைக் கேவலப்படுத்திய இந்த நாய்களை என்னங்க பண்ணலாம்.?

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மருத்துவத்தொழிலின் புனிதத்தை பற்றி விளக்கி வகுப்புகள் எடுக்கவேண்டும். சும்மா பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது..

ஆனால் இப்பொழுது மருத்துவத்தொழிலில் பணம் மட்டுமே முக்கிய பிரதானமாக கொண்டு இயங்கி வருகின்றது. இந்த நிலைகள் மாறவேண்டும். உயிர் காக்கின்ற செயல்களில் மருத்துவர்கள் ஈடுபடுவதால் அவர்களை மக்கள் மிகப்பெரிய கண்ணியத்திற்கு உயர்த்தியிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கின்ற துரோகம் மன்னிக்க முடியாதது.

இந்த மருத்துவர்கள் அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி தந்துவிட்டார்கள்.

இனிமேல் எந்த நம்பிக்கையில் மருத்துவர்களை நாடிச் செல்வார்கள் மக்கள்.?

ஆகவே உடல் ரீதியான சோதனைகள் நடைபெறும்பொழுது அந்த பெண் நோயாளியுடன் இன்னொருவர் துணைக்குச் செல்ல வேண்டும்.

அல்லது

பெண் நோயாளிகள் ஆண் மருத்துவர்களிடம் செல்வதை முற்றிலுமாய் தவிர்ப்பதுதான் இதற்கு சிறந்த வழி.

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் மற்றும் நகரங்களில் உள்ளவர்கள் மருத்துவர்கள் மீது மடத்தனமாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். மருத்துவர்களும் சாதாரண உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்ட மனிதர்கள்தான் என்பதை உணராமல் அவர்களை கடவுள் அளவிற்கு உயர்த்தி வைத்திருக்கின்றார்கள்.


சட்டம் இந்த மருத்துவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கவேண்டும். இதுபோன்று வருங்காலத்தில் யாரும் இப்படி செய்யக்கூடாது அந்த அளவிற்கு இவர்களது தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும்

இவர்களை சாதாரணமாய் சிறையில் அடைத்துவிடக்கூடாது. பின் என்ன செய்யலாம்?

இதுவரை அந்த டாக்டர்கள் மருத்துத் தொழிலில் சம்பாதித்த அனைத்துச் சொத்துக்களையும் முடக்க வேண்டும்

அந்த டாக்டர்களின் மருத்துவச் சான்றிதழை பல்கலைக்கழகங்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உள்ள மருத்துவமனைகள் - மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பேருந்து மற்றும் இரயில்வே நிலையங்களில் அவர்களது புகைப்படங்களை பிரசுரித்து இந்த டாக்டர்களிடம் உஷாராக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு செய்யவேண்டும்.

அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கி அவர்கள் வேறு நாட்டிற்குச் சென்று தொழில் புரியாமல் செய்து தடுக்கவேண்டும்.

ஒவ்வொரு சீரியல்கள் மத்தியிலும் அந்த மருத்துவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களது குற்றங்களைப் பற்றி மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எந்தச் சொத்தையும் விற்கவோ வாங்கவோ அனுமதியளிக்க கூடாது.

எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் இவர்களைப்பற்றிய ஒரு பாடத்தை வைத்து மற்ற மருத்துவ மாணவர்களின் மனதில் ஒரு பயத்தை தோற்றுவிக்கவேண்டும்.

இதுதான் அவர்களுக்கு சிறந்த தண்டனையாக இருக்க முடியும். ஒவ்வொரு நொடியும் அவர்கள் மனதுக்குள் புழுங்கி சாக வேண்டும்.

( தவறு அந்த மருத்துவன் மீது மட்டுமல்ல. கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு கள்ள உறவு கொண்ட அந்த கிருஷ்ணவேணி என்ற விபச்சாரிக்கும் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்)

இதனை வாசிக்கின்ற மருத்துவர்களே மருத்துவக் கல்லூரி மாணவர்களே..
பணம் ஈட்டுதலையும் தாண்டி தங்களது தொழிலின் புனிதத்தை உணர்ந்து செயல்படுங்கள்.
மருத்துமனைகளில் வேலைபார்க்கும் செவிலியர்களை சிஸ்டர் என்று மக்களால் பிரியமாக அழைக்கின்றார்கள்
.

கடவுள் எல்லா இடங்களுக்கும் எல்லா நோய்களுக்கும் இறங்கி வந்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்க முடியாததால்தான் மருத்துவர்களின் மூலமாக தன் கடவுள்தன்மையை நிருபித்துக் கொண்டிருக்கின்றான் என்று மக்களால் நம்பப்படுகின்ற அளவிற்கு அவர்கள் தங்கள் மீது கண்ணியத்தை வைத்துள்ளார்கள். தயவுசெய்து அந்த கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள்.

ஒவ்வொரு நோயாளியும் தன்னுடைய குழந்தையாக நினைக்கவேண்டும் மருத்துவர்கள்.


கடவுள் வந்து
காலி செய்யட்டும் இந்த
பாலியல் மோசடி மருத்துவர்களை!


- ரசிகவ் ஞானியார்

7 comments:

Anonymous said...

This story brought me tears. Its an act of child abuse and how insane people are.

Glad you brought awareness through this post.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//pria said...
This story brought me tears. Its an act of child abuse and how insane people are.

Glad you brought awareness through this post. //

நன்றி ப்ரியா.. எங்கே ஆளையே காணோம் ரொம்ப நாட்களாக..?

Anonymous said...

//ஒன்று தெரிந்து கொள்
நீ
மயக்க மருந்து கொடுத்தது
நோயாளிகளுக்கல்ல..

உன் மருத்துவத்தொழிலுக்கு!//

nice point...

Anonymous said...

Very sad to read this

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Very sad to read this //


கடுமையான சட்டம்தான் இந்த சோகம் தீர வழி தோழி..

நன்றி

Anonymous said...

hello - how are you - how your hand now i dn't know how to contact you - your writings good
including kavithai -really nice
yaaro

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//hello - how are you - how your hand now i dn't know how to contact you - your writings good
including kavithai -really nice
yaaro //



நன்றி நண்பா

தேன் கூடு