Friday, June 30, 2006
மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்
தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..? ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன்.
இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள்.
மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப்பற்றி மட்டும்தான் எழுதப்போகின்றேன்.
சரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே..அப்புறம் கருத்துச்சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.
அப்படியென்ன துரோகம் என்கிறீர்களா..? வேற என்ன விபச்சாரம்தாங்க..
தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள்.
நான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:
துபாய்
பகலில்
கட்டிடக்கலை அழகு
இரவில்
கட்டிடக் கீழே அழுக்கு
பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்
எனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்தொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த பவர்ணன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர்சுற்றிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முத்தேர்வே நடத்தியிருக்கின்றேன்.
எப்படி ஆரம்பிச்சது இது..?
ஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்.. பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது.
(அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்;)
சரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..?
இல்லை..அந்தப்பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு..இங்க தனியாத்தான் இருக்கா..
சரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா?
சில சமயம் சொல்லுவா..ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன்
உங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..?
ம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்..
( என்னடா இழவாப் போச்சு..தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா..அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)
ஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க..அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..?
ஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா..என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..
( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது )
அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.
எப்படி சமாளிக்கிறீங்க..வீட்டுக்கு பணம் அனுப்பணும்..இங்க வாடகை - அவளுக்கு செலவு..?
ஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா..இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன்
( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..)
சரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..?அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..?
என்ன செய்ய இப்ப விட்டுட்டேன்..இப்ப அதெல்லாம் இல்ல..என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்
அதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த பவர்ணத்தை..
ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..?
ஊரில் இவருடைய மனைவியைப்பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண்போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
எனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த
ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச்சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும்பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும்பொழுது நம்ப முடியவில்லை.
அவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்துபோய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினாhன்.
ஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா..அப்போ ஒரு போன் வந்திச்சு..நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில்ஒரு பொண்ணு பேசுறா..நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்..அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்..
அதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப்பற்றி விசாரிக்கும்பொழுது பல தகவல்கள் கிடைத்தது
அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று.
பின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டுவிட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்.
அந்தப்பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப்போனார்.
கடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார்.
அவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்..? கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக்கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்?
ஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார் என தெரிந்து கொண்டேன்.
அவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..?
ஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார்
இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார்.
அந்தப்பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது.
இவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக - இறைபக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் - விலைஉயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள்.
ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..?
விடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை.
கணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியுமா அவளுக்கு..?
ஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள்.
இவர்களைப்பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்..? அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா..? அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள்? வாழ்நாள் முழுவதையும் விலைமாதுக்களுடனையே கழித்துவிடவேண்டியதுதானே..?
சமீபத்தில் நான் கண்ட ஒரு அருமையான திரைப்படம் மெர்க்குரிப்பூக்கள். அதில் காமெடி நடிகர் கருணாஸின் கதாபாத்திரம் மிக அருமையாக படைக்கப்பட்டிருக்கும். டெலிபோன் பூத்தில் வேலைபார்க்கும் ஒரு பெண்ணை காதலித்து இறுதியில் அந்தப்பெண் பாதி உடலுக்கு மேல் இயங்காத ஊனமுற்றவள் எனத்தெரிந்தும் அவளையே திருமணம் செய்து கொள்ளுவார். படத்தின் க்ளைமாக்ஸே அந்தக் காட்சிதான். சினிமாவுக்குத்தான் அந்தக்காட்சி சரிவரும் என்றாலும் மிகவும் மனதை உருக்கிய காட்சி. மனைவியை உணர்சிகளை புரிந்து கொள்ளாமல் உடல் உறவுக்கு மட்டும் மனைவியை தேவையாக்கிக் கொள்ளும் கணவன்மார்களுக்கு அந்தக்காட்சி ஒரு சாட்டையடி.
இதில் பெரிய ஆச்சர்யம் என்றால் அந்தப்படத்தைப் பார்த்துவிட்டு சென்னையில் சில வருடங்களாய் பிரிந்து இருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
உடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்துகொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.
சென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச்சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சகா என்ற இளைஞன் ஒரு ரஷ்யப்பெண்ணிடம் விலைபேசிக்கொண்டிருந்தான்.
மாடுகள் விலைபேசுதலில்
கைகள் மூடப்படுகிறது
இந்த
மனித விலைபேசுதலில்
கற்புகள் மூடப்படுகிறதா..?
அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலைபேசிவிட்டானா தெரியவில்லை?
நான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான் .
நானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்றுபார்த்து கவனித்துவிட்டு பின் விலைபேசிக்கொண்டிருந்த அந்த ரஷ்யப்பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருக்கின்றான்
உடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப்படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.
இதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு.
எவளோ ஒருத்தி விதவையாகட்டும்
பரவாயில்லை
மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு
மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன?
- ரசிகவ் ஞானியார்
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
வாப்பா நிலவு ... வா அப்பா நிலவு நன்பரே ...
கல்யாணம் ஆனால் உடனே இப்படி பொருப்புள்ள பதிவா போடனும் ? ... கைய புடிச்சோன்னியே எப்பிடி அப்பு இப்பிடி ... ஆயிடுறீக ....
அருமையான பதிவு ராகவ்.. நவீன காலத்தில் கற்புக்கு புதிய definition குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நம்முடைய புரட்சி எழுத்தாளர்கள். என்ன செய்வது?
கொதித்துப் போயிருக்கிறீர்கள். ஆம், துரோகம் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதுதான். ஆனால் நீங்கள் கூறியதன் மறுபக்கம் அறிவீர்களா? கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் உள்ளூரில் வேறு துணை தேடிக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொது.
அதை தீர்த்துக் கொள்வதில் ஆணுக்கு அவ்வளவு கட்டுப்பாடுகள் இல்லை ஆனால் பெண்ணுக்கு அவை மிகவும் அதிகம் என்பது பற்றித்தான் நான் நான்கு பதிவுகள் போட்டேன். அது தமிழ்மணத்தில் தேனீர் கோப்பையில் புயலாக (storm in அ teacup) உருவெடுத்தது இப்பதிவிற்கு சம்பந்தப்படாதது. ஆகவே இங்கு அது வேண்டாம்.
இதற்கு என்ன செய்யலாம்? பையனை வெளிநாட்டுக்கனுப்பி அவன் அனுப்பும் பணத்தை தன் மற்ற குழந்தைகள், உறவுக்காரர்கள் எல்லோருக்கும் நல் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தலில் செலவிடும் பெற்றோர் யோசிக்க வேண்டும். ஒன்று அவன் தன் மனைவியையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது திருமணம் நாடு திரும்பியதும் செய்து கொள்ள வேண்டும். நடக்கும் காரியமா எனத் தெரியவில்லை.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவருக்கு என்ன நிர்ப்பந்தங்கள் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதில் மற்றவர்கள், கேட்டால் மட்டும் ஆலோசனை தர வேண்டும்.
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை எனது "ஆண், பெண் கற்பு நிலை - 3"ல் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/3.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நிலவு நண்பா,
கை கொடுங்க, அருமையான பதிவு.
பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நானும் என் கண் முன்பே இது போன்றவற்றை கண்டு கடுப்பேறியிருக்கிறேன். என்ன சொல்லி திருத்துவது என்று தெரியவில்லை.
டோண்டு மாமா(!) அவர்களின் பெண்களுக்கான சில அறிவுரைகளை நீங்கள் படித்து இருக்கிறீர்களா?
* தற்சமயம் பெண்கள் தங்கள் இச்சைகளை வெளிப்படுத்துவதில் அதிகம் தயங்குவதில்லை.
* உடல் இச்சையை அபாயமின்றி எவ்வாறு பெண்கள் பூர்த்தி செய்து கொள்வது?அடுத்த பதிவில் பார்ப்போம்.
* இப்படி அப்படி என்று இருந்தாலும் மற்றவர்களுக்கு தெரியாமல் எச்சரிக்கையுடன் நட்ந்து கொண்டால் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
* குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.
* ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.
* ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.
* சிறு குழந்தைகளுக்கும் காம ஆசை வந்ததால்தான் பால்ய விவாகங்கள் தோன்றின!
கூறினால் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
கல்யாணம் பண்ணப்போற பொண்ணுக்கு இப்டியும் ஐஸ் வைக்கணுமாக்கும் :)
கட்டுரையின் பெரும்பகுதிக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லையென்று நினைக்கிறேன்..
//எவளோ ஒருத்தி விதவையாகட்டும்
பரவாயில்லை
மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு
மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன? //
என்னத்த சொல்லறது.. நீங்க சொல்லறது முற்றிலும் சரி..
அருமையான பதிவு இன்னும் எழுதி இருக்கலாம்..
//
பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள்
//
ஊருக்கு தெரிஞ்சா நாறிபோயிடுமே பேரு என்ற பய உணர்ச்சியும் என்று கூட சேர்த்துக்கொள்ளலாம்.
//
"மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்"
//
பேச்சுலர் தப்பு செய்யலாமா ? இல்ல தலைப்பு............
//
பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்
//
உண்மை
எனது நன்பனிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை இவ்வளவுக்கும் அவனுடைய ஃபாதர் இங்கு தான் இருக்கிறார் (இப்போது நான் அவனிடம் பேசுவது கூட இல்லை )
அன்பு தம்பி
மிக முக்கியமான ஒரு விசயத்தை போட்டிருக்கிறாய். ஆனால் எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. இந்த பதிவிற்கு ஏன் ஒருவரும் பின்னூட்டம் போடவில்லை என்று.
???!!!!????
வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். குவைத் போன்ற இடங்களில் பலருக்கு ஊரில் ஒரு மனைவி, இங்கு ஒரு மனைவி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஏதோ இங்கு துபாய் போல சுதந்திரங்கள் இல்லாததாலும், சட்டங்கள் கொஞ்சம் கடுமை என்பதாலும் பலர் தவறு செய்வது தடுக்கப்படுகிறது.
அருமையான பதிவு!
பெண்ணுக்கு கணவன் துரோகம் செய்யும் பொழுது "அவன் ஆம்பளை அப்படி இப்படி தான் இருப்பான்" என்று வியாக்கியானம் பேசியே அதை நியாயப் படுத்துவர் நம்மவர்கள். கணவனுக்கு பெண் துரோகம் செய்யும் பொழுது மட்டும் அவள் பெயர் ________? என்ன நியாயம் இது?
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;"
- பாரதி.
என்னத்த சொல்லி அவர்களை திருத்துவது
//அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலைபேசிவிட்டானா தெரியவில்லை?//
அல்லது தனது மனசாட்சியையும் சேர்த்து விலை பேசியிருப்பான்.
//கட்டுரையின் பெரும்பகுதிக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லையென்று நினைக்கிறேன்..//
அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. படமென்னவோ மும்பை பகுதிகளை நினைவு படுத்துகிறது. படத்தை விடுவோம், விஷயத்தை கிரகிப்போம்
அருமையான பதிவு!
இவனுங்க திருந்தமாட்டாங்க...ரசிகவ்
மரண தண்டனையை விட கொடுமையான தண்டனை இருந்தா அதையும் சேர்த்து கொடுக்கனும..
நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே! நான் பக்ரைன் வந்து 10 மாதங்கள் ஆகிரது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற அக்கிரமங்களை பார்த்து மனம் உறைந்து விட்டது. நான் வரும் முன் வளைகுடா நாடுகள் மிகுந்த கட்டுப்பாடாக என எண்ணி இருந்தேன். அந்த எண்ணம் வந்த உடன் தவறானது. என் கூட பணிபுரிபவர், எனது Project'ல் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர், அவர் சென்று வந்த இடங்களைப்பற்றி பெருமையாக எங்களிடமே பேசுவார். அவர் இங்கே சந்தோஷமாக இருப்பதற்காக தனது குடும்பத்தை இந்தியாவில் வைத்திருக்கிறார்.
i want to share one morething releated to this article.not only gents r doing like this here.so many ladies also doing the same here.the name of their living together policy is Duplicate Families.most of the housemaid have this kind of living style.many housemaids living here without proper visa papers.they need one person to help them secure them.so they r living like this.avanga Original husband duplicate husbandkku call panni en wife a nalla parthukkongannu soldrar...en veetu velaikara ponnukku ithu nadakkuthuppa.write abt this also.i am also livign is UAE..also i am a Lady .
/many housemaids living here without proper visa papers.they need one person to help them secure them.so they r living like this.avanga Original husband duplicate husbandkku call panni en wife a nalla parthukkongannu soldrar...en veetu velaikara ponnukku ithu nadakkuthuppa.write abt this also.i am also livign is UAE..also i am a Lady . //
பெரும்பான்மையாக தனித்து இருக்கும் பெண்கள்தான் அதுபோன்ற தாக்குதலுக்கு ஆளாகுகின்றார்கள். ஆனால் சிலர் தன்னுடைய மனைவி என்று அழைத்து கொண்டு வந்து அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்துகிறார்கள்.
கல்யாண மாப்பிள்ளைக்கு வாழ்த்தும், நல்வரவும்!
நீங்கள் சொல்லுவது போல நடக்கிறது என்பது உண்மையே ஆனாலும், எனக்குத் தெரிந்த வரையில் (8 years), இவ்வழியில் போகும் தமிழர்கள் மிகக்குறைவு. தலைப்பை நீங்கள் NRI என போட்டதால் ஒத்துக்கொள்கிறேன்.
திருந்தாதவர்கள் எங்கிருந்தாலும் திருந்தப்போவதில்லை. வாய்ப்பிருந்தால், சொல்லவா வேண்டும்?
(சில பேர் சொன்னாற்போல நீங்கள் இதைக் கல்யாணத்திற்கு முன்பே விரிவாக எழுதியிருக்கலாம், கேள்வி கேட்க வைத்து விட்டீர்கள் - என்னையும் சேர்த்தே).
Mr.Nilavu, your statement is totally wrong that only NRI's are cheating their spouces. What about people living in Tamilnadu. All of them are uthama purushan or pathini. You should appreciate that all NRI's dedicate their life to their families. Why spouces are not calling their husband to return to home after 2 or 3 years. Because all the spouces need only money.They want to enjoy in the home ( going to cinema, restaurent,staying with her parents and relatives,buying clothes, jewells etc.)If your wife is good, you will never thing about any other girl. If your wife is more arrogant, you will find more affection and love even from prostitute.
Most of the husbands spoils their life only because of torture from the wife. Most of the spouses, they do not like to help husband's parents ,brothers or sisters on financial matter. Once after the marriage they thing that whatever husband eranings only for her and her relatives.
Before making allegation on gents, please ask all the spouces to correct them and let them live with possible earnings of their husband.
My friend is earning 1 lakh per month and his father has got cancer. His father need 3 lakhs for treatment. His wife is torturing him not to give money his parents. She threatens him that if he give, she will commit suicide. What he will do? . Whether he can have sex with his wife with pleasure or he will see any other girl. Tell.
நண்பா,
உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு
ஆரூரான்
இல்லை துபாய்வாசி..எனக்குத் தெரிந்து நிறைய தமிழர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
நன்றி தஞ்சை மீரா..பளிச்சென்று சொல்லியிருக்கின்றீர்கள்.
தெரியும் ஆருரான் அவர்களே..சவுதியில இதற்கு தண்டனையாக தலையை எடுத்துருவாங்கன்னு..துபாய் வந்துபாருங்க..
என்ன சொல்ல.. நல்ல பதிவு...கொபம் புரிகிறது..
அதே நேரம் தவறு செய்பவர்கள் எங்கும் செய்வார்க்ள்...கூடுதல் வாய்ப்புகள் இந்த வெளிநாட்டு பயணங்கள்.
மனநிலைகளில் மாற்றம் வேண்டும்..சந்தர்ப்பம் கிடைக்காதவரை தவறு செய்ய மாட்டான் என்பதை விட்டு விட்டு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதுவே தன்னை நிரூபிக்க வழி என எடுத்துக்கொள்ளும் மனோபாவம் வரவேண்டும்.
எனக்கு மணம் ஆனவர்களைவிட பேச்சிலர்கள்தான் இந்த மாதிரி தவறுகள் அதிகம் செய்வது என படுகிறது...
//எனக்கு மணம் ஆனவர்களைவிட பேச்சிலர்கள்தான் இந்த மாதிரி தவறுகள் அதிகம் செய்வது என படுகிறது... //
இல்லை நண்பா..அது முற்றிலும் தவறு.. பேச்சுலர்களின் விகிதத்தைவிடவும் அதிகமாக மணம் ஆனவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.
//நண்பா,
உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு
ஆரூரான்//
இதற்கு சவுதியில் சரபியா என்றோரு ஏரியாவே இருக்கிறது..அது உங்களுக்கு தெரியாதா என்ன ?!
ந்ல்ல பதிவு நண்பரே!
"எத்தனை பெண் படைத்தான்
எல்லோர்க்கும் கண் படைத்தான்
அத்தனை கண்களிலும்
ஆசை எனும் விஷம்கொடுத்தான்"
என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துவிட்டுப்போனார்
அது விஷம் என்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள்?
உணர்கிறவர்கள்தான் திருந்துவார்கள்
// கோவி.கண்ணன் said...
வாப்பா நிலவு ... வா அப்பா நிலவு நன்பரே ...
கல்யாணம் ஆனால் உடனே இப்படி பொருப்புள்ள பதிவா போடனும் ? ... கைய புடிச்சோன்னியே எப்பிடி அப்பு இப்பிடி ... ஆயிடுறீக .... //
ஆமாம் கோவி கண்ணன் இப்பவே ஐஸ் வச்சாத்தான் முடியும்
//சந்தோஷ் said...
அருமையான பதிவு ராகவ்.. நவீன காலத்தில் கற்புக்கு புதிய definition குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நம்முடைய புரட்சி எழுத்தாளர்கள். என்ன செய்வது? //
நீங்க சொல்றது முற்றிலும் சரிதான் சந்தோஷ் ..தங்களின் வளர்ந்த சூழல் அவர்களை பேச வைக்கின்றது. அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறேதுமில்லை..
// dondu(#4800161) said...
கொதித்துப் போயிருக்கிறீர்கள். ஆம், துரோகம் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதுதான். ஆனால் நீங்கள் கூறியதன் மறுபக்கம் அறிவீர்களா? கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் உள்ளூரில் வேறு துணை தேடிக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொது. //
அவ்வாறும் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் பெருன்பான்மையைப்பற்றி பேசுங்கள்.
// பரஞ்சோதி said...
நிலவு நண்பா,
நானும் என் கண் முன்பே இது போன்றவற்றை கண்டு கடுப்பேறியிருக்கிறேன். என்ன சொல்லி திருத்துவது என்று தெரியவில்லை. //
தனி மனித ஒழுக்கம் இல்லையென்றால் கடுமையான சட்டம்தான் இதற்கு தீர்வு
// Sivabalan said...
என்னத்த சொல்லறது.. நீங்க சொல்லறது முற்றிலும் சரி.. //
நன்றி சிவபாலன்..ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லையே
//பேச்சுலர் தப்பு செய்யலாமா ? இல்ல தலைப்பு............ //
பேச்சுலர் தப்பு செய்யலாம் என்று நான் கூறவில்லையே..ஆனால் திருமணமானவர்கள் மனைவிக்கும் சேர்த்து அல்லவா துரோகம் செய்கின்றார்கள்.ஃ
//மஞ்சூர் ராசா said...
அன்பு தம்பி
வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். குவைத் போன்ற இடங்களில் பலருக்கு ஊரில் ஒரு மனைவி, இங்கு ஒரு மனைவி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஏதோ இங்கு துபாய் போல சுதந்திரங்கள் இல்லாததாலும், சட்டங்கள் கொஞ்சம் கடுமை என்பதாலும் பலர் தவறு செய்வது தடுக்கப்படுகிறது. //
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்
//உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு
ஆரூரான் //
சவுதியிலும் இது போன்ற தறுதலைகள் அதிகம் உண்டு,மாட்டிக்கொள்பவர்களுக்கு மட்டும் தான் தலைவெட்டு.
Post a Comment