Friday, September 15, 2006

வலைப்பதிவாளனின் காதல் கவிதை

என் ப்ரியமே
ப்ளாக்ஸ்பாட்டே


உன்
மௌனப்பார்வைகள் எனக்கு
மறுமொழிகளைத் தருகின்றது
நீ பேசாமல் இருந்தால் கூட - எனக்கது
பழமொழியாய்த் தெரிகின்றது

நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே
என்னை
அனாதையாக்கி விடாதே!

சிலையே வலையே
மழலைத் தமிழாகி
மணமாகி
தமிழ்மணத்தில் என்றும் வருவதற்கு..

இதயத்தில்
காதல் வலை பதிந்து விடு!


இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!

- ரசிகவ் ஞானியார்

7 comments:

ஆவி அம்மணி said...

//நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே//

சில பேர்களை ஆவியாகவும் ஆக்கிவிடுகிறது உன் மௌனம்!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி ஆவி.. நம்மதான் ஆவியை கண்ணால பார்க்குறோம்ல..நம்கிட்டேயேவா :)

Anonymous said...

very nice.

Anonymous said...

Migavum arumaiyana kavithai :-) Very good!!

Mohan Madwachar said...

என் வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி. உங்கள் படைப்புகளும் நன்றாக இருக்கிறது ஞானி.

Anonymous said...

"இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!"

- paavam dondo rasikav...

Anonymous said...

//இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!//
:)) அது சரி, போலி வந்தா பிரச்ச்னை இல்லை.. ஒரிஜினலே வந்தால் ?? ;)

தேன் கூடு