Sunday, July 22, 2007

ஹைக்கூ

வரதட்சணை

பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!


தமிழ்ப்பற்று


தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று

"அட
ஆங்கிலம் புரியலப்பா! "

ஏழை
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்

சகுனம்

பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?




- ரசிகவ் ஞானியார்

20 comments:

சினேகிதி said...

கடைசி நச்னு இருக்கு:-)

சிவபாலன் said...

Wow! Great!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சினேகிதி said...
கடைசி நச்னு இருக்கு:-) //

//சிவபாலன் said...
Wow! Great! //


நன்றி சிவபாலன் மற்றும் சிநேகிதி...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சினேகிதி said...
கடைசி நச்னு இருக்கு:-) //

//சிவபாலன் said...
Wow! Great! //


நன்றி சிவபாலன் மற்றும் சிநேகிதி...

லொடுக்கு said...

நாலுமே நல்லாயிருக்குங்க. அந்த ஏழ்மையை அழகா சொல்லியிருக்கீங்க.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//லொடுக்கு said...
நாலுமே நல்லாயிருக்குங்க. அந்த ஏழ்மையை அழகா சொல்லியிருக்கீங்க. //

நன்றி லொடுக்கு

TBCD said...

/*வரதட்சணை

பிச்சை எடுப்பது
குற்றமென்று அறிவித்துவிட்டால்
குற்றவாளிகளாய்
மாப்பிள்ளைகள்தான் நிறைய
மாட்டக்கூடும்!


தமிழ்ப்பற்று


தமிழ்தான் மூச்சு
தமிழ்தான் பேச்சு
தமிழ்தான் ஊற்று
தமிழ்தான் காற்று

"அட
ஆங்கிலம் புரியலப்பா! "

*/
இது கொஞ்சம் பெருச இருக்கு..அதனால இது ஹைக்கூ இல்லை ஆன கவுஜைய ஏத்துக்குறோம்
கடைசி ஹைக்கூ சூப்பர்.. மூனாவது புரியவில்லை...

Unknown said...

உங்கள் ஹைக்கூவின் களனாக சமூக அவலங்களை எடுத்திருப்பது மிக நன்றாயிருக்கிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சுல்தான் said...
உங்கள் ஹைக்கூவின் களனாக சமூக அவலங்களை எடுத்திருப்பது மிக நன்றாயிருக்கிறது. //

நன்றி சுல்தான்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இது கொஞ்சம் பெருச இருக்கு..அதனால இது ஹைக்கூ இல்லை ஆன கவுஜைய ஏத்துக்குறோம்
கடைசி ஹைக்கூ சூப்பர்.. மூனாவது புரியவில்லை//

மூணாவது கவிதை புரியலையா..? உங்களுக்கு லொடுக்கு அவர்களின் விமர்சனத்தையே பதிலாக்குகின்றேன்..

//லொடுக்கு said...
நாலுமே நல்லாயிருக்குங்க. அந்த ஏழ்மையை அழகா சொல்லியிருக்கீங்க. //

Anonymous said...

வரதட்சிணை ஹைக்கூ ரொம்ப நல்லாருக்குங்க. நானும் பல தடவை இப்படி நினைத்ததுண்டு. ஹைக்கூ அனைத்தும் அருமையா சொல்லியிருக்கீங்க.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தமிழ்பிரியை said...
வரதட்சிணை ஹைக்கூ ரொம்ப நல்லாருக்குங்க. நானும் பல தடவை இப்படி நினைத்ததுண்டு. ஹைக்கூ அனைத்தும் அருமையா சொல்லியிருக்கீங்க. //


நன்றி தமிழ்ப்பிரியை...

மாசிலா said...

//ஏழை :
மகள் பூப்பெய்திவிட்டாள்
தாய்க்கும் இனி...
தாவணிதான்//

அதாவது, ஏழ்மை காரணமாக, புதுத்துணி வாங்க காசில்லாத காரணத்தால், தனது புடவையையே கிழித்து பாதியை தாவணியாக தன் மகளுக்கு கொடுக்கிறார். மீதியை அவரும் (தாவணியைப் போல்) கட்டிக்கொள்கிறார். அப்படித்தானே நிலவு நண்பன் ஐயா?

உயர்ந்துவிட்டீர்கள் நீங்கள்.

மூன்று வரிகளில் மனதை பிழிந்துவிட்டீர்கள்.

இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு முன் ஏழ்மையை பற்றி ஒருவர் ஒரு ஹை கூ எழுதி இருந்தார். என் மனதை விட்டு அகலாத அது இதோ :

"தரையெங்கும் வெள்ளிக்காசுகள்
வானத்தில்
முழு நிலா".

//சகுனம் :
பூனை செத்துவிட்டது!
எந்த மனிதன்...
குறுக்கெ சென்றானோ?//

சிரிப்பு.

நன்றி நிலவு நண்பன்.

Thamizhan said...

சுருங்கச் சொல்லி
விளங்க வைக்க
சிறந்த வழிதான்
மெளணம்.

Jazeela said...

அந்த 'சகுனம்' அருமை.

Anonymous said...

Arumaiyana Haikkoo...
Varadhatchanai... SAgunam... Aezhmai.... ithai solliyiruoppathu migavum arumai.. Great work...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சனத்திற்கு நன்றி மாசிலா, ஜெஸிலா மற்றும் தமிழனுக்கு

priya said...

sagunam kavithai super sir.

priya said...

sagunam kavithai super sir.

priya said...

sagunam kavithai super sir.

தேன் கூடு